24 special

ஐயோ...அம்மா.. என்ன சுட்டுடாதீங்க... கழுத்தில் பதாகை ஏந்தி வந்து சரணடைந்த கிரிமினல்..! மாஸ் காட்டும் யோகி!

Yogi bjp
Yogi bjp

கடந்த 38 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக 5 ஆண்டுகள் முதல்வர் பதவியை நிறைவுசெய்து இரண்டாவது முறையாக தேர்வான முதல்வர் என்ற பெருமைக்கு உரியவர் யோகி ஆதித்யநாத்.


உத்தரபிரதேச முதலமைச்சரான யோகி ஆதித்யநாத் கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சிக்கும், கட்டுக்கடங்காமல் இருந்த ரவுடிகளின் அட்டகாசத்தையும் முடிவுக்கட்டி மிக சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். குறிப்பாக கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஏராளமான கிரிமினல்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடுக்கப்பட்டது. இதனால் சட்டத்திற்கு அடங்காமல் திரிந்து வந்த பல்வேறு கிரிமினல்கள் தங்களது ஆதிக்கத்தை குறித்து சற்று அடக்கி வாசிக்க தொடங்கியதுடன் அவர்களுடைய நடமாட்டமும் குறைந்தது.

சொல்லப்போனால் உத்தரபிரதேசத்தில் ரவுடிகளின் அராஜகம் இல்லாமல் கடந்த ஐந்து ஆண்டு காலம் மக்கள் சற்று நிம்மதியாக வாழ்ந்தனர். அதன் எதிரொலியாகவே மீண்டும் உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதாவது பாஜகவின் வெற்றிக்கு சட்டம்-ஒழுங்கு நிலை நாட்டப்பட்டு, மாநிலத்தில் அமைதி நிலவுவது மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இப்படி ஒரு நிலையில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்து 15 நாளில் 50 கிரிமினல்கள் என்கவுண்டருக்கு பயந்து தாங்கவே வந்து சரண் அடைந்து இருக்கின்றனர். கோண்டா  மாவட்டத்தில் பணம் பறித்தல் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த கௌதம் சிங் என்ற கிரிமினல் "என்னை சுட வேண்டாம்" நானே சரணடைந்து விடுகிறேன் என்று எழுதப்பட்ட பதாகையை கழுத்தில் மாட்டிக்கொண்டு காவல் நிலையத்துக்கு வந்து சரண் அடைந்து இருக்கின்றார். இதேபோன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 50 கிரிமினல்கள் சரணடைந்து இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் கடந்த 15 நாட்களில் மட்டும் இரண்டு கிரிமினல்கள் என்கவுண்டர் செய்யப்பட்டு உள்ளது. பத்து பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

பாஜக ஆளும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குறையாமல் இருப்பதற்கும் அதே சமயத்தில் ரவுடிகளின் அராஜகம் இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கும் வழிவகை ஏற்பட்டு இருப்பதாக மக்கள் கருத்து தெரிவிக்க தொடங்கியிருக்கின்றனர். இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் உத்தர பிரதேசத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து மிகப் பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இந்த பிரச்சாரம் கட்டாயம் பாஜகவுக்கு தேர்தலில்  மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் அதனை எல்லாம் மீறி ரவுடிகளின் பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக வாழ்வதே உத்திர பிரதேச மக்களின் மிகப்பெரிய இலக்காக உள்ளது என்பதை நிரூபிக்கும் விதமாக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.