
இந்தியாவின் எரிசக்தி வரலாற்றில் இது ஒரு புதிய மைல்கல்! அசாம் - நாகாலாந்து எல்லைப் பகுதியில் புதைந்து கிடந்த ஆகப்பெரும் புதையல் கதவை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அதிரடியாகத் திறந்துவிட்டுள்ளது. மிஷனரி பின்புலம் கொண்ட பயங்கரவாத அமைப்புகளின் மிரட்டல்கள், போதை மாஃபியாக்களின் சதிவலைகள், காங்கிரஸ் காலத்து முடங்கிப்போன சட்டச் சிக்கல்கள் என கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த முட்டுக்கட்டைகள் அனைத்தும் இந்த ஒற்றை ஒப்பந்தத்தின் மூலம் தவிடுபொடியாகி உள்ளன.
மத்திய அரசு, அசாம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கு இடையே கையெழுத்தாகியுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியாவின் எனர்ஜி செக்டாரில் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றியமைக்கப் போகும் ஒரு 'மாஸ்டர் ஸ்ட்ரோக்'. 1980-களிலிருந்தே அச்சுறுத்தல்களால் முடக்கப்பட்டிருந்த 'நாகா-ஷுப்பென் பெல்ட்' மற்றும் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் (DAB) உள்ள 1,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வுப் பணிகளை உடனடியாகத் தொடங்க மோடி அரசு அதிரடி காட்டியுள்ளது.
இங்கு புதைந்து கிடக்கும் இயற்கை வளங்களின் சந்தை மதிப்பு மட்டும் சுமார் ₹25,20,000 கோடி! சுமார் 2.38 மில்லியன் டன்கள் கச்சா எண்ணெய் இருப்பு உள்ள இந்தப் பகுதியில், தற்போது நாளொன்றுக்கு வெறும் 1,000 பேரல்களாக இருக்கும் உற்பத்தியை, 10 மடங்குக்கும் மேலாக, அதாவது 10,000 முதல் 15,000 பேரல்களாக உயர்த்த மெகா இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தினசரி தேவையான 5.5 மில்லியன் பேரல்களுக்கு இந்த உற்பத்தி மிக முக்கியப் பங்களிப்பை வழங்கப்போகிறது.
போராளிகள் என்ற போர்வையில் களம் இறங்கிய தீவிரவாத அமைப்புகள் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ONGC-யை துப்பாக்கி முனையில் மிரட்டி விரட்டியடித்த நிலையை மாற்றி, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி, எத்தனையோ குடைச்சல்களையும் தாண்டி, "தாவு தீரும்" அளவுக்குப் போராடி இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது பா.ஜ.க அரசு.
இனி இந்த எல்லையோரப் புதையலில் இருந்து கிடைக்கும் வருவாயை அசாம் மற்றும் நாகாலாந்து மாநிலங்கள் 50:50 என்ற விகிதத்தில் சமமாகப் பகிர்ந்து கொள்ளப் போகின்றன. பொதுத்துறை மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் கூட்டாகக் களம் இறக்கப்படுவதால், கச்சா எண்ணெய் மட்டுமின்றி, உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களுக்குத் தேவையான 'ரேர் எர்த் மினரல்ஸ்' எனப்படும் அரிய வகை கனிமங்களும் இங்கிருந்து அள்ளப்படவுள்ளன.
இதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் வரலாறு காணாத வேலைவாய்ப்புப் புரட்சியும், பிரம்மாண்ட பொருளாதார முன்னேற்றமும் பாயப்போவது உறுதி. சதிகாரர்களின் முடக்கத்தை உடைத்து, பாரத மண்ணின் வளத்தை பாரத மக்களுக்கே கொண்டு வந்து, இந்தியாவின் 'எரிசக்தித் தன்னிறைவை' அடுத்த லெவலுக்குக் கொண்டு சென்றுள்ளார் நரேந்திர மோடி!
