முதல்வரின் மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சனாதனத்திற்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தார். அவர் தெரிவித்த இந்த கருத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது. டெல்லியில் I.N.D.I.A கூட்டணியின் தேசிய தலைவர்கள் மத்தியிலும் இது பெரும் கோபத்தை ஏற்படுத்தியதோடு இதற்கான கண்டனங்களை அவர்கள் முன் வைத்தனர். அதுமட்டுமின்றி தமிழகத்தில் சனாதன தர்மம் குறித்து தவறாக பேசிய உதயநிதி ஸ்டாலின் மீதும் அவர் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீதும் சரமாரியான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. ஒரு அமைச்சர் இது போன்ற கருத்தை தெரிவிக்கலாமா என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது இந்த நிலையில் தமிழக பாஜக தரப்பில் இருந்து ஒரு அமைச்சர் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டியது என்ற கருத்தை முன்வைத்துக் கொண்டிருக்கிறார், இதனை ஒரு அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர் பாபு அதே மேடையில் இருந்தது மட்டுமின்றி இந்த கருத்துக்கள் அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் உதயநிதி பேசுவதை ரசித்து கொண்டிருக்கிறார்.
இதனால் அமைச்சர் சேகர்பாபு அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் தகுதியை இழந்து விட்டார் உடனடியாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி போராட்டத்திலும் பாஜக ஈடுபட்டது. அதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் தரப்பிலிருந்தும் அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கு தொடர்பாக இவ்விருவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற நோட்டையும் சுப்ரீம் கோர்ட் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மாள் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் விதத்தில் அமைச்சர் சேகர்பாபுவிற்கு சஷ்டியப்த்தபூர்த்தி விழா எனப்படும் மணிவிழா கொண்டாடியுள்ளார்.. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓத மங்கள வாத்தியங்கள் முழங்க அமைச்சர் சேகர்பாபு தனது மனைவி சாந்தி அவர்களுக்கு திருமாங்கல்யத்தை அணிவித்தார். மேலும் இந்த கோவிலில் சிறப்பு ஹோமம் செய்து மணிவிழா நடத்துபவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஒரு ஐதீகமாக கருதப்படுகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்துகொண்டு இந்த சனாதன ஒழிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் எழும் பிரச்சினையால் அமைச்சர் பதவிக்கு பங்கம் வந்துவிடுமோ என்றும் அதன் காரணமாக தனது அறநிலையத்துறை அமைச்சர் பதவிக்கு தொடர்ந்து ஆபத்துகள் வந்துவிடுமோ என அஞ்சி தான் திருக்கடையூர் கோவிலில் அறுபதாம் கல்யாணமான சஷ்டியப்த பூஜையை நடத்தி உள்ளார் என சில விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதாவது சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து விட்டு இந்து சமய அறநிலையதுறை அமைச்சராக எப்படி தொடரலாம்” என உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் இன்று இந்த நாடகம் எனவும் கூறுகின்றனர்.எப்படியும் உதயநிதி இந்த சனாதன விவகாரத்தில் இருந்து தப்பி விடுவார், நமது அமைச்சர் பதவிதான் இதில் மாட்டிக்கொள்ளும் என அமைச்சர் சேகர்பாபு நாளை நீதிமன்ற விவகாரம் வந்த இந்த அறுபதாம் கல்யாண விவகாரத்தை வைத்து தப்பித்துக்கொள்ளலாம் என திருக்கடையூரில் இந்த அறுபதாம் கல்யாண நிகழ்ச்சி செய்துள்ளதாகவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளது.. 'இதையெல்லாம் பார்த்தால் கிறித்துவ மதத்தை பின்பற்றும் சனாதன ஒழிப்பு போராளி சின்ன முதல்வர் கோவித்து கொள்ள மாட்டாரா?' என பாஜகவின் நிர்வாகி செல்வகுமார் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.