'ஆட்சியா நடக்குது இங்கே புலிகேசி தர்பார்தான் நடக்கிறது' என திமுக அரசை அண்ணாமலை போகிற போக்கில் விமான நிலையத்தில் அடித்து விட்டு சென்ற சம்பவம் மட்டுமல்லாது திரும்ப வந்து பார்த்துக் கொள்கிறேன் என கூறியதும் திமுகவை சற்று யோசிக்க வைத்துள்ளது.
தமிழக அரசியலில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தாலும் திமுக அரசை விமர்சிப்பது மட்டுமல்லாமல் திமுக அரசின் நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் தெளிவாக எடுத்துரைப்பது, திமுக அரசு செய்யும் தவறுகளை மக்களிடத்தில் 'இது தவறு', 'இவர்கள் இதனை தவறான பாதையில் எடுத்து செல்கிறார்கள்' என மக்கள் மத்தியில் விளக்குவது மேலும் திமுக அரசின் மீது உடனடி விமர்சனங்களை வைப்பது, போராட்டங்களை அறிவிப்பது என முழு நேர எதிர்க்கட்சியாக அண்ணாமலை தான் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதிலிருந்து கர்நாடகம், தமிழ்நாடு என பம்பரமாக சுழன்று வருகிறார்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்தது, தாக்கல் செய்தது மட்டுமல்லாது கடந்த இரு நாட்களாகவே சமூக வலைதளத்தில் யார் யாரெல்லாம் அவதூறு பரப்புகிறார்களோ அவர்களை எல்லாம் தேடிப் பிடித்து கைது செய்து வந்தது திமுக அரசு, இதற்கு அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்தாரே தவிர இன்னும் முழுநேர பேட்டி எதுவும் அளிக்கவில்லை. மேலும் பட்ஜெட் தாக்கல் செய்த திமுக அரசு வாக்குறுதிகளை எதுவும் பெரிதாக நிறைவேற்றவில்லை. இது மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார். டெல்லியில் அவர் பாஜக தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரை நேரில் சந்தித்து பேசுகிறார். சில முக்கிய விவாதங்களுக்காக பாஜக தேசிய தலைவர்களை சந்திப்பதன் பின்னனியில் 2024 பாஜக தமிழகத்தில் போட்டியிடுவது பற்றியும் விவாதிக்க சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் டெல்லி செல்லும் முன் அண்ணாமலை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். விமான நிலையத்தில் பேட்டியளித்த மாநில தலைவர் அண்ணாமலை கூறும்பொழுது, 'தமிழக முதல்வர் புலிகேசி போல் நடந்து கொள்கிறார், அந்த படத்தில் வடிவேலு செய்வது போல் முதல்வர் ஸ்டாலின் காலையில் டிஜிபியை அழைத்து 'இங்கே வாருங்கள் யார் என்று நமது அரசை பற்றி அவதூறு பேசினார்களோ அவரை அழைத்து உள்ளே போடுங்கள்' என கூறும் அளவிற்கு ஒரு பலகீனமான முதல்வராக ஆட்சியை திமுக நடத்தி வருகிறது.
விமர்சிப்பவர்களை எல்லாம் பிடித்து உள்ளே வைக்க வேண்டும் என்றால் நீங்கள் பாரம்பரிய குடும்பம் என கூறி என்ன பயன்? இத்தனை ஆண்டுகளாக அரசியலில் இருந்து என்ன பயன்? நாட்டில் சட்டம் ஒழுங்கு கொலை குற்றங்கள் போன்றவை அபரிமிதமாக நடந்து வருகின்றன ஒருபுறம் மக்கள் வெளியில் நடக்கவே அச்சப்பட்டு வருகின்ற நிலையில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவிப்பவர்களை பிடித்து உள்ளே போடுவது எந்த வகையில் மக்களாட்சி? இதுதான் நல்லாட்சியா' என கேள்வி எழுப்பினார்.
மேலும் ஒரு பத்திரிகையாளர் அண்ணாமலையிடம் தமிழக அரசின் பட்ஜெட் பற்றி கேள்வி எழுப்பியதற்கு அண்ணாமலை அண்ணா நான் பட்ஜெட் படித்துள்ளேன், ஆனாலும் இப்போது கூறுவதற்கு நேரமில்லை இன்னும் இரு தினங்களில் வந்து விடுவேன். வந்துவிட்டு வைத்துக் கொள்கிறேன், பட்ஜெட்டை பற்றியான விளக்கத்தை கமலாலயத்தில் நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் பார்த்துக் கொள்ளலாம்' என்றார்.
ஏற்கனவே போகிற போக்கில் விமான நிலையத்தில் முதல்வரை புலிகேசி என விமர்சித்த அண்ணாமலை போயிட்டு வந்து கமலாலயத்தில் ஒரு பட்ஜெட் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வாக்குறுதி, சிலிண்டர் மானிய வாக்குறுதி, முதியோர் உதவித்தொகை, மாதம் தோறும் மின் கட்டணம் இன்னும் பல வாக்குறுதிகளை திமுக மறந்து விட்டு விளம்பர பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
இதனை கண்டிப்பாக மக்கள் மத்தியில் எடுத்து கூறுவது நமது கடமை அதனால் கண்டிப்பாக பத்திரிகையாளர் சந்திப்பு வைத்துக்கொள்ளலாம் என அண்ணாமலை தனது தரப்பினருடன் கூறியதாக தகவல் கிடைத்துள்ளது. இன்னும் என்னென்னவெல்லாம் கூற போகிறாரோ என தற்பொழுதே அறிவாலய தரப்பு புலம்பி வருகிறது.