பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் விசிக தலைவர் திருமாவளவன் அவர்களுக்கும் இடையே தற்போது நேரடியாக வார்த்தை போர் மூண்டு இருக்கின்றது. அந்த வகையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவிப்பதில் விசிக தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு அதில் பாஜக தொண்டரின் மண்டை உடைக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு மிகப்பெரிய அளவில் பாஜக எதிர்ப்பு தெரிவிக்காமல், அதற்கு பதிலாக அவர்கள் திருந்தி வருவார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம். பாஜக தான் முழுமையாக அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தத்தை பின்பற்றி வருகிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.மேலும் இது குறித்து திருமாவளவனுடன் விவாதம் செய்ய தயார் என சவால் விடுத்திருந்தார்.
அதன் பிறகு தன்னுடைய சப்-ஜூனியர் ஐ அனுப்பி வைப்பதாக திருமாவளவன் பதில் கொடுத்து இருந்தார். இந்நிலையில் விசிக நிர்வாகி ஒருவர் அண்ணாமலைக்கு போன் செய்து எப்போது வரலாம் என கேட்க, உள்துறை அமைச்சர் வருவதால் பிஸியாக இருப்பேன். 25ஆம் தேதி போன் செய்துவிட்டு இருபத்தி ஆறாம் தேதி வாருங்கள் விவாதிக்கலாம் என குறிப்பிட்டிருந்தார்.பிறகு 24ம் தேதியான இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சரியான பதிலடியை கொடுத்து உள்ளார் அண்ணாமலை.
அண்ணாமலையின் பதிவு அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுடைய இடதுகை வலதுகை அனைவரும் நம்முடைய அலுவலகத்துக்கு வந்து அவர்கள் விரும்பும் புத்தகங்களை 26 ம் தேதி மதியம் 12 மணிக்கு கொடுக்கலாம்.
நம் அலுவலகத்தில் தயாராக இருக்கக்கூடிய புத்தகங்களையும் வாங்கி செல்லலாம். அதன் பின்பு அண்ணன் தொல் திருமாவளவனிடம் நேரத்தையும், தேதியும் அவர்கள் கூட்டாக அமர்ந்து முடிவு செய்து சொல்லட்டும், தயாராக சொல்லும் இடத்திற்கு வருகின்றேன்.
அனைத்து விடுதலை சிறுத்தை கட்சியின் சகோதர சகோதரிகளை நமது தமிழக பாஜக அலுவலகத்திற்கு 26 ஆம் தேதி வரவேற்கின்றேன், உங்களிடம் புத்தகம் இருந்தால் கொடுப்பதற்கு!
தலைப்பு: அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்ற கூடிய தலைவர் பாரத பிரதமர் மோடி அவர்கள்!- இவ்வாறு அதில் பதிவிட்டு உள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலையின் அணுகுமுறையும் அவருடைய திறமையும், அறிவுக்கூர்மையும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும் இவ்வாறு ஒரு ஆரோக்கியமான விவாதம் நடந்தால் அம்பேத்கர் அவர்களின் முழு சித்தாந்தத்தையும் கடைபிடிப்பது பாஜக என்பதை நிரூபணம் செய்து விடுவார் என்றே பலரும் தெரிவித்து அண்ணாமலைக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.