24 special

மேயர் பிரியாவை குறி வைத்த அறப்போர் இயக்கம்...! சிக்குகிறாரா மேயர் பிரியா...!

mk stalin, mayor priya
mk stalin, mayor priya

சென்னை மாநகராட்சியில் 49 வது மேயராக இருக்கும் ஃப்ரியா 29 வயதை அடைந்தவர் மேலும் இவர் சென்னையின் இளம் வயது மேயர், இவரது தந்தை திமுகவில் இருந்த காரணத்தினால் தேர்தலில் இவரையும் ஈடுபடுத்தி மக்கள் பணியில் ஆர்வம் இருப்பதாக தெரிவித்து 74ஆவது வார்டில் கவுன்சிலராக வெற்றி பெற்று சென்னை மேயராக தற்போது பதவி வகிக்கிறார். தற்போது பிரியா வகிக்கும் சென்னை மேயர் பதவி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வகித்த முன்னாள் பொறுப்பு என்றும் முதல்வர் பதவி வகித்த பொறுப்பில் தற்போது மேயர் பிரியா அமர்த்தபட்டதாக  ஏக பெருமையை அவர் பெற்றிருந்தாலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு அல்லது மேடைப்பேச்சு என்றாலே இவர் கூறும் வார்த்தைகள் சர்ச்சைகளை ஏற்படுத்தும்.அதுமட்டுமல்லாமல் சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரும் புயல் வந்த பொழுது அதனை பார்வையிடுவதற்காக முதல்வர் பாதிக்கப்பட்ட இடத்திற்கு செல்ல அவருடன் சென்ற சென்னை மேயர் முதல்வரின் கார் வாசலிலே தொங்கி சென்ற செய்தி இணையங்களில் வைரலானது.


அதற்குப் பிறகு சென்னையில் மழை வெள்ளத்தால் மக்கள் அவதியுற்ற போது அவர் வெளிநாடு பயணங்களை மேற்கொண்டது காய்கறிகளின் விலை உச்சம் பெற்றபோது அதற்காக அரசு என்ன நடவடிக்கை செய்தது என்று கேள்விக்கு பதில் தெரியாது என்று கூறி மாமன்னன் படத்தை பற்றி மகிழ்ச்சியுடன் தெரிவித்தது என வரிசையாக அவர் சர்ச்சையில் மாட்டிக் கொள்ளாத விஷயமே இல்லை. இதனால் அறிவாலய தலைமையிடமிருந்து மேயர் பிரியாவிற்கு பொதுவெளிகளில் பேச வேண்டாம் என்ற மறைமுக உத்தரவும் போடப்பட்டதால் பெரும்பாலான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அறப்போர் இயக்கம் சார்பில் 16 மாதங்களில் ஒரு சாலை சரியாக இல்லை இதற்கு மேயர் பிரியா பதில் சொல்வாரா என்று பரப்புரை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ வாட்டர் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்களுக்கு சாலைகள் உடைக்கப்படுவதால் தான் சாலைகள் இவ்வாறு சேதமடைந்து இருக்கிறது என்ற மக்கள் அதிருப்தியில் இருந்து வருவதாக கள நிலவரங்கள் தெரிவிக்கிறது..

ஆனால் இதற்க்கு காரணம் திமுக ஆட்சியில் போடப்படும் சாலைகளின் தரம் மிகவும் மோசமாக இருப்பதும் மழை காலங்களில் சாலைகள் காணாமல் போக மிக முக்கியமான ஒரு காரணமாக இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. அதற்கு ஒரு உதாரணம் மணலியில் கடந்த வருடம் போடப்பட்ட TPP சாலை. சாலை போடப்பட்டு 16 மாதத்தில் அதன் நிலையை பாருங்கள். இது தான் சென்னை மாநகராட்சி போடும் சாலைகளின் தரமா? இதனால் தான் இன்று சென்னை முழுவதும் குண்டும் குழியுமாக இருக்கிறதா? மணலியில் இந்த சாலையை போட்ட ஒப்பந்ததாரர் மீது மேயர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்? அங்கே ஆய்வு செய்கிறோம் இங்கே ஆய்வு செய்கிறோம் என்று மேயரும் மாநகராட்சி ஆணையரும் போட்டி போட்டு சமூக வலைத்தளங்களில்  பதிவுகளை, படங்களை அள்ளி வீசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அந்த ஆய்வில் என்ன கண்டுபிடித்தார்கள்? தவுறுகளை கண்டுபிடித்து அந்த தவறை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்களா? இனியாவது எடுப்பார்களா?  என்று அறப்போர் இயக்கத்தின் சமூக வலைதள எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதனால் மேயர் பிரியாவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் மேயர் பிரியா இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா என்று சரமாரியாக கேள்வியை முன் வைத்துள்ளது. அதோடு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் புகார் கொடுக்க தயாராக உள்ளதாகவும் இது குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் அறபோர் இயக்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேயர் பிரியா தரப்பில் இருந்து இன்னும் விளக்கம் அளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.