24 special

பொய் வாக்குறுதி கொடுத்த திமுகவை தொங்கவிட்ட அண்ணாமலை....நீலகிரியில் செய்த சம்பவம்!

annamalai , a rasa
annamalai , a rasa

தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலை மக்களிடம் மாற்றத்தை கொண்டுவர கடந்த ஜூலை 28ம் தேதி ராமநாதபுரத்தில் "என் மண் என் மக்கள்" என்ற தலைப்பில் பாதயாத்திரையை தொடங்கினார். ஆரம்பம் முதலே அண்ணாமலைக்கு வரவேற்பு அளித்து வந்த பொதுமக்கள். அண்ணாமலையின் பேச்சுக்களை காண நாளடைவில் பெரும் திரளாக குவிந்தனர். தற்போது இரண்டாம் கட்டமாக கொங்கு மண்டலமான கோயம்பத்தூரில் பாத யாத்திரை தொடங்கியுள்ளது. நேற்று நீலகிரியில் தொடங்கிய யாத்திரையில் திமுகவை பொளந்து கட்டியுள்ளார்.நேற்று ஊட்டியில் பாதயாத்திரைக்கு வந்த அண்ணாமலையை மக்கள் அலைகடலென திரண்டு வந்து மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். உதகை சேரிங்கிராஸில் பாதயாத்திரையை தொடங்கிய அவர், கமர்சியல் சாலை வழியாக அப்பர் பஜார், மெயின் பஜார், பேருந்து நிலையம், லோயர் பஜார் வழியாக ஏடிசி சுதந்திர திடலில் நிறைவு பெற்றது.


இதில் பேசிய அண்ணாமலை: சமீபத்தில் டெல்லியில் நடந்த ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசுகளை வழங்கினார். அந்த பரிசு பொருளில் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை டீ தூள் இடம் பெற்றிந்தது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்திருந்தார். தொடர்ந்து, திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது நீலகிரி மாவட்டத்தில் 10000 குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார்கள், இதுவரை எத்தனை வீட்டிற்கு மின்சாரம் வழங்கினார். தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சியில் வசூலிக்கப்படும் வரித்தொகையை குறைப்பதாக கூறினர். இதுவரை எந்த ஒரு சிறு கடைகளுக்கும் சிறு தொகையை கூட குறைக்கவில்லை. மேலும், படுகர் இன சமுதாய மக்களுக்கு ST அந்தஸ்தை பெற்று தருவதாக கூறியது ஆனால் ஏதும் நிறைவேற்றாமல் இருக்கின்றது என திமுக அரசை குற்றம் சாட்டினார்.

நீலகிரி மாவட்ட மக்கள் பிரச்சினைக்காக, பாஜக எப்போதும் களத்தில் போராடியிருக்கிறது. டிசம்பர் 2021 - Sipcot அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த நினைத்த தமிழக அரசுக்குத் துணை நின்ற, இந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக விவசாயிகளை சந்தித்துப் போராட்டம் நடத்தி, விவசாய நிலங்களை பாதுகாத்தது பாஜக. இந்த நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, உள்ளூர் மக்களின் பிரச்சினையை மக்களவையில் பேசாமல், இந்து தர்மம், சனாதனம், மணிப்பூர் கலவரம், வெளி மாநில, வெளி நாடுகளின் பிரச்சினைகளை மட்டும் பேசி வருகிறார். இதனால் நீலகிரி மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என அவர் காரசாரமாக கேள்விகளை எழுப்பினர். வரும் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இங்கு இருக்கும் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு நிச்சயம் காணப்படும் என தெரிவித்தார். அண்ணாமலை எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் நீலகிரி மாவட்டதில் உள்ள சகோதர, சகோதிரிகளை போல் அனைவரும் உழைக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகள் பேசினர்.