கடந்த வாரத்தில் அதிமுக பாஜக கூட்டணி முறிவு பல மூத்த அரசியல்வாதிகளை கேள்வி கேட்க வைத்தது. அண்ணாமலை வயது குறைவு என்பதனால் தேவையில்லாமல் அதிமுக கூட்டணியை முறித்துவிடுகிறார், அதிமுக கூட்டணியே ஏன் இப்படி தமிழக பாஜக தலைமை பகைத்துக் கொள்ள வேண்டும்? பிரதமர் மோடி மூன்றாவது முறை பிரதமராக வேண்டுமென்றால் அதற்கு தமிழ்நாட்டில் அதிமுக துணை வேண்டும்! ஏன் இப்படி இவர்கள் செய்கிறார்கள்? இதற்கெல்லாம் காரணம் அரசியல் அனுபவம் இல்லை! என்பது போன்ற பல விமர்சனங்கள் அண்ணாமலை மீது வைக்கப்பட்டன. ஆனால் இது எல்லாவற்றிற்கும் பின்னணியில் அண்ணாமலையின் தனிப்பட்ட பிளான் இருக்கிறது அது போக போக உங்களுக்கே தெரியும் என அண்ணாமலை ஆதரவாளர்கள் அன்றே கூறினார்கள். மேலும் கமலாலயத்தில் உள்ள ஒரு சிலரிடம் இதை பற்றி கேட்டபொழுது 'அண்ணாமலை யோசிக்காமல் எதையும் செய்ய மாட்டார்? நீங்கள் வேண்டுமானால் பொறுத்திருந்து பாருங்கள் வரும் சில நாட்களில் இதற்கான முடிவு தெரியும்' என ஆணித்தரமாக கூறினார்கள்.
அப்படி அவர்கள் கூறியபடியே கூட்டணி முறிவுக்குப் பிறகு நடக்கும் சில நிகழ்வுகள் அண்ணாமலை யோசித்தது போலவே நடந்து வருகிறது. தற்பொழுது புதிய நீதிக் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடரும் என புதிய நீதிக் கட்சிகள் தலைவர் ஏ சி சண்முகம் அறிவித்துள்ளார். ஏசி சண்முகம் இப்பொது மோடி தான் பிரதமராக வர வேண்டும் என உறுதியாக இருப்பதால் பாஜக பக்கம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து வேலூரில் அவர் பேட்டி அளிக்கும் போது 'புதிய நீதிக்கட்சி கட்சி சார்பில் மருத்துவ முகாமை துவங்கி வைத்து பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொழுது ஏசி சண்முகம் பேசியதாவது 'வரும் தேர்தலில் யார் பக்கம் நான் நிற்க வேண்டும் என்பதே முக்கியம். அந்த வகையில் பிரதமர் மோடி நாட்டுக்கு மீண்டும் பிரதமராக வர வேண்டும், அதற்காகவே பாஜகவிற்கு ஆதரவு தருகிறேன்' என ஏ சி சண்முகம் கூறியுள்ளார். மேலும் அவர் பாஜக கூட்டணியே நல்லது என முடிவு எடுத்து பாஜக பக்கம் நிற்க போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத்தான் அண்ணாமலைக்கு நெருக்கமானவர்களும் கூறுகிறார்கள், தற்பொழுது பாஜக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல உறுதியாகிக் கொண்டே வருகிறது. இப்பொழுது முதல் ஆளாக பிரதமர் மோடி தான் பிரதமர் வேட்பாளர் அவர்தான் பிரதமராக வரவேண்டும் என ஏசி சண்முகம் அறிவித்து விட்டார். அடுத்தபடியாக இன்னும் சிலர் பிரதமர் மோடியை அறிவித்து ஒவ்வொருவராக பாஜக பக்கம் தன்னுடைய கூட்டணியை உறுதிப்படுத்துவார்கள், தற்பொழுது மக்கள் மத்தியில் கூட பிரதமர் மோடி எதிர்ப்பு அலை என்பது இல்லவே இல்லை, குறிப்பாக தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு மோடிக்கு எதிரான அலை என்பதை உருவாக்கி அதில் திமுக வெற்றி பெற்றது! ஆனால் இந்த முறை அது செல்லாது என திமுக கூட்டணிக்கே தெரியும் இப்படி மக்கள் ஆதரவும் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக வரவேண்டும் என நினைக்கும் ஏசி சண்முகம் போன்ற கட்சி தலைவர்களின் ஆதரவும் இருக்கும் காரணத்தினால் கண்டிப்பாக அண்ணாமலை கணக்கு போட்டது போல் தமிழகத்தில் குறைந்த பட்சம் 15 எம்பிக்களாவது பாஜக தரப்பில் வெற்றி பெறுவார்கள் என அடித்து கூறுகிறார்கள். அண்ணாமலை துவங்கி வைத்த அரசியல் சதுரங்கம் மெதுவாக பாஜகவை வெற்றியை நோக்கி இழுத்துச் செல்கிறது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.