24 special

ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக கருப்பு சிவப்பு கொடியுடன் வந்த திமுகவினர்..... தெறிக்கவிட்ட திருநெல்வேலி காவிகள்...!

annamalai, mk stalin
annamalai, mk stalin

தற்பொழுது நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் 50 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன, இந்த நிலையில் நேற்று மேலும் ஒன்பது புதிய வந்தே பாரத் ரயில்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி, அதில் இரண்டு ரயில்கள் தமிழகத்திற்கு, குறிப்பாக அதில் ஒரு ரயில் முக்கியமான ரயில். சென்னை முதல் நெல்லை வரை செல்லும் இந்த ரயில் தமிழகத்தின் வட மூலையிலிருந்து தென் மூலையை இணைக்கும் முக்கிய ரெயிலாகும். இந்த ரயில் வரும் வழியில் எல்லாம் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை என முக்கிய நகரங்களை இணைப்பது மட்டுமல்லாமல் சென்னை சென்று வரும் மாணவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு இது பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக பயண நேரம் குறையும் மற்றும் பல வசதிகள் இருக்கும் என்பதால் இந்த ரயில் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டது முதல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது என அனைத்து தருணங்களிலும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. 


நேற்று இந்த ரயில் வரும் வழியெல்லாம் மக்கள் நின்று செல்பி எடுப்பதும், இந்த ரயிலுக்கு பூத்தூவி வரவேற்பதும் என தமிழக மக்கள் இந்த வந்தே பாரத் ரயிலை கொண்டாடினார்கள். இந்த நிலையில் இந்த வந்தே பாரத் ரயிலை துவக்கி வைப்பதற்காக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் இந்த ரயில் வழித்தடத்தை துவங்கி வைத்து பயணம் செய்தனர். இது மட்டுமல்லாமல் இந்த ரயிலில் திமுக கூட்டணியின் எம்பிக்கள்  எம்பி திருமாவளவன், எம்பி சு.வெங்கடேசன், எம்பி ரவிக்குமார் ஆகியோர் இந்த ரயில் வரவேற்பு நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டனர். மேலும் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கூட இந்த வந்தே பாரத் துவக்கவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

இப்படி வந்தே பாரத் துவக்க விழா நிகழ்ச்சியை அனைவரும் கொண்டாடும் வேளையில் திருநெல்வேலி திமுகவினரை காவிகள் ஓடவிட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் வந்தே பாரத் ரயில் வரும் சமயத்தில் அங்கு கருப்பு சிவப்பு திமுக கொடியுடன் வந்த உடன்பிறப்புகள் அங்கு வந்தே பாரத் ரயில் கிடைக்க திமுக அரசு தான் காரணம் என்பது போன்ற கோஷங்களை எழுப்புவதற்காக அங்கு தயாராக இருக்க அப்போது அங்கு கூடிய பாஜகவினர் இந்த ரயில் மோடி கொண்டு வந்தது, மத்திய அரசு நிதியில் ஓடுகிறது இதற்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்  என கேட்க? இங்கு நடப்பது தமிழகத்தில் எங்கள் ஆட்சி என திமுகவினர் சொல்ல இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு இருந்த பாஜகவினர் அனைவரும் ஒன்று கூடியுள்ளார்கள்.

திமுகவினராவது கையில் கொடி வைத்திருந்தார்கள் ஆனால் பாஜகவினர் கையில் கொடியில்லை வெறும் கோஷங்கள் குறிப்பாக மோடி மோடி என்ற கோஷத்தினாலே திருநெல்வேலி ஜங்ஷனை அலற விட்டுள்ளனர். இவர்கள் ஆக்ரோஷமாக கோஷமிடுவதை பார்த்த திருநெல்வேலி திமுகவினர் 'இது என்னடா வம்பா போச்சு, ஏதோ நம்ம பாட்டுக்கு வந்தோம் கொடி பிடிச்சிட்டு முதல்வர் வாழ்க! என்று கத்திட்டு போலாம்னு பார்த்தா இங்க எல்லாம் காவி கூட்டம் அதுவும், தீவிர காவி கூட்டமா இருக்கு' என நினைச்சு சிறிது நேரத்தில் அங்கிருந்து ஒவ்வொருவராக அலறி அடித்து ஓட துவங்கினர். இப்படி திருநெல்வேலி திமுகவினரை தெறிக்க விட்ட திருநெல்வேலி காவிகளின் சம்பவம்தான் இணையம் முழுவதும் வைரல் ஆகி வருகிறது.