24 special

மாமன்னன் பட பணியில் அமைச்சர் பொன்முடி....நாங்கள் எப்போதும் இப்படித்தான்!

Ponmudi
Ponmudi

இந்த ஆண்டு ஜூன் மாதம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேல், பகத் பாசில் ஆகியோர் நடித்து வெளியான படம் மாமன்னன். படத்தின் ஒரு காட்சியில் பகத் பாசில் உக்காந்திருப்பர், அவரை காண வந்த வடிவேலுவை தனக்கு சமமாக உட்கார வைக்காமல் நிக்க வச்சி பேசுவார். அந்த காட்சியானது சமூகத்தில் கீழ் சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் மேல் சமூகத்தினர் நடத்தும் மரியாதை என கருத்து வெளியானது. அதே போல் மாமன்னன் படத்தில் பட்டியல் இள வேட்பாளர் ஒருவருக்கு பகத் பாசில் பிளாஸ்டிச் சேர் போட்டு அமர வைக்கும் காட்சி உள்ளது. அந்த படத்தில் இதுவரை யவரும் கொண்டாடாத வகையில் வில்லன் கதாபாத்திரத்தை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.


இந்த படத்தின் வெற்றி விழாவின் போது உதயநிதி தனது வீட்டின் ஷோபாவில் அமர்ந்திருப்பார், அங்கு அவரை காண வரும் நடிகர் வடிவேல் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் சந்திக்கும் பொழுது அவர்களை நாற்காலியில் அமர வைப்பார் அங்கு ஷோபா இருந்தும் அவர்களை அதில் அமரவைத்த புகைப்படம் சமூக தளத்தில் வைரலாக தனது வலியை படத்தில் வைத்த மாரி செல்வராஜூக்கே ரியல் லைஃபில் எதுவும் மாறாது என்று சொல்லாமல் சொல்கிறார்களா என்று சமூக ஆர்வலர்கள் பதிவிட்டு வந்தனர். 

தற்போது அதேபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது திமுக அமைச்சர் பொன்முடி தனது வீட்டில் தன்னை பார்க்க வந்த திமுக நிர்வாகிகளை அமர வைக்காமல் நிற்க வைத்தவைத்தபடி பேசிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் அடுத்த மாதம் 1ம் தேதி கலைஞர்  நூற்றண்டு விழா நடைபெறவுள்ளது.இதற்கான பணிகள் குறித்து ஆலோசிக்க அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர்கள் வி.பி.ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சென்றிந்தனர். அப்போது உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இருக்கையில் அமர்ந்தவாறு வந்தவர்களை நிற்க வைத்து பேசிய புகைப்படம் வைரலாக அதற்கு சமூக ஆர்வலர்கள்  ”இருக்கை காலியாக இருந்தும் அமர வைக்கப்படாதது ஏன்?  'மாமன்னன்' படப்பாணியில்” என குறிப்பிட்டு இருந்தது. இப்படி அமைச்சர்களே மக்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுவது தவறான செயல் என புகைப்படத்திற்கு கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர். 

இது பற்றி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் விளக்கம் தெரிவித்தது என்னவென்றால் கடந்த 26 ம் தேதி நானும் திமுக நிர்வாகிகளும் அமைச்சர் பொன்முடியை சந்திக்க அமைச்சர் வீட்டிற்கு சென்றிந்தோம். அப்போது அவர் காலில் அடிபட்டு கட்டுடன் அமர்ந்திருந்தார. அதை ஆதி திராவிடர் நலக்குழு இணைச் செயலாளர்கள் வி.பி.ராஜன் குனிந்து பார்த்தபோது எடுத்த படம் தான் அது என்றும், இது தவறுதலாக சித்தரிக்கப்பட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளனர். நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திவிட்டுத்தான் திரும்பினோம் என உறுதிகூறுகிறார் எம்.எல்.ஏ., இதேபோல் சில கட்சி தலைவர்களும் வருபவர்களை நிற்க வைத்தே வந்த காரணத்தை கேட்டறிந்து அனுப்பி வைப்பதாக சில தகவல் உலா வருகிறது. 

இருப்பினும் சமூக ஆர்வலர்கள் இது முற்றிலும் பொய் படத்தில் அமைச்சர் நன்றாக தான் அமர்ந்திருக்கிறார், அவர் காலில் எந்த வித கட்டுகளும் தெரியவில்லை. வேணும் என்றே அவர்களை நிற்க வைத்தது போல் தான் உள்ளது எம்.எல்.ஏ குனிந்து வணக்கம் தான் போடுகிறார் நலம் விசாரிப்பது போல் இல்லை என கூறுகின்றனர். மேலும், இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம்  திமுக தெற்கு மாவட்ட செயலாளரான புகழேந்தி, அமைச்சர் பொன்முடி வீட்டில் தரையில் அமர்ந்து இருப்பது போல புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.