24 special

அடுத்த சர்ப்ரைஸ் சொன்ன அண்ணாமலை... இந்த முறை யார் தெரியுமா..?

Annamalai BJP
Annamalai BJP

லோக்சபா தேர்தல் நெருங்கிவருவதால் மாற்று கட்சியினர் வெவ்வேறு கட்சிகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக கட்சிக்கு பாஜகவில் உள்ள இரண்டு எம்எல்ஏ இணைவதாக தெரிவித்தார். இதனால் பாஜகவில் இருந்து யார் அதிமுக பக்கம் செல்வார்கள் என எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை மிக விரைவில் பாஜக கட்சியில் பெரிய தலைகள் இணையலாம் என கூறியதால் தமிழகமே பரபரப்பாக சென்றுவிட்டது.


கடந்த நாட்களுக்கு முன் பாஜகவில் பெரிய மாற்றம் ஏற்படும் பெரிய தலை ஒருவர் இணைவார் அதும் கோயம்பத்தூரில் என கூறினார். அது அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர் என்று இணையத்தில் ஒரு தகவல் உலா வந்தது. ஆனால், அங்கு அது போல் ஒரு நிகழ்ச்சி நடைபெறவில்லை காரணம் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் எதிரி நிறைவு விழாவில் பிரதமர் பங்கேற்பதால் அந்த விழா ஒத்திவைக்கப்படுகிள்ளது என பாஜக சார்பில் கூறப்பட்டது. தமிழக அரசியலில் இந்து அறிவிப்பு யார் என்று பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.

இப்படிப்பட்ட சூழலில், திருப்பூரில் தன்னுடைய யாத்திரையை நிறைவு செய்துள்ள அண்ணாமலை, மாற்று கட்சியினர் இணையும் விழா குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அத்துடன், பாஜகவுக்கு வரப்போகும் பெரிய பிரபலங்கள் குறித்தும் சில தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதாவது, தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி என்பது கருத்து கணிப்பில் தெளிவாக தெரிகிறது. தொடங்கியது என்னவோ பாஜக யாத்திரையாக இருக்கலாம். ஆனால், முடிக்கும்போது மக்கள் இயக்கமாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை தருவோம்.. நடைபயணத்தின்போது, மோடிஜியின் இந்த 10 ஆண்டு கால சாதனையை மக்களிடம் கொண்டு சென்றோம். நடுநிலை வாக்களர் எல்லோரும் பிரதமர் மோடியை ஆதரிக்க உள்ளனர். 

தொடர்ந்து பேசிய அவர்,  எங்கள் கட்சியில் பெரிய புள்ளிகள் நிச்சயம் இணைவார்கள்.. நாங்கள் சொல்கிற இடத்தில்தான் அவர்கள் இணைய வேண்டும் என்று கிடையாது.. சில புள்ளிகளுக்கு டெல்லி சென்று இணைவதற்கு ஆசை உள்ளது. எங்கள் கட்சியில் இணையும்போது இங்குள்ள தலைவர்களை சமதனப்படுத்தவுள்ளது. காரணம், இத்தனை காலமாக பாஜகவுக்காக அவர்கள் உழைத்திருக்கிறார்கள். வெளியிலிருந்து பல பெரிய புள்ளிகள் வருவதால், அவர்களை சமாதானப்படுத்த வேண்டி உள்ளது.எங்கள் கட்சிக்கு வரப்போகிறவர்கள் ரொம்ப பெரிய புள்ளிகள். சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அவர்கள் இருக்கலாம்.. இதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினராகவும் அவர்கள் இருந்திருக்கலாம்.

எனவே காத்திருங்கள் நிச்சயம் வருவார்கள் என கூறி அதிமுகவில் 2 பாஜக எம்எல்ஏக்கள் இணைய போவதாக, கோவை அதிமுக பிரமுகர் அம்மன் அர்ச்சுனன் சொல்லிக் கொண்டு இருக்கிறார். அவர்கள் யார் என்று அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். பாஜகவை நாங்கள் மதிப்பதே கிடையாது" என்று சொல்லி கொண்டிருந்தவர்களெல்லாம், இன்று எப்ப பார்த்தாலும் பாஜகவையே முணுமுணுத்து கொண்டிருக்கிறார்கள்.. தூங்கும்போதும் பாஜக. தூங்கி எழுந்தாலும் பாஜக என்று கத்திக்கொண்டேயிருக்கிறார்கள். இதையும் பாஜகவின் வளர்ச்சியாகவே நாங்கள் பார்க்கிறோம்" என்றார். இதனால் பாஜகவில் நிச்சயம் ஆளும் கட்சியின் திமுகவில் இருந்தோ அல்லது அதிமுகவில் இருந்தோ நிச்சயம் இணைவதற்கு வாய்ப்பு உள்ளது என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. வரும் நாட்களில் பெரிய மாற்றம் ஏற்ப்பட போகிறது தமிழக அரசியலில் என்பதில் மாற்றமில்லை.