தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு புது விவாகரங்களை வெளியில் கொண்டு வருகிறது அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக நிலைமைதான் தனிமரமாக மாறி வருவதாக அறிவாலய வட்டாரங்களில் பேசப்படும் செய்திதான் விடுதலை சிறுத்தைகள் மனதை மிக பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றன.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை திமுக கைப்பற்றியதை தொடர்ந்து முதல்முறையாக முதல்வராக பொறுப்பேற்றார் ஸ்டாலின், ஸ்டாலின் ஆட்சியை இதுநாள் வரை திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட இயக்கங்கள் பாராட்டியே வந்து இருக்கின்றன.
ஆனால் தற்போது அந்த உறவில் சற்று விரிசல் விழுந்து இருப்பதாக கூறப்படுகிறது, சமீபத்தில் தனியார் கட்டுமான நிறுவனம் கொடுத்த புகாரில் தனியார் பத்திரிகை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, இந்த விவகாரம் ஆளும் திமுக அரசிற்கு பெரும் தலைவலியாக முடிந்தது, திமுகவின் மிக பெரிய ஆதரவாளர்கள் என அறியப்படும் பத்திரிகையாளர் தரப்பே திமுக அரசிற்கு எதிராக போராட்டம் நடத்தியது கடும் அதிர்ச்சியை அரசிற்கு கொடுத்தது.
இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்ட அரசு பத்திரிகை மீது போடப்பட்ட வழக்கில் முகாந்திரம் இல்லை என்று கூறி பின்வாங்கியது, இது ஸ்டாலின் அரசின் பெரும் பின்னடைவாக பார்க்க பட்டது, இந்த சூழலில்தான் திமுகவிற்கு ஆதரவாக அதன் கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கவில்லை என்று குற்றசாட்டு எழுந்தது.
மேலும் எப்போது பார்த்தாலும் தமிழக காவல்துறை மீதும் தமிழக அரசு அதிகாரிகள் மீதும் விசிக குற்றம் சுமத்தி வருகிறது போதாத குறைக்கு ஆர்எஸ்எஸ் அதிகாரிகள் திமுக ஆட்சியில் இருக்கிறார்கள் என்றெல்லாம் விசிகவினர் பேசி வருகின்றனர் இது பொதுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை நமது அரசிற்கு உண்டாக்கி இருப்பதாக திமுக தலைமைக்கு பல தரப்பிலும் புகார் சென்றுள்ளது.
அதோடு நில்லாமல் இடதுசாரிகள் மற்றும் விசிக கட்சிகள் இணைந்து பெட்ரோல் விலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி மத்திய அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர், ஏற்கனவே பாஜக தரப்பில் மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்க ஏதுவாக வரியை குறைத்து விட்டது, ஆனால் மாநில அரசான திமுக பெட்ரோல் விலையை குறைக்கவில்லை என்று கூறி கோட்டையை முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நேரத்தில் விசிகவும் தனியே ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆளும் திமுகவிற்குதான் சிக்கலை உண்டாக்கும் என தலைமையிடம் தெரிவித்து இருக்கின்றனர், மேலும் ராஜ்ய சபா உறுப்பினர்கள் தேர்வில் கூட்டணி கட்சியான விசிக மற்றும் இடதுசாரிகள் போன்றவர்களை முறையாக அழைத்து ஆதரவு திரட்டவில்லை என ஆதங்கத்தில் இருக்கிறதாம் விசிக,
எனவே இப்போதே கூட்டணி கட்சிகளுக்கு கடிவாளம் போடவேண்டும் என திமுக தலைமைக்கு தகவல் மேல் தகவல் செல்ல உடனடியாக முதல்வர் ஸ்டாலின் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செயல்பட்டு இருக்கிறார் என்கின்றனர் அறிவாலய வட்டாரங்கள்.
நேற்றைய தினம் பாமக மாநில தலைவராக அன்புமணி தேர்வு செய்யபட்டார் இதற்கு பாமக கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக, அதிமுக போன்றவை வாழ்த்து தெரிவிப்பதற்கு முன்பே ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார், பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டார் ஸ்டாலின்.
எங்களின் ஜென்ம எதிரி பாமக மற்றும் பாஜக என திருமாவளவன் குறிப்பிட்டு இருந்தார் மேலும் பாமக பாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் தெரிவித்து இருந்தார் திருமா அப்படி இருக்கையில் முதல்வர் ஸ்டாலின் பாமக தலைவருக்கு சமூக நீதி முன்னேற்றத்திற்காக பாடு பட வாழ்த்துக்கள் என தெரிவித்து இருப்பது நிச்சயம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
விரைவில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் பட்சத்தில் சிறுத்தைகள் தொடர்ந்து திமுக கூட்டணியில் இடம்பெறுமா என்பதே கேள்வி குறிதான் என்கின்றன அரசியல் அறிந்தவர்கள். இது சிறுத்தைகளுக்கு அதிர்ச்சியை கொடுத்தால் நேற்றைய தினம் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் அதில் இடம்பெற்ற வாசகங்கள் திமுகக்கூட்டணியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறதாம்.
திறக்கப்பட்ட கருணாநிதி சிலையில் 5 வது வாக்கியமாக மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என எழுதப்பட்ட வாசகம் திமுக மத்திய ஆட்சியில் கூட்டணியில் இடம்பெற அடி போடுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறதாம் இதன் பின்னணி தகவல்கள் குறித்து அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம் மறக்காமல் TNNEWS24 டிஜிட்டல் பக்கத்தை FOLLOW செய்து கொள்ளவும்.
மொத்தத்தில் பாமக தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தது மூலம் திருமா கனவில் மண்ணள்ளி போட்டுவிட்டார் முதல்வர் என்கின்றனர் கடந்த கால கூட்டணி ரகசியம் அரசியல் அறிந்தவர்கள்.