24 special

திமுக ஆட்சியை கவிழ்க்கும் மற்றொரு வீடியோ... காத்திருந்த திமுக பெரும் ஷாக் !ஆட்சி போதும்டா சாமி

MKSTALIN
MKSTALIN

சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள குடியிருப்பு பகுதியில் டெலிவரி ஊழியர் ஒருவர் மீது இரண்டு பேர் தாக்குதல் நடத்திய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


சென்னை வேளச்சேரி லட்சுமி நகரை சேர்ந்த பார்த்திபன், Zepto நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார்.வேளச்சேரி ஜே.என். நகர் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் அவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் அவரை விரட்டி வந்து வழிமறித்து  பார்த்திபனை கீழே தள்ளி, கத்தி மற்றும் அரிவாளால் தாக்கினார்கள்.  குடியிருப்புகள் நடுவே நடைபெற்ற இந்த தாக்குதலில் பார்த்திபன் காயமடைந்துள்ளார். வலியால் அலறிய அவரது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் உடனடியாக திரண்டனர். கற்கள் மற்றும் கட்டைகளை எடுத்துக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை அவர்கள் விரட்டி அடித்தனர்.இதையடுத்து பொதுமக்கள் பார்த்திபனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் மதுபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சியில், மதுபானம், கஞ்சா, செயற்கை போதைப்பொருட்கள் கட்டுப்பாடின்றி பரவியுள்ளன என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. பள்ளி, கல்லூரி வாசல்கள் முதல் குடியிருப்பு பகுதிகள் வரை போதை கலாச்சாரம் வேரூன்றியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாக, இளைஞர்கள் குற்றவாளிகளாக மாறுவதும், ரவுடிசம் தினசரி செய்தியாக மாறுவதும் சாதாரண நிகழ்வாகி விட்டது.

ஆனால், இந்த சமூக சீரழிவுகளுக்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லை. விளம்பரங்களிலும் மேடைகளிலும் “திராவிட மாடல்” ஆட்சி என்று பேசப்படும் நிலையில், தரையில் பொதுமக்கள் பயத்தில் வாழும் சூழல் நிலவுகிறது. ஒரு சாதாரண தொழிலாளி வேலைக்கு செல்லும் போதும், ஒரு பெண் சாலையில் நடக்கும் போதும், “பாதுகாப்பா திரும்புவோமா?” என்ற அச்சம் தவிர்க்க முடியாததாகி உள்ளது.

வேளச்சேரி சம்பவம் தனிப்பட்ட ஒரு குற்றச்செயல் அல்ல; இது திமுக ஆட்சியின் ஒட்டுமொத்த நிர்வாக தோல்வியின் பிரதிபலிப்பு என விமர்சகர்கள் கூறுகின்றனர். குற்றவாளிகளுக்கு சட்டத்தின் பயம் இல்லாததும், பொதுமக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை குறைந்ததும் தான் இத்தகை இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்?”, “இன்னும் எத்தனை வேளச்சேரி சம்பவங்கள் நடக்க வேண்டும்?” என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தமிழகம் முழுவதும், திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு அதிகரித்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

வேளச்சேரி சம்பவம், தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு முற்றிலும் கை விட்டுவிட்டதை நிரூபிக்கும் கருப்பு சான்று என்றும், இந்த சீரழிவை இனியும் அனுமதிக்க முடியாது என்றும் பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் பின்னணியில், பொதுமக்களின் ஒரே குரல் இன்று தெளிவாக ஒலிக்கிறது —ஆட்சி போதும்டா சாமி!”