24 special

அஜித் குமார் வழக்கு முடிவதற்குள் அடுத்த லாக்கப் ம*ணம் சற்றுமுன் பா.ஜக வெளியிட்ட முக்கிய செய்தி திமுக கடும் அதிர்ச்சி

ANNAMALAI,MKSTALIN
ANNAMALAI,MKSTALIN

திரு​மலா பால் நிறு​வனத்​தில் ரூ.40 கோடி கையாடல் விவ​காரத்​தில் சிக்​கிய மேலா​ளர் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடல​மாக மீட்​கப்​பட்​டார். ஆந்​திர மாநிலம், கிருஷ்ணா மாவட்​டம் வையூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் நவீன் பொலினேனி(37). திரு​மண​மாகி குடும்​பத்​துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்​டானியா நகர், முதல் தெரு​வில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசித்து வந்​தார். இவர் சென்​னை​யில் உள்ள திரு​மலா பால் நிறு​வனத்​தில் கடந்த மூன்​றரை ஆண்​டு​களாக கரு​வூல மேலா​ள​ராகப் பணி​யாற்றி வந்​தார்.


இந்​நிலை​யில், அண்​மை​யில் திரு​மலா பால் நிறு​வனம் அவர்​களது நிறுவன வரவு-செலவு கணக்​கு​களை சரி​பார்த்து தணிக்கை செய்​துள்​ளது. அப்​போது, ரூ.40 கோடி முறை​கேடு நடை​பெற்​றிருப்​பது தெரிய​வந்​தது. நவீன் அந்த பணத்தை கையாடல் செய்​த​தாக​வும், அந்த பணத்தை அவரது குடும்​பத்​தினர் மற்​றும் நண்​பரின் வங்கி கணக்​குக்கு மாற்றி மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக​வும் குற்​றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்​பாக அந்​நிறு​வனம் சார்​பில் கடந்த மாதம் 25-ம் தேதி கொளத்​தூர் காவல் மாவட்ட துணை ஆணை​யர் பாண்​டிய​ராஜனிடம் புகார் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, போலீ​ஸார் நவீனை, நேரில் வரும்​படி கூறி போனில் அழைத்து விசா​ரித்​த​தாக​வும், அப்​போது, ‘பணத்தை திருப்பி கொடுத்து விடு​கிறேன். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டாம்’ என போலீ​ஸாரிடம் நவீன் கெஞ்சி கேட்​டு கொண்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு, அவர் வீட்​டருகே உள்ள குடிசை​யில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடமாகக் கிடந்​தார். தகவல் அறிந்து புழல் போலீ​ஸார் சம்பவ இடம் சென்​று, நவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​வ மனைக்கு அனுப்பி வைத்​தனர். மேலும், போலீ​ஸாரின் விசா​ரணைக்கு பயந்து நவீன் தற்​கொலை செய்து கொண்​டா​ரா? அல்​லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்​கில் தொங்க விட்​டன​ரா? என்​பது குறித்து போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

இதற்​கிடையே, நவீனின் குடும்​பத்​தினர் கூறும்​போது, ‘‘நேற்று முன்​தினம் நவீனை பார்க்க அவருடன் பணிபுரிந்த ஊழியர்​கள் இரு​வர் வந்​தனர். பணத்தை திருப்பி கொடுத்து விட்​டால் மட்​டும் சும்மா விட்​டு​விடு ​வோம் என நினைக்க வேண்​டாம். உன்னை எப்​படி​யும் சிறை​யில் தள்ளி விடு​வோம் என்று மிரட்​டினர். அதே​போல், போலீ​ஸாரும் கடும் நெருக்​கடி கொடுத்​த​தால் நவீன் இந்த முடிவை எடுத்​திருக்​கலாம்’’ என குற்​றம்​சாட்​டினர்.

இந்த நிலையில்  தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமலாபால் நிறுவனத்தில் பணம்கையாடல் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜனால் சட்டவிரோதமாக விசாரிக்கப்பட்டு வந்த திருமலா நிறுவனத்தின் மேலாளர் நவீன் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவரும் அதிர்ச்சி செய்திகள், நம்பும் படியாக இல்லை. அவரது மரணம் குறித்த முறையான விசாரணை நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

 பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை தனது எக்ஸ் தளத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: திரு​மலா பால் நிறுவனத்​தின் கரு​வூல மேலா​ள​ராக பணி​யாற்றி வந்த நவீன் என்​பவர், அந்த நிறு​வனத்​தில் பணம் கையாடல் செய்​த​தாகக் குற்றச்சாட்டு எழுந்​ததை அடுத்​து, சென்னை கொளத்​தூர் காவல் மாவட்ட துணை ஆணை​யர் பாண்​டிய​ராஜன் விசா​ரித்து வந்த நிலை​யில், சடல​மாக மீட்​கப்​பட்​டுள்​ளார்.

திருப்​புவனம் இளைஞர் அஜித்​கு​மார், காவல்​துறை​யின​ரால் அடித்​துக் கொல்​லப்​பட்ட துயர சம்​பவத்​தின் வடுமறை​யும் முன்​பே, மீண்டும் காவல்​துறை சட்​டத்தை மீறிசெயல்​பட்​டுக் கொண்​டிருக்​கிறது என்​றால், உண்​மை​யில் காவல்​துறை, முதல்வர் ஸ்டா​லின் கட்​டுப்​பாட்​டில் இல்லை என்​பதே உண்​மை. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.