திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 5 வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது திமுகவினர் இடையில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 5ம் தேதி முதல் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்யத் தொடங்கினர். முன்னதாக சட்ட விரோத வெளிநாட்டு முதலீடு புகாரில் அவரது ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை முடக்கியது. அதனை தொடர்ந்து இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வந்தன. நேற்று முன்தினம் அவரது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்தனர். அப்போது அவரது வீட்டிற்கு அமலாக்கத்துறையினர் வந்திருந்தனர். மேலும் பணத்தை எண்ணுவதற்கு மெஷினை கையில் எடுத்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில் இன்று 5வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனையை கையில் எடுத்துள்ளனர்.
சென்னை அடையாற்றில் உள்ள அவரது வீடு, தி. நகரில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், பாரத் பல்கலைக்கழகம், பாலஜி மருத்துவ கல்லூரி, சவீதா கல்வி குழுமம் ஆகியவற்றிலும் ரெய்டு தொடர்ந்து நடக்கிறது. வரி ஏய்ப்பு புகாரில் ஜெகத்ரட்சகனுக்கு தொடர்பான பல இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.தற்போது சோதனையில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்லுரியில் உள்ள பிணவறையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் சோதனையில் கிடைத்ததாகவும். முக்கிய ஆவணங்களும் கிடைத்ததாகவும் தகவல் வெளிவந்தன. தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வந்து கொண்டிருக்கின்றன. ஜெகத்ரட்சகனின் மருமகன்கள் வீடு, அலுவலகங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சோதனையில் பல கோடி ரூபாய் பணம், கிலோ கணக்கில் தங்கம், வெளிநாட்டு ஆடம்பர பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படுள்ளது. ஜெகாதாரச்சகனின் மக்களுக்கு சொந்தமான வீட்டில் இருந்து ரூ.2.45 கோடி மதிப்புள்ள 7 வெளிநாட்டு வாட்ச்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.
இந்த சோதனையில் என்னவெல்லாம் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்து வருமானவரித்துறை இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும்,பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூடிய விரைவில் சோதனை குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜெகத்ரட்சகனின் வீட்டில் இருந்து 2 பைகள் கைப்பற்றப்பட்டதாகவும் அந்த பைகளில் பல கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் முதலீடு செய்தது தொடர்பாக கோடி கணக்கில் 2020ம் ஆண்டு அமலாக்கத்துறையினர் சோதனை தொடங்கப்பட்டது. இந்நிலையில் கூடுதல் அதிகாரிகள் டெல்லியில் இருந்து வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே டெல்லியில் இருந்து வருமான வரித்துறை ஆணையர் சுனில் குப்தா சென்னை வந்து சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருபக்கம் திமுவினர் 5வது நாளாக தேடியும் இதுவரை ஏதும் கிடைக்வில்லை என்றும் மறுபக்கம் ஜெகத்ரட்சகன் வசமாக சிக்கிக்கொண்டார் என்றும் பேச்சு எழுந்து வருகிறது. என்னதான் இருந்தாலும் இதுவரை சோதனையில் கிடைத்தது வைத்து பார்க்கும் போது திமுக எம்பி சிக்கிக்கொண்டார் மீள்வது கஷ்டம் என்று கருத்துக்களை தெரிவிகின்றனர்.