24 special

அந்த செய்தியை கேட்டு தூக்கம் இல்லாமல் தவிக்கும் முதல்வர்....!

mk stalin, arivalayam
mk stalin, arivalayam

கூட்டணி ஒதுக்கீடு மற்றும் தமிழகத்தில் அண்ணாதுரை, ஜெயலலிதா போன்றவர்கள் பற்றி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய கருத்துக்கள் சர்ச்சையாகி அதிமுக பாஜக இடையே இருந்த விவகாரம் வெடித்து அதிமுக பாஜக கூட்டணி விரிசலை பெற்றது. இந்த கூட்டணி விரிசலை கண்டது நல்லது தான் அதிமுக நல்ல காரியத்தை செய்துள்ளது என்றும் கூட்டணி விலகளை ஆதரிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அதிமுக பாஜக கூட்டணி பிரிந்தது திமுகவிற்கு தான் தெரியும் நஷ்டம் என்று அரசியல் விமர்சிகர்களால் விமர்சனம் செய்யப்பட்டது. அதாவது பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த ஒரே காரணத்திற்காக விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் போன்ற கட்சிகள் திமுகவுடன் இருந்ததாகவும் தற்போது அந்த தடையும் இல்லை எனவே அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்ற ரகசிய ஆலோசனையில் திமுகவின் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டதாகவும் சில தகவல்கள் கசிந்தன.  


மேலும்  2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளையும் திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து திட்டம் தீட்டி வருகின்றனர். இந்த தகவல்கள் அனைத்தும் தற்போது முதல்வர் ஸ்டாலின் காதுகளுக்கு சென்றுள்ளது, இதனால் எப்படியாவது தன்னிடம் இருக்கும் கூட்டணி கட்சிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக சில நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது திமுக கூட்டணி கட்சிகள் பிரிந்து விடக்கூடாது, அதனை நாம் தடுத்தாக வேண்டும், அவர்கள் வேறு கூட்டணிகள் செல்லாமல் இருப்பதற்காக நம்மிடம் இருக்கும் கூட்டணி கட்சிகள் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையில் பொழுது அவர்கள் கேட்கும் தொகுதிகளில் கொடுத்து விட வேண்டும் என அறிவாலயத்தில் இரண்டாம் கட்ட தலைவர்களான அமைச்சர் பொன்முடி, துரைமுருகன் போன்றவர்களிடம் முதல்வர் மு க ஸ்டாலின் பேசி உள்ளார். 

இவர்களை சந்தித்து விட்டு இந்த பேச்சு வார்த்தையை முடித்து முதல்வர் வெளியில் வரும் பொழுது பத்திரிக்கையாளர்கள் கூடி அதிமுக பாஜக கூட்டணி விலகல் பற்றி கேள்வி எழுப்பி உள்ளனர் அதற்கு முதல்வர் சிரித்தபடி தனது வாகனத்தில் ஏறி சென்றுள்ளார். மேலும் பத்திரிக்கையாளர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்து விட்டது இதற்கு உங்கள் கருத்து என்ன சார் என்றார் கேள்வி கேட்டதிலிருந்து சிரித்துக் கொண்டே வாகனத்தில் ஏறி அமைச்சர் துரைமுருகனிடம் சிரித்துக் கொண்டே சில கமெண்ட்களை கொடுத்துள்ளார் முதல்வர் மு க ஸ்டாலின். இதன் பின்னணியை விசாரித்த பொழுது அதிமுக பாஜக கூட்டணி பிரிந்தது முதல்வருக்கு பிடிக்கவில்லை, அவர்கள் அந்த கூட்டணியில் இருந்தால் மட்டுமே நமக்கு பலம் அவர்கள் கூட்டணி உடைந்தால் நமக்கு பலவீனம் ஆகிவிடும் நம்மிடம் இருக்கும் கூட்டணி கட்சிகள் அனைத்தும் சிதறி போய்விடும் என முதல்வருக்கு தகவல்கள் பறந்தது வேறு செய்திகள் குறிப்பிடுகிறது. 

இதற்கிடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளதாகவும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கிடையில் அவர் உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தினால் தற்போது மருத்துவமனையில் இருக்கிறார். என்றும் கூறப்படுகிறது இந்த செய்தி முதல்வருக்கு சென்ற காரணத்தினால் முதல்வர் மேலும் அப்செட்டில் இருப்பதாகவும் வேறு தகவல்கள் கசிந்துள்ளது. ஒருபுறம் சனாதன விவகாரம் திமுகவை புரட்டி போட, மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணி முறிவு வேறு பயம் காட்ட இந்த 2024 தேர்தல் நமக்கில்லை என்ற தகவல் வேறு முதல்வர் காதுகளுக்கு செல்ல 3 தினங்களாக முதல்வர் தூக்கமில்லாமல் இருப்பதாக வேறு சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.