சமூக ஊடகங்கள் வழியே தேசிய சிந்தனைகளை இளைஞர்கள் மாணவர்கள் மத்தியில் கொண்டு சென்றவர் எழுத்தாளர் மாரிதாஸ். திமுக அரசின் கடந்தகால செயல்பாடுகள் அதன் முக்கிய தலைவர்கள் குறித்து பல்வேறு தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர், ஊடகத்தில் சில நபர்களின் ஆதிக்கத்தை முடிவிற்கு கொண்டு வந்தவர் என்ற பல சாதனைகளை தமிழகத்தில் நிகழ்த்தி காட்டியவர் மாரிதாஸ்.
இந்த சூழலில் மாரிதாஸ் மீது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்த திமுக பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று கூறப்பட்ட நிலையில், திடீர் என மதுரையில் உள்ள மாரிதாஸ் இல்லத்தில் திமுக நிர்வாகி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் மாரிதாஸ்.
அதன் பிறகு பல்வேறு வழக்குகளில் மீண்டும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாரிதாஸிற்கு ஆதரவாக இந்து முன்னணி மற்றும் பாஜக போன்ற அமைப்புகள் களத்தில் இறங்கி பணி செய்தனர், இறுதியாக அனைத்து வழக்குகளில் இருந்தும் வெளிவந்தார் மாரிதாஸ்.
இந்த சூழலில் மாரிதாஸ் விரைவில் பாஜகவில் இணைகிறார் என்று கூறப்பட்ட நிலையில் பல மாதங்கள் கடந்து சென்று கொண்டு இருக்கின்றன. இதற்கிடையில் மாரிதாஸ் சமீபத்தில் அவரது முகநூல் பக்கத்தில் "அரசியல் கற்கிறேன்" என்று தெரிவித்த கருத்துக்கள் பல்வேறு விமர்சனங்களை உண்டாக்கியது, தொடர்ச்சியாக சென்னையில் உள்ள மாரிதாஸ் இல்லத்தில் மாரிதாஸ் சந்தித்து கலந்தாலோசனை செய்தார்.
மாரிதாஸ் உடன் தமிழருவி மணியன் சந்தித்த இந்த சந்திப்பானது அரசியல் தொடர்புடையதா அல்லது தனிமனித சந்திப்பா என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. மேலும் இன்றைய தினம் தமிழருவி மணியன் ரஜினிகாந்தை சந்தித்து ஆலோசனை செய்து இருப்பது மீண்டும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மாரிதாஸ் விரைவில் பாஜகவில் இணைகிறார் என்று கூறப்படும் நிலையில் அவருக்கான தகுதியான பொறுப்பை வழங்கிட ரஜினிகாந்த் மூலம், முக்கிய பாஜக நிர்வாகிகளிடம் மாரிதாஸ் தரப்பு பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
மாரிதாஸ் மாநில பொதுச் செயலாளர் பதவியை கேட்பதாகவும் அவருக்கு வேறு பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுவதால் பல்வேறு இழுபரிகள் தொடர்ந்து நீடித்து வருவதாக கூறப்படுகிறது, எது எப்படியோ அனைத்து சச்சரவுகளும் நீங்கி மாரிதாஸ் பாஜகவில் இணைந்தால் அவரை வரவேற்க ஒரு தரப்பு தயாராகி வருகிறது.
ஏற்கனவே அண்ணாமலை தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பையும் தாக்கத்தையும் உண்டாக்கி வரும் சூழலில் அவருக்கு பக்கபலமாக மாரிதாஸ் பாஜகவில் இணைந்து செயல்பட்டால் இருவரது செயல்பாடு மேலும் கட்சிக்கு வலுசேர்க்கும் என்று இளைஞர்கள் மத்தியில் பேசுபொருளாக இருக்கிறது.