24 special

திராவிட மாடலுக்கு ஆப்பு வைத்த அண்ணாமலை.. அமித்ஷா கையில் சிக்கிய 3 புத்தகங்கள்!


தமிழக முதல்வர் இந்தியா முழுவதும் முன்னெடுத்து செல்லும் திராவிட மாடலுக்கு நேர் எதிராக தற்போது  "திராவிட மாயை புத்தகம்" அவர் பின்னாலே செல்கிறது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து  உள்ளார்.


பத்திரிகையாளரும் எழுத்தாளரும் பதிப்பாளரும் ஆய்வாளருமான சுப்பு, 20 ஆண்டு காலமாக தீவிரமாக ஆராய்ந்து திராவிட மாயை என்ற புத்தகத்தை உருவாக்கினார் . இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க திராவிட மாடல் கொண்டு செல்வோம் என தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் இப்படியான நிலைமையில் தமிழில் மட்டுமே அச்சிடப்பட்டு இருந்த திராவிட மாயை என்ற புத்தகம் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்து இருந்தது. 

ஆனால் தற்போது ஆங்கிலத்தில் அதை மொழிபெயர்த்து இருப்பதால் திமுகவிற்கும், திராவிட மாடலுக்கும் பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கடந்த சில தினங்களுக்கு முன்பாக புதுவையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்திருந்தபோது அவரை வரவேற்க சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் உடன் சென்ற மற்றவர்கள் அமித்ஷாவிடம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திராவிட மாயை புத்தகத்தை பரிசாக வழங்கினர்.


குறிப்பாக ஒன்றல்ல இரண்டல்ல மூன்று புத்தகங்களும் "திராவிட மாயை" என்பது தான் இங்கு கூர்ந்து கவனிக்கப் பட வேண்டியதாக இருக்கின்றது. இந்த ஒரு விஷயத்தை அண்ணாமலை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் ஆசிரியரான சுப்பு, திராவிட மாயை சுப்பு என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறார். இவருடைய எழுத்தாற்றலையும் படைப்பாற்றலையும் போற்றி, பண்டிட் தீன்  தயாள் எழுத்தாளர் விருதினை வழங்கியது ஒரே நாடு பத்திரிகை என்பது குறிப்பிடத்தக்கது.