
தெலுங்கில் உருவான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா அந்த படமே மக்கள் இடத்தில் சர்ச்சையாக பேசப்பட்டது. பெண்களுக்கு எதிராக இருந்ததாகவும் மக்கள் குற்றச்சாட்டு வைத்தனர். ஆனால், ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பு பெற்ற அர்ஜுன் ரெட்டி படம் அதன் பிறகு தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இந்நிலையில், சந்தீப் ரெட்டி வங்கா அடுத்ததாக ரன்பீர் கபூர், ராஷ்மிக்கா நடிப்பில் உருவான படம் அனிமல் படமும் அதே போல் விமர்சனம் பெற்றது. நடிகை குஷ்பூ அந்த படம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அனிமல் படம் மிக பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த வருடம் வெளியானது. ஆனால், படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினர். படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும், ஆணாதிக்கம், வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறுகின்றனர். படம் விமர்சன ரீதியாக இருவேறு விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய தொகையை ஈட்டியதாக சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். இணையத்திலோ அல்லது விமர்சகர்கள் கூறியது அனிமல் படம் இல்லை படத்தை எடுத்தவர் தான் அனிமல் என சரமாரியாக இயக்குனரை விமர்சனம் செய்து வந்தனர்.
தமிழில் முன்னதாக ராதிகா சரத்குமார் இணையத்தில் இப்படியொரு கேவலமான படத்தை பார்த்ததில்லை என்றும் ஒரு ட்வீட் போட அது அனிமல் படத்தை தான் இப்படி பேசுகிறார் என நெட்டிசன்கள் அனிமல் படத்தை கலாய்த்து வந்தனர். இதற்கிடையில், பிரபலம் ஒருவர் அனிமல் படத்தை பாரத்தை நல்ல ஒரு படம் என பாராட்டியிருந்தார். இதுவும் விமர்சனமாக மாறியது, எப்படி அனிமல் படத்துக்கு ஆதரவு கொடுக்கலாம் என்று நெட்டிசன்கள் பொங்கி எழுந்தனர். இந்நிலையில், நடிகை குஷ்பூ அனிமல் படம் பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், "அனிமல் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக திருமணத்துக்கு பின்னான பாலியல் வன்கொடுமைகள், முத்தலாக் உள்ளிட்ட வழக்குகளை பார்த்திருக்கிறேன்.
அனிமல் போன்ற ஒரு பெண் வெறுப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வசூல் செய்யும் படமாக மாறியது என்றால் அதனை அந்த இடத்துக்கு கொண்டு சென்ற மக்களின் மனநிலையை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அர்ஜுன் ரெட்டி, கபிர் சிங் படங்களிலேயே பிரச்னை இருந்தது. ஆனால் நான் இயக்குநரை குறை சொல்லமாட்டேன். ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை வெற்றிதான் முக்கியம். சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை படங்களில் காட்டுகிறோம். நாங்கள் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை பற்றி பேசுகிறோம் என்று சொல்வார்கள். எனினும் மக்கள் அத்தகைய படங்களை பார்க்கிறார்கள்.
என் மகள்கள் அதுபோன்ற படங்களை பார்ப்பது நான் விரும்பவில்லை. ஆனால் அது எதைப்பற்றி பேசுகிறது என்பதை விரும்பியதால் அவர்கள் அனிமல் படத்தை பார்த்தார்கள். அவர்கள் படம் பார்த்துவிட்டு என்னிடம் வந்து அம்மா தயவு செய்து அந்தப் படத்தை பார்க்காதீர்கள் என்று எச்சரித்தார்கள். இப்படிப்பட்ட படங்களுக்கு ரிப்பீட் ஆடியன்ஸ் உருவாகும்போதுதான் நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது" என்றார். அனிமல் படம் வெளியாகி மூன்று மதங்களை கடந்தும் விமர்சனத்திற்கு தள்ளப்படுகிறது என்றால் மக்கள் இடத்தில் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திருக்கும் என்று யோசித்து பாருங்கள்.