தமிழகத்தில் இணையவழி சூதாட்டத்தை வழங்கும் தனியார் நிறுவனத்திற்கும், திமுக அமைச்சர்களுக்கும் தொடர்பு இருக்கிறாதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதில் அதிக அளவிலான பணத்தை இழந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என, இதுவரை 41 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதன் காரணமாக, தமிழகத்தில் இணைய வழி சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் செப்டம்பர் 26 -ஆம் தேதி கொண்டுவரப்பட்டது. இது தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதனைதொடர்ந்து இணையவழி தடை சட்டம் தமிழகத்தில் அவசர அவசரமாக அக்டோபர் 1-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது, அக்டோபர் 19-ஆம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அவசர தடை சட்டத்திற்காக சில விளக்கங்களை ஆளுநர் தமிழ அரசிடம் கேட்டிறிந்தார். பின்பு 24 மணிநேரத்தில் தமிழக அரசு ஆளுநருக்கு விளக்கம் அளித்திருந்தது. ஆனால் மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இணையவழி தடை சட்டத்தில், சில குறிப்புகளை மாற்றும் படி ஆளுநர் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பிருந்தார்.
இந்நிலையில், நேற்று மீண்டும் இணையவழி சூதாட்ட தடை மசோதவை சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி, இணையவழி சூதாட்ட தடை மசோதவிற்கு முழுவதும் ஆதரவளிக்கிறது. இதுகுறித்து, தமிழக அரசை ஏன் நாங்கள் எதிர்க்கிறோம் என்றால்??? இணையவழி தடை சட்ட மசோதாவில், ஆளுநர் பல கேள்விகளை தமிழக அரசிடம் முன்வைத்துள்ளார். அதில் அரசியலமைப்பு சட்டம் மூலமாகவும், உச்ச நீதிமன்றம் மூலமாகவும், இந்த அவசர சட்டத்திற்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை முன்கூட்டியே ஆளுநர் தமிழக அரசிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
மேலும் இணையவழி அவசர தடைச் சட்டத்தில் சில குறிப்புகளை சரி செய்துகொடுங்கள், அப்பொழுது தான் இணையவழி தடை சட்டத்திற்கு எதிராக தனியார் நிறுவனங்கள், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறியீடு செய்தாலும், இச்சட்டத்திற்கு எந்த பிரச்சனையும் வராது என்று ஆளுநர் தெரிவித்தாக கூறினார்.
ஆனால், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் இருக்கு என்ற பழமொழிக்கிணங்க, தமிழக அரசு மீண்டும் அதே இணையவழி சூதாட்ட தடை மசோதவை அனுப்புகிறது என்றால், அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் கண்டிப்பாக ஆளுநர் அதில் கையொழுத்து போட்டாக வேண்டும்.
மேலும் ஆளுநர் கையொழுத்து போட்டாலும் உச்ச நீதிமன்றத்தில், என்ன நடக்கும் என்பதை நான் இப்பொழுதே உங்களுக்கு தெரிவிக்கிறேன். ஆளுநர் கையொழுத்து போட்ட பிறகு
உச்ச நீதிமன்றத்தில் இணையவழி சூதாட்ட தடை மசோதாவிற்கு, கண்டிப்பாக 100 சதவீதம் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் இணையவழி சூதாட்ட தடை மசோதவை உச்சநீதிமன்றத்தின் மூலம் தடை செய்வார்கள்.
அப்பொழுது இந்த தமிழக அரசு என்ன சொல்லும், ஆளுநர் பேச்சை கேட்டிருந்தால் இப்படி எதுவும் நிகழ்ந்திருக்காதே, இந்த தடை மசோதவை சரியான முறையில் தாக்கல் செய்திருக்கலாமே, இதனால் கண்டிப்பாக தமிழக அரசு வருத்தப்படப்போகிறது, அப்பொழுது சட்ட அமைச்சர் மக்கள் முன் என்ன சொல்ல போகிறார் என்று நான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் என்றார்.
மேலும் ஆளுநர் குறிப்பிட்டும், இணையவழி சூதாட்ட தடை மசோதவை இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றுகிறார்கள், இது கண்டிப்பாக உச்ச நீதிமன்றத்தில் தடையாகும் என்று தெரிந்தும் நிறைவேற்றுகிறார்கள் என்றால் இணையவழி சூதாட்ட நிறுவனங்களுக்கும், திமுக அமைச்சர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று எனக்கே சந்தேகம் வருகிறது. ஆளுநர் குறிப்பிட்டதை போன்று தமிழக அரசு இணையவழி சூதாட்ட தடை மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி தடை செய்தார்கள் என்றால், தமிழக அரசு நேர்மையான அரசு என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.