24 special

ஆங்கில சேனலுக்கு அண்ணாமலை கொடுத்த பேட்டி "200" நிலைமை படு கிண்டல்!

annamalai
annamalai

ஆங்கில இணைய ஊடகமான ஸ்வராஜ பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நேர்காணல் செய்து இருந்தது, இதில் கேட்கப்பட்ட கேள்விகள் பலவும் தமிழக அரசியலில் முக்கிய கோணமாக பார்க்க படுகின்றன, பத்திரிகையாளர்கள் மீதான விமர்சனம் 


தொடங்கி, தமிழகத்தில் பாஜக வெல்ல வாய்ப்பு இருக்கிறதா? ஆளும் திமுக அரசின் செயல்பாடு குறித்தும் இதில் விரிவாக பேசி இருக்கிறார் அண்ணாமலை.அண்ணாமலை பேசிய தகவல்களை சமூக வலைத்தளத்தில் செல்வநாயகம் அவர்கள் மொழி மாற்றம் செய்து பகிர்ந்து இருக்கிறார் அது பின்வருமாறு :-

உள்ளாட்சி தேர்தலில், 'பாஜக ஜெயிக்காவிட்டாலும் பாஜகவுக்கே என் ஓட்டு' என்று போட்டு தங்கள் ஆதரவை காட்டியிருக்கிறார்கள். 'எனக்கு தெரியும் பாஜக ஜெயிக்காமல் போகலாம். திமுக ஜெயிக்கலாம் என்றும் தெரியும். என்றாலும் பாஜகவுக்கே எங்கள் வாக்கு. 2024இல் உங்களுக்குத் தான் வாக்களிக்கப் போகிறோம்' என்ற மெசேஜை வாக்காளர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

அரவிந்தன் : ஊடகங்கள் பற்றி...அண்ணாமலை: அரசியல் கட்சிகள் ஊடகங்களின் உரிமையாளர்களாக இருந்து கொண்டு, தங்கள் ஐடியாலஜியை பரப்புவதற்கும், தங்கள் கட்சிக்காரர்களை ஊடகவியலாளர்களாகவும் வைத்துள்ளனர். ஊடகம் கட்சிகளின் ஊதுகுழல்களாக செயல்படும்போது பிரச்சினை உருவாகிறது. நிறைய கட்சி ஊடகங்கள் இருப்பதால், அவை லாபகரமாக இயங்க வாய்ப்பில்லாததால், நல்ல தரமான நிருபர்களும் கிடைப்பதில்லை . அவர்கள் தங்களை சங்கிகளின் விரோதிகள் என்றும் பாஜக விரோதிகள் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதிலிருந்து அவர்களது நடுநிலைத்தன்மை கேள்விக்குரியதாகிறது. Political parties owning media houses in Tamil Nadu - https://youtu.be/FnzUeqRLQDY?t=136 

அரவிந்தன் : தமிழ்நாடு அபிவிருத்தி பற்றி? அண்ணாமலை: தென் தமிழ்நாட்டில் அபிவிருத்தி குறைவாக உள்ளது. ராமநாதபுரம், தேனி, விருதுநகரில் அதிக அபிவிருத்தி தேவை. கொங்கு பகுதி மிகவும் வளர்ந்துள்ளது. தமிழகத்தின் அபிவிருத்தியில் 57% கொங்கு பகுதியில் உள்ளது. திராவிட மாடலில் 25% ஊழல் (https://youtu.be/FnzUeqRLQDY?t=373)



அரவிந்தன் : ஹ்யூமன் ரிசோர்ஸ் பற்றி... அண்ணாமலை: நேற்று கூட டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் வந்த செய்தியில் தமிழ்நாட்டின் கல்வி அறிவு / learning outcome இந்தியாவிலேயே மிகவும் பலவீனமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகள் திறனற்றவையாக (inefficient) உள்ளன. 10 ஆண்டுகளில், தமிழகத்தின் சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை 200இலிருந்து 1700 ஆக உயர்ந்துள்ளது. மக்களுக்கு தமிழக (பாடநூல்) திட்டத்தில் நம்பிக்கையின்மையை இது காட்டுகிறது. 50 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திலிருந்து பல அரசு ஊழியர்கள் (ஐ.ஏ.எஸ்...) உருவானார்கள். இன்று இல்லை. ஐஏஎம், ஐஐடி போன்றவற்றிலும் தமிழகம் பின் தங்கியுள்ளது. இதையெல்லாம் மறைக்க தமிழக முதல்வர் திராவிட மாடல் என்று ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கிறார். இஃப்தார் பார்ட்டிக்குப் போய், 'இது தான் திராவிட மாடல்' என்கிறார் ஸ்டாலின். இன்னொரு முறை வேறொன்றை திராவிட மாடல் என்கிறார். சட்டமன்றத்திலும் வெவ்வேறு விஷயங்களுக்கு 'திராவிட மாடல்' என்கிறார். அவருக்கு திராவிட மாடல் என்றால் என்ன என்ற தெளிவே இல்லை. ++++ (இன்னும் நிறைய சொல்கிறார் அண்ணாமலை). https://youtu.be/FnzUeqRLQDY?t=586

அரவிந்தன் : தமிழகத்தில் போராட்ட அரசியல் பற்றி கருத்து? தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது என்ன செய்யப்போகிறது?  அண்ணாமலை: தமிழக போராட்டங்கள் மக்கள் போராட்டங்களல்ல. அந்த போராளிகள் திமுகவின் பிரிவுகளே. எனவே, மக்களுக்கு தெரியும் இவர்கள் போலிகள் என்று. அபிவிருத்தி பற்றி உபாத்யாய் பேசும் போது, "எந்த அபிவிருத்தியும் மக்களுக்காக இல்லாவிட்டால், அது தோல்வியை தழுவும்" என்றார். பாஜகவின் மாடல் இது தான், 'மக்களுக்கு பயனளிக்க வேண்டும்'. சென்னை - சேலம் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் அன்று. அமெரிக்காவில், ஒரு பொருளின் விலையில் தளவாட செலவு (logistic cost) வெறும் 6 சதவீதம் தான். ஆனால் இந்தியாவில் அது 13 சதவீதமாக உள்ளது. பிரதமரின் கதிசக்தி அந்த செலவை 4 முதல் 5 சதவீதமாக குறைக்க திட்டமிடுகிறது. அதே போல, நியூட்ரின் திட்டம் பற்றி விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் 'இத்திட்டத்திற்கு தமிழகம் தான் சரியான் இடம்' என்று. ஆனால் சில போராளிகள் இதை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கிறார்கள். இது அவர்கள் தமிழகத்துக்கு செய்யும் துரோகம். 

தமிழகம் அடுத்த நிலைக்குப் போக, நிறைய விமான நிலையங்களும் உருவாக வேண்டும்.தமிழக பாஜக ஆட்சியில் அமரும்போது, நம் பாரம்பரியத்தில், சுற்றுச்சூழலில் சமரசம் (compromise) செய்யாமல், தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் நாளை எதிர்நோக்குகிறேன். பின்னால் வரும் சந்ததியினர் நம்மை குறை சொல்லக் கூடாது நாம் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை தவற விட்டோம் என்று.

https://youtu.be/FnzUeqRLQDY?t=1160

அரவிந்தன் : இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் உங்கள் தலையீடு பற்றி அண்ணாமலை: நம் தமிழ் ஊடகங்களும், தமிழ் இண்டலெக்சுவல்கள் இலங்கை பிரச்சினை பற்றிப் பேசும் போது, 'இலங்கையில் நடப்பதிலிருந்து துண்டிக்கப்பட்ட (disconnected) கருத்தாக' நான் பார்த்தேன். பிரதமராக மோதி ஜியும், கட்சியாக பாஜகவும் செய்வதிலிருந்தும் துண்டிக்கப்பட்டதாக பார்த்தேன். இலங்கைக்கு இந்தியா செய்திருக்கும் விஷயங்கள் மிகவும் தனித்துவமானது (unique). மற்ற நாடுகள் அங்கே சென்று அந்த நாட்டை சூறையாடுவதில் குறியாக இருக்கும் போது, இந்தியா, 'இலங்கையை பாதுகாப்பது நம் நாகரீக கடமையாக (civilizational duty)' பார்த்தது. 

https://youtu.be/FnzUeqRLQDY?t=1369

அரவிந்தன் : 'இந்தியா' என்று குறிப்பிடும் போது... (எந்த இந்தியா?)அண்ணாமலை: மோதி ஜியின் இந்தியா! இலங்கை சென்ற மோதி ஜி, "இந்தியாவும் இலங்கையும் நாகரீக இரட்டையர்கள் (civilization twins)' என்றார். மோதிஜிக்கு முன் (அரசியல் தலைவர்கள்), 'இலங்கையை நாம் எப்படி நமக்கு சாதகமாக உபயோகிக்கலாம்' என்று யோசித்தார்கள். இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தன்னுடைய அரசியல் நலனுக்காகவே - தன்னை ஐ.நா-வில் புகழ்த்து பேசுவதற்காக. தாரைவார்த்ததில் கருணாநிதியின் பங்கும் முக்கியமானது. மோதி ஜி வந்த பின், இலங்கையை 'உபயோகிப்பதை' விட்டு, இலங்கைக்கு உதவுவது நம் கடமை என்று மாற்றினார். மலையக தமிழர்களுக்கு 14 ஆயிரம் வீடுகள். இலங்கையின் கிழக்குப் பகுதி மக்களுக்கு 46 ஆயிரம் வீடுகள். தமிழக அரசியல்வாதிகள் (வாய்ச்சவடால்) பேசிக் கொண்டிருக்கும் வேளையில், மோதி ஜி அங்கே சென்று யாழ்ப்பாணத்தில் கலாச்சார மையத்தை ஒரு மில்லியன் டாலர் செலவில் கட்டிக் கொடுத்தார். 2009க்கு பிறகு - வட இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு இருப்பதாக நினைக்கும் தமிழர்கள் - இந்தியா மீது மிகவும் ஆத்திரத்துடன் இருந்தார்கள். அதை மாற்ற நிறைய வேலைகள் செய்திருக்கிறார் மோதி ஜி கடந்த 8 ஆண்டுகளில். தமிழக அரசியல்வாதிகளோ... 'அங்கே எப்படிப் போனேன், என்ன சாப்பிட்டேன் (ஆமை?), யாரிடம் பேசினேன்' என்றெல்லாம் சொல்வது தங்களை முன்னிறுத்தவே, இலங்கை மக்கள் நலனுக்காக இல்லை. 

https://youtu.be/FnzUeqRLQDY?t=1467

அரவிந்தன் : ஸ்டாலின் & ராகூல் இந்தியாவை 'ஒன்றியம், நாடல்ல' என்பது பற்றி கேட்கிறார் அதற்கு அண்ணாமலை அண்ணாமலை: அவர்கள் அப்படிப் பேசுவது மிகவும் வருத்தமளிக்கிறது. 

உயிரைக் கொடுத்து போராடிய நம் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அவர்கள் மதிப்பளிக்க தவறுகிறார்கள். (வீரமங்கை வேலுநாச்சியார், ஜான்ஸி ராணி, சிதம்பரனார் பற்றியெல்லாம் முக்கிய விவரங்கள் தருகிறார் @ https://youtu.be/FnzUeqRLQDY?t=1721 ). 

அண்ணாதுரை, கருணாநிதி எல்லாம் பேசாததை ஸ்டாலின் (ஒன்றியம் என்று) பேசுவதிலிருந்து அவர் வெளியிலிருந்து இயக்கப்படுகிறார் என்பதைக் காட்டுகிறது!! இது வேறு யாரோ உருவாக்கியது, அதை கிளி போல இவர்கள் பேசுகிறார்கள். 

இவர்கள் இப்படி பிதற்றுவதிலிருந்து, இளைஞர்கள் இந்தியாவின் உண்மையான வரலாற்றை புரிந்து கொள்கிறார்கள். அரவிந்தன் : 1990 முதல் பயங்கரவாதிகளால் பல இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. கொலைகாரர்கள் தண்டிக்கப்படவும் இல்லை. அது பற்றி...

அண்ணாமலை: திரு வெள்ளையன் முதல் ஆடிட்டர் ரமேஷ் ஐயா வரையும், அதற்கு பிறகும் நடந்த ஒவ்வொரு கொலையும் துரதிருஷ்டமானது. இவை யாவும் குறி வைத்து செய்யப்பட்ட கொலைகள். அடுத்த தலைவர்கள் உருவாகக் கூடாது என்பதற்காக செய்யப்பட்ட கொலைகள் இவை. ஆடிட்டர் ரமேஷ் இப்போது இருந்திருந்தால், சேலம் & அதை சுற்றியுள்ள பகுதிகளையும் பாஜக கோட்டையாகியிருப்பார். அரசுகள் இந்த கொலைகளை சரிவர கையாளவில்லை. விசாரித்த காவல்துறையும் சரிவர செய்யவில்லை. மத்திய உள்துறையிடம் இந்த வழக்குகளை எடுத்துக் கொள்ள சொல்லியிருக்கிறோம். இவர்கள் முட்டுக்கட்டைகள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில கிரிமினல்களை ஸ்டாலின் விடுதலை செய்ய முயன்ற போது கவர்னரிடம் சென்று அதை நிறுத்த வைத்தோம். https://youtu.be/FnzUeqRLQDY?t=2133

அரவிந்தன் : இந்த பயங்கரவாதிகள் உருவாக்கம் பற்றி உங்கள் கருத்து.அண்ணாமலை: தமிழ்நாடு பயங்கரவாதிகள் உருவாக்கத்தில் முன்னணியில் இருக்கிறது. ஹவாலாவிலும் தமிழகம் முதலிடம். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இவர்கள் ஊக்கம் பெறுகிறார்கள். இப்போதும் தைரியமாக நடு ரோட்டில் வெட்டிக் கொல்வதை பார்க்கிறோம். எம் சகோதரர் பாலசந்திரன் கொலையும் அம்மாதிரித் தான். கொலையாளிகளுக்கு, 'நமக்கு அரசு உதவி உள்ளது' என்ற மனநிலை இருப்பதால், தைரியமாக இந்த செயல்களில் இறங்குகிறார்கள். நீதித்துறையிலும் காவல்துறையிலும் பொதுமக்கள் நம்பிக்கை இழக்கிறார்கள் இதனால். இந்த நிலை தமிழகத்தின் முதலீடு, வளர்ச்சி எல்லாவற்றையும் பாதிக்கும். 

https://youtu.be/FnzUeqRLQDY?t=2323

அரவிந்தன் : லாவண்யா விவகாரம் போல பல விஷயங்கள் தமிழகத்தில் நடக்கின்றன. ஆனால் வெளியில் வருவதில்லை. இம்மாதிரி (மிஷநரி) பள்ளிகளில் நடக்கும் அவலங்கள் மறைக்கப்படுகின்றன. 

அண்ணாமலை: லாவண்யா விவகாரம், ஓமலூர் சுகன்யா, கள்ளக்குறிச்சி விவகாரங்களை பார்க்கும் போது, ஆங்கில சினிமா ஸ்பாட்லைட் நினைவுக்கு வந்தது. ஒரு கத்தோலிக்க பாதிரி குழந்தைகளை பலாத்காரம் செய்த விவகாரம் செய்தது பற்றியது அந்த படம். என்னைப் பொறுத்தவரை அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும், சமமாக நடத்தப்பட வேண்டும். ஆனால், ஒரு மதம் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் போது பிரச்சினை உருவாகிறது. லாவண்யா விவகாரத்தில் மாநில அரசே இந்த குற்றத்தில் பங்காளியாக உள்ளது. ஒரு வழக்கை எப்படி விசாரிக்க கூடாது என்பதற்கு சுகன்யா விவகாரம் எடுத்துக் காட்டு. தற்கொலை என்று மூட முயற்சித்து, பிரேத பரிசோதனையில் ஆண் உயிரணுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு.

இதே போல பல வழக்குகள் முதல் தகவலறிக்கை கூட இல்லாமல் மூடப்படுகின்றன. வயிற்று வலியால் தற்கொலை, மதிப்பெண்கள் குறைந்ததால் தற்கொலை என்று மூடி மறைக்கிறார்கள். இவற்றை விசாரிக்க ஆரம்பித்தால், பிரச்சினை பூதாகரமானதாக கிளம்பும். லாவண்யா விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் (பள்ளி தரப்பில்?) ஆஜரான  வழக்கறிஞர்களில் ஒருவர் ஒரு கோடி ஃபீஸ் வாங்குபவர், மற்றொருவர் 80 லட்சம் வாங்குபவர். பணம் எங்கிருந்து வருகிறது? குற்றம் சாட்டப்பட்டவர் சிறையிலிருந்து பெயிலில் வரும் போது திமுக எம்.எல்.ஏ வரவேற்கிறார். இதன் பின்னே பெரிய ஈக்கோ சிஸ்டம் உள்ளது - திமுக இதில் ஒரு அங்கம் தான். ஈக்கோ சிஸ்டத்தை கண்டறிந்து களைய வேண்டியது அவசியம். 

https://youtu.be/FnzUeqRLQDY?t=2512

அரவிந்தன் : பேரறிவாளன் விடுதலை பற்றி.அண்ணாமலை: சமுதாயம் இதில் தோற்று விட்டது என்பதில் சந்தேகமே இல்லை. ராஜீவ் காந்தியோடு 17 பேர் உயிரிழந்தார்கள். கொலை செய்தவர்களை குற்றவாளிகள் என்று நீதிமன்றம் பல முறை தன் வெவ்வேறு தீர்ப்புகளில் ஊர்ஜிதம் செய்துள்ளது. நீதித்துறையின் அத்தனை ஓட்டைகளையும் உபயோகித்து அவர்கள் மனு போட்டார்கள். முடிவில் நீதிமன்றம் தன் சிறப்பு உரிமையை (142) உபயோகித்து அவரை வெளியில் விட்டிருக்கிறது. அவர் அவர் வாழ்க்கையை வாழட்டும். ஆனால், அவரை கொண்டாடுவது, பெரியாளாக்குவது, திராவிட மாடலின் நீதி, திமுகவின் வெற்றி என்றெல்லாம் சொல்வதன் மூலம் இளைய தலைமுறைக்கு என்ன மெசேஜ் கொடுக்கிறார் முதல்வர்? இதற்குத் தான் பிரதமர் மோதி ஜி சொல்கிறார், 'வாரிசு அரசியலில் நாட்டுக்கு ஆபத்து. தங்களை முன்னிறுத்த இந்த டைனஸ்டிகள் என்ன வேண்டுமானாலும் செய்யும்' என்று.பேரறிவாளன் விவகாரம் மோதி ஜி சொன்னதை ஊர்ஜிதம் செய்கிறது - முதலில் குடும்பம், பிறகு மாநிலம், கடைசியில் நாடு. 

https://youtu.be/FnzUeqRLQDY?t=2761

அரவிந்தன் : இந்த 'இருள்' எப்போது முடியும்?  அண்ணாமலை: மோதி ஜி தமிழகம் வந்த போது, 8 லட்சத்து 40 ஆயிரம் பேர் வெல்கம் மோடி என்று ட்வீட் செய்திருக்கிறார்கள். இதை எந்த மாநிலமும் செய்ததில்லை. எங்கள் ஐ.டி ஆட்களை கேட்கும் போது, 'வழக்கமாக 2 லட்சம், இரண்டரை லட்சம் ட்வீட்டுகள் இருக்கும். இம்முறை, எங்களுக்கே தெரியவில்லை எப்படி என்று. பொது மக்களும் தாமாக சேர்ந்து வெல்கம் மோடி என்று ட்வீட் செய்திருந்தாலொழிய இந்த எண்ணிகை சாத்தியமில்லை' என்கிறார்கள். இதுவே ஒரு வெற்றி என்று நினைகிறேன். பொது மக்கள் வரவேற்பு கொடுத்திருப்பது, 'இந்த அரசியல் ஐடியாலஜி தேவை, தேசியம் தேவை, மோதிஜி சொல்வது சரிதான்' என்பதை உறுதி செய்வதாக நினைக்கிறேன். இது வரை பொதுஜனம் நம் குரலுக்கு ஏது மதிப்பு என்று விலகியிருந்திருக்கலாம். ஆனால் இம்முறை பேசியிருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில், 'பாஜக ஜெயிக்காவிட்டாலும் பாஜகவுக்கே என் ஓட்டு' என்று போட்டு தங்கள் ஆதரவை காட்டியிருக்கிறார்கள். 'எனக்கு தெரியும் பாஜக ஜெயிக்காமல் போகலாம். திமுக ஜெயிக்கலாம் என்றும் தெரியும். என்றாலும் பாஜகவுக்கே எங்கள் வாக்கு. 2024இல் உங்களுக்குத் தான் வாக்களிக்கப் போகிறோம்' என்ற மெசேஜை வாக்காளர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

மாற்றத்துக்காக ஏங்குகிறது தமிழகம். ஸ்டாலின் ஐடி விங் நினைக்கிறது அவர்கள் எதிரி பாஜக ஐடி விங் என்று. ஆனால் உண்மையில் திமுகவின் எதிரி சாமானியர்கள். அரவிந்தன் : எந்த குறிப்பிட்ட வருடத்தில் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்பதை சொல்லுங்கள். 

அண்ணாமலை: 2026 பலரும் கேட்கிறார்கள் - 'இப்போதிருக்கும் 4 எம்.எல்.ஏயிலிருந்து 118 எப்படி சாத்தியம்' என்று. தமிழகத்தில் மாற்றம் என்பது எப்போதுமே ஒரு அலையாகத்தான் வந்திருக்கிறது, துளியாக இல்லை (always as a WAVE & not as a DROP). எம்.ஜி.ஆர் வந்த போது - ஒரு அலை. திமுக என்னையும் பாஜகவையும் தினமும் தாக்கக் காரணம் அவர்களுக்கு கள நிலவரம் தெரிந்து விட்டது என்பதால் தான். அவர்கள் களத்தில் மாற்றத்தை பார்க்கிறார்கள். 2024இல் (பாராளுமன்ற தேர்தலில்) 25 இடங்களை வெல்வோம். என்றாலும், பாரம்பரியமாக திமுகவுக்கு வாக்களிக்கும் 10 - 12% திமுகவுடனேயே இருக்கும். அவர்களை மாற்ற முடியாது. ஆண்டவன் அவர்களை ஆசீர்வதிக்கட்டும் (காட் ப்ளெஸ் தெம்). மற்றவர்கள் விஷயத்தை புரிந்து கொண்டார்கள் (எங்களுக்கே வாக்களிப்பார்கள்). பாஜக ஆட்சியமைக்கும். பாஜக  முதல்வர் அதிகாரத்தில் இருப்பார். 

https://youtu.be/FnzUeqRLQDY?t=3295 .