தூத்துக்குடி முன்னாள் மேயரும், முன்னாள் ராஜ்யசபா எம்பியுமான சசிகலா புஷ்பா சமீபத்தில் ஒரு நேர்காணலில் பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதில்....."எனக்கு சிறு வயது முதலே படிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்தது... பள்ளி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சிங்கப்பூர் சென்று தனது முதுநிலை படிப்பை தொடர்ந்தேன். அங்கு தான் ஆளுமை என்பது எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தேன். அங்கிருந்த காலக்கட்டத்தில் நிறைய அனுபவங்களை கற்றுக் கொடுத்தது.. மீண்டும் தமிழகம் வந்த பின், சக்திவாய்ந்த ஒரு பெண்ணாக ஒரு நிறுவனத்தின் உரிமையாளராக அப்போதே இருந்தேன்.
அதுமட்டுமல்லாமல் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பங்கேற்று முதலிரண்டு படிகளில் வெற்றி பெற்றேன். அதன்பிறகு ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வந்தேன். இப்போதும் வகுப்பு எடுத்து வருகிறேன். தற்போது பாஜகவில் இருப்பதால் மிகவும் சந்தோஷமாக மக்களுக்கு சேவை செய்ய முடிகிறது.
பெண்களுக்கு மிக சிறந்த கட்சி பாஜக. இங்கு குடும்ப அரசியல் கிடையாது. யார் வேண்டுமானாலும் ஒரு தலைவர் ஆகலாம் என்பதை உணர்த்தும் கட்சி பாஜக. எங்கள் தலைவர் அண்ணாமலை மிகச் சிறந்த ஆளுமை கொண்டவர். யார் எதைக் கேட்டாலும் எந்த சப்ஜெக்ட் பற்றி கேட்டாலும் கையில் துண்டு சீட்டு இல்லாமல் பதில் அளிக்கக் கூடிய திறமை வாய்ந்தவர். எவ்வளவு பெரிய விஷயத்திற்கும் சிறப்பான முடிவை விரைந்து கொடுக்கக்கூடியவர் என பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி மிக சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்.
அப்போது நெறியாளர் தேன்மொழி எழில், நீங்கள் கடந்த சில வருடங்களாக டெல்லியில் உள்ளீர்களே உங்களுக்கு தமிழ் ஆங்கிலம் தவிர்த்து இந்தியும் தெரியுமா என கேள்வி கேட்க... அதற்கு பதிலாக "எனக்கு இந்தி தெரியும்.. அதனால்தான் பார்லிமென்டில் ஆங்கிலம் இந்தி என பேசி மிக எளிதாக சமாளிக்க முடிகிறதுஎன தெரிவித்தார். பிறகு உங்களுக்கு இந்தி தெரியும். பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் இந்தி தெரியுமா? என கேள்வி கேட்க... அதற்கு பதிலாக "அவருக்கு தமிழ் இங்கிலீஷ் ஹிந்தி கன்னடம் மொழி மிக மிக நன்றாக தெரியும் அருமையாக வெளுத்து வாங்குவார். இதைத் தவிர்த்து வேறு என்னென்ன மொழி தெரியும் என்று எனக்கே தெரியாது. அவ்வளவு திறமை மிக்கவர்.
தேசிய அளவில் மிகப்பெரிய தலைவராக உருவாக அண்ணாமலை அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கின்றது. அதற்கெல்லாம் காரணம் அவருடைய முழுத்திறமையும் இதையெல்லாம் தாண்டி பழமொழிகளை விரல்நுனியில் பேசுவதால் தேசிய அளவில் மிக முக்கிய தலைவராகும் அனைத்து தகுதியும் அண்ணாமலை அவர்களுக்கு உண்டு என மிகவும் பெருமையாகப் பேசினார் சசிகலா புஷ்பா.
மேலும் தமிழக எம்பிக்கள் இந்தி தெரியாமல் பார்லிமென்டில் வந்து பப் பப் பப்பா என முழிப்பார்கள். சமாளித்து பேச வேண்டும் என முயற்சி செய்வார்கள். அவர்களைப்பார்த்தால் பாவமாக இருக்கும். சமாளிக்க ஆங்கிலமாவது தெரிய வேண்டும் அல்லவா ? என பதிலளித்து ஒரு ஸ்மைல் இட்டுள்ளார்.இதெல்லாம் போக மேலும் பல்வேறு விஷயங்களையும் channel vision யூடியூப் சேனலில் பகிர்ந்து உள்ளார் சசிகலா என்பது குறிப்பிடத்தக்கது.