Tamilnadu

10 லட்ச ரூபாய் காண்ட்ராக்ட்ட இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டியேமா?

krama sabai koottam
krama sabai koottam

தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபை கூட்டம் தற்போது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தை பெற்று வருகிறது, அதிலும் குறிப்பாக இரண்டு பெண்கள் தெரிவித்த கருத்துக்கள் சமூகவலைத்தளத்தில் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளன.


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செங்காடு ஊராட்சி பகுதியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மக்கள் குறைகளைக் கேட்டறிந்தார்.அதனைத் தொடர்ந்து மேடையில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், 600 கிராம ஊராட்சிகளில் இந்த ஆண்டு கிராம செயலகங்கள் உருவாக்கப்படும்.

அரசின் திட்டங்களை கடைகோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீடித்த வளர்ச்சிப் பணிகளை உருவாக்க திட்டம் வகுத்துள்ளோம். செங்காடு, கண்டமங்கலம் பகுதிகளில் மக்கள் கோரிக்கை விடுத்த சாலை, கழிவுநீர் கால்வாய் அமைத்துத் தரப்படும் என்று குறிப்பிட்டார். மேலும், நான் கொடுத்த உறுதி மொழி நிறைவேற்றப்பட்டுள்ளதா என மீண்டும் வந்து பார்வையிடுவேன் எனவும் தெரிவித்தார்.  அதையடுத்து கிராம மக்கள் அருகில் சென்று குறைகளை கேட்டார்.

அப்போது பெண் ஒருவர் தான் துப்புரவு பணி செய்வதாகவும் மாதம் 3600 ரூபாய் மட்டுமே கொடுக்கிறார்கள் என குறிப்பிட்டார், அதன் பிறகு இந்த அரசாங்கத்தால் ஒரு பயனும் இல்லை என அந்த துப்புரவு பணியாளர் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த முதல்வர் உங்கள் கோரிக்கையை சரி செய்கிறேன் என கூறி அங்கிருந்து விலகி சென்றார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது முதல்வரிடமே இந்த ஆட்சியில் எங்களுக்கு எந்த பயனும் இல்லை என தெரிவித்த துப்புரவு பணியாளரிடம் இருந்து முதல்வர் மக்களின் தற்போதைய எண்ணங்களை தெரிந்து கொள்ளவேண்டும் என எதிக்கட்சிகள் விமர்சனம் செய்கின்றனர்.

அதே நேரத்தில் நெட்டிசன்கள் பிரெண்ட்ஸ் பட வடிவேலு மீம்ஸ்சை போட்டு 10 லட்சம் ரூபாய் ப்ராஜெக்டை இப்படி சல்லி சல்லியா நொறுக்கிடீங்களே என கிண்டல் அடித்து வருகின்றனர். வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.