டெல்லியில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பிய அண்ணாமலை நேற்று அக்கட்சியின் தலைமை அலுவலகம் கமலாலயத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் இதில் பாஜக துணை தலைவர் வி.பி. துரைசாமி மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் .
பேட்டியின் போது முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் வைத்த விமர்சனங்களுக்கு நெற்றி பொட்டில் அடித்தது போன்று தரவுகளுடன் பதில் கொடுத்தார், இறுதியில் வீம்பாக வம்பிற்கு நின்ற பத்திரிகையாளர் ஒருவர் மூக்கு உடைப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியது.
அண்ணாமலை நேற்று குறிப்பிட்ட சில முக்கிய தகவல்களை பார்க்கலாம் இன்று அண்ணாமலை பத்திரிக்கையாளர் சந்திப்பு 1, இந்தியா முழுவதும் 75 மத்திய கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வு தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். (CUET - Central Universities Common Entrance Test). இதற்கு ஏன் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது?
2, 185 கோடி 74 லட்சம் பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது இதுவரை இந்தியாவில். தமிழ் நாட்டில் 10, 38,53,000 டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
3, இந்தி சர்ச்சை பற்றி: தமிழக பாஜக மொழி திணிப்பை ஆதரிக்காது. மத்திய பாஜக அரசும் மொழித் திணிப்பை ஆதரிப்பதில்லை. ஆப்ஷனல் மொழியாகத் தான் வைத்திருக்கிறார்கள். 2011இல் கூட யுபிஏ அமைச்சர் ப சிதம்பரம் இந்தி 'அலுவல் மொழி' பற்றி பேசிய போது, அப்போது அந்த கூட்டணியில் அங்கம் வகித்தது திமுக.
ஏ ஆர் ரகுமான், 'இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும்' என்பதை வரவேற்கிறோம். ஆனால், அதை நிறைவேற்ற ஏதேனும் செய்திருக்கிறோமா என்றால் 'இல்லை' என்பதே பதில். ஏகே ராஜன் கமிட்டியின் நீட் அறிக்கை புள்ளி விவரப்படி, கடந்த ஆண்டுகளில், தேர்வை தமிழில் எழுதும் மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதாவது, தமிழக மாணவர்களே தமிழில் பரீட்சை எழுதாமல், பிற மொழிகளில் எழுதுகிறார்கள். (இது தான் தமிழ் வளர்த்த விதம்!).
எனவே, தமிழை இணைப்பு மொழியாக்க விரும்பினால், முதலமைச்சர் பிற மாநிலங்களில் குறைந்த 10 பள்ளிக் கூடங்கள் தமிழக அரசு செலவில், தமிழில் நடத்த வேண்டும். (தமிழை இணைப்பு மொழியாக்க) செயலில் இறங்க வேண்டும் முதல்வர்!
இந்தியா உலகின் விஸ்வ குருவாக வேண்டும் என்றால், தமிழகம் இந்தியாவின் விஸ்வ குருவாக வேண்டும்! 4, மலையாள தேசத்தில் முதல்வர் பேசியது பற்றி: முதல்வர் பேசியது அத்தனையும் காங்கிரஸ் காலத்தில் காங்கிரஸ் செய்த அதிகார துஷ்பிரயோகங்கள் பற்றி. தன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸை பற்றி கேரளாவில் போய் பேசியிருக்கிறார் முதலமைச்சர்.
கவர்னர் (ரவி) மீது முதல்வர் குற்றம் சாட்டு முன், கவர்னர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அதோடு, இந்த முறை, மாணவர்களுக்கு பயனளிக்கும் நீட் இ-பாக்ஸ் முறையை ஏன் நிறுத்தினீர்கள் என்பதையும் முதல்வர் விளக்க வேண்டும். மாணவச் செல்வங்கள் நீட்டில் தேர்வு பெறுவதை தடுக்கவா?
5, பெட்ரோல் விலையைப் பற்றி போகிற இடமெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் முதல்வர். உத்தரபிரதேசத்தில் 96 ரூபாய் ஒரு லிட்டர் பெட்ரோல். பாண்டிச்சேரியில் 92 ரூபாய். கர்நாடகாவில் 93. குஜராத்தில் 98. தமிழகத்தில் 100.94!
அந்த 100.94இல், கச்சா எண்ணெய் + சுத்திகரிப்பு = ரூ 57.17.மத்திய (ரூ 21.80) மாநில (18.31) வரிகள் = ரூ 40+. பிற மாநிலங்கள் பெட்ரோல் விலையை குறைக்கும் போது, தமிழக அரசு ஏன் குறைக்க மறுக்கிறது? தீபாவளிக்கு முன் மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைத்ததிலிருந்து மத்திய அரசுக்கு இழப்பு: ரு 1 லட்சத்து 7 ஆயிரம் கோடி.
விலையை குறைக்காத 7 மாநிலங்கள்: தமிழகம், மஹாராஷ்டிரா, தெலங்கானா, மேற்கு வங்கம், ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட். (அத்தனையும் பாஜக ஆளாதவை). இப்படி விலையை குறைக்காததால் தமிழகம் சம்பாதித்த தொகை: ரூ 2,720 கோடி.
அதோடு, உலகெங்கும் பெட்ரோல் விலை 30 - 40% உயர்ந்திருக்கும் வேளையில், இந்தியாவில் 6% உயர்ந்திருக்கிறது. எனவே, தமிழக முதல்வர் உண்மைக்கு புறம்பாக பேசுவதை கைவிட வேண்டும். என வெளுத்து எடுத்தார் அண்ணாமலை, இறுதியாக தமிழகத்தை சேர்ந்த இரு அமைச்சர்கள் மீது அமலாக்க துறை சம்மன் அனுப்பி இருக்கிறார்கள், ஒருவர் 4 வது முறையாக விசாரணைக்கு ஆஜராகமல் இருக்கிறார்.
என குறிப்பிட்டு பேசினார் அப்போது குறுக்கிட்ட பத்திரிகையாளர் ஒருவர் நீங்கள் இரண்டு அமைச்சர்கள் என கூறுகிறீர்கள் யார் என பெயரை கூற மறுக்கிறீர்கள் ஏன் என கேட்டார்? அப்போது பேசிய அண்ணாமலை எல்லாத்தையும் நானே சொல்லிட்டா அப்புறம் நீங்க எதற்கு வாங்குகிற சம்பளத்திற்கு இதையாவது கண்டு பிடியுங்கள் என வீம்பாக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் மூக்கை உடைத்தார் அண்ணாமலை.
அனைத்து பத்திரிகை துறையை சேர்ந்தவர்களுக்கும் யார் அந்த அமைச்சர் என தெரிந்த பிறகும், வேண்டுமென்றே அண்ணாமலை அமைச்சர் பெயரை குறிப்பிட வேண்டும் என்ற நோக்கில் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை இதையாவது நீங்கள் கண்டு பிடியுங்கள் என மூக்கை உடைத்து அனுப்பினார் அண்ணாமலை.அண்ணாமலை கொடுத்த முழுமையான பேட்டி கீழே இணைக்கப்பட்டுள்ளது.(input credit -selva nayagam )