24 special

செந்தில் பாலாஜியின் கரூர் கும்பல் இழுத்துவைத்த வினைக்கு திரும்பிய கர்மா..!

senthil balaji, gayathri
senthil balaji, gayathri

ஐந்து கட்சிகள் மாறி வந்த செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த உடன் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டார். அதோடு அவர் சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்தில் மிகவும் செல்வாக்கு மற்றும் முக்கியஸ்தராக வலம் வந்தார். பிறகு தேர்தலில் திமுக ஜெயித்தவுடன் அமைச்சராகவும் பொறுப்பேற்கப்பட்டார். அதுவும் ஒரு பொறுப்பல்ல இரண்டு பொறுப்புகளைக் கொண்ட அமைச்சர் என்ற பெருமையையும் தாங்கிக் கொண்டிருந்தார். அப்படி அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கொங்கு மண்டலம் திமுக முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்தார். கரூர் பகுதியில் நீண்ட காலமாக அரசியல் செய்து வந்த திமுக முக்கிய புள்ளிகளையே ஓரம் கட்டி குறுகிய காலத்தில் தலைமைக்கு நெருக்கமான முக்கிய புள்ளியாக உயர்ந்தார்.


எல்லாவற்றிற்கும் மேலாக முதல்வர் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவராக மாறிய காரணத்தினால் அமைச்சர்கள் செந்தில் பாலாஜியை யாரும் நெருங்க முடியாத படியான உயரத்திற்கும், அதாவது சீனியர் திமுக நிர்வாகிகளும் அவரை எதுவும் சொல்ல முடியாத அதிகார உயரத்திலும் உயர்ந்தார்.இப்படி கரூர் பகுதியில் ராஜாவாகவும் திமுகவின் முக்கிய படைத் தளபதி என்ற பெயரையும் பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை முதலில் ரெய்டு நடத்தியது அந்த ரெய்டின் முடிவில் கைது செய்யும் அளவிற்கு சென்றது சூழல்! இறுதியாக அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தனி அறை என கொடுக்கப்பட்டு சிறையிலும் ராஜாவாக இருக்கிறார் இருப்பினும் கூண்டுக்குள் இருந்தாலும் அது சிறை எப்படியாவது வெளிவர வேண்டும் என்பதற்காக ஜாமினுக்காக நீதிமன்ற நீதிமன்றமாக செந்தில் பாலாஜியின் தரப்பினர் அலைந்தனர்.

இறுதியில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது, அந்த அமர்வில் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜாமீனில் விட முடியாது எனவும் நீதிமன்ற காவலில் தான் செந்தில் பாலாஜி இருப்பார் எனவும் நீதிபதி அல்லி தீர்ப்பளித்தார். இதனால் செந்தில் பாலாஜி தரப்பினர் மிக வேதனையில் இருப்பதாகவும் அதுவும் குறிப்பாக அமைச்சராக செந்தில் பாலாஜி கரூரில் வலம் வந்து கொண்டிருந்த பொழுது அதிகார தோணியில் சுற்றி வந்த அனைவரும் தற்போது ஓரங்கட்டப்பட்டு வருவதாகவும், அண்ணன் எப்பொழுது வெளியில் வருவார் அண்ணன் வருகைக்காக கரூர் கேங் காத்துக் கொண்டிருக்கிறது எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் 'அண்ணன் இல்லாமல் எங்களால் இருக்க முடியவில்லை என புலம்பும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 'நீதிமன்றம் பாஜகவின் அலுவலகமாக செயல்படுகிறது' என்று தனது ஆதங்கத்தையும் வருத்தத்தையும் போஸ்டர்களாக அச்சடித்து ஒட்டியும், சமூக வலைத்தளத்தில் கமெண்ட்களாகவும் பறக்க விட்டு வருகின்றனர். 

குறிப்பாக கரூர் மாவட்டத்தின் திமுக இளைஞரணி அமைப்பாளர் வெங்கமேடு சக்திவேல் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் நீதிமன்றம் பிஜேபியின் அலுவலகமாக செயல்படுகிறது என்று பதிவிட்டு தனது கவலையை வேறு விதமாக காட்டியுள்ளார். இதன் பின்னணியை விசாரித்த பொழுது செந்தில் பாலாஜி இருந்தவரை கரூர் கும்பல் என்ற பெயரில் டாஸ்மாக் கடைகளில் வசூல் நடந்ததும் அதை வைத்து பெரிய கூட்டமே அங்கு பிழைத்துக் கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது.  தற்போது செந்தில் பாலாஜி இல்லை! இதனால் அப்பொழுது பிழைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது வருமானம் இல்லாததால் எப்பொழுது செந்தில் பாலாஜி வருவார் என காத்துக் கொண்டிருப்பதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளது. இதனை திமுக தலைமையும் கண்டு கொள்ளாமல் இருப்பது அவர்களை சற்று கோபப்படுத்தியுள்ளது. இன்னும் சில அரசியல் விமர்சகர்களிடம் விசாரித்தபோது அதிகாரிகள் ரெய்டுக்கு வரும்போது அவர்களிடம் அத்துமீறியதன் வினையை இப்பொழுது கரூர் கேங் அனுபவிக்கிறது என தங்களது கருத்தை தெரிவித்தனர்.