24 special

அதிமுக புதிய கூட்டணியை உருவாக்கினாலும் சிக்கலில்லை....பாஜக தலைவர் பதிலடி!

edapadi, ops
edapadi, ops

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தமிழத்தில் அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக விலகிய நாள் வரை பாஜக தலைமையில் இருந்து எந்த கருத்துக்களையும் முன் வைக்கவில்லை. அடுத்ததாக அரசியியலில் என்ன மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அதிமுகவில் இருந்து விலகிய பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பாஜக தலைமையில் இருந்து எனக்கு ஒருமாதகாலமாக அழைப்பு வந்து கொண்டு இருக்கிறது. காலம் வரும்போது கூட்டணி குறித்து அறிவிப்பேன் என தெரிவித்தார்.. இவரது பேச்சு மூலம் பாஜகவில் பன்னீர்செல்வம் கைகோர்ப்பது உறுதியானதாக பேச்சு அரசியல் வட்டாரங்கள் எழுந்தன. மேலும் அதிமுக -பாஜக பிளவு குறித்து கேட்டதற்கு பாஜகவுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்றச்சொல்ல, எடப்பாடி பழனிசாமிக்கு என்ன அருகதை இருக்கிறது? என கேள்வி எழுப்பிய ஓபிஎஸ், பாஜக தலைமை அதிமுகவில் எடப்பாடியை மாற்றச் சொன்னால், செய்வார்களா? எனவும் கேள்வி எழுப்பினார். 


பாஜக தலைமை ஏதும் அறிவிக்காத நிலையில் நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி செல்வதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை அதிமுக தலைமையில் புதிய கூட்டணி உருவானாலும் NDA கூட்டணிக்கு எந்தொரு பின்னடைவும் ஏற்படாது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "2024 மக்களவை தேர்தலில் எதனை இடங்களில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கும் என்ற எண்ணிக்கயை சொல்ல விரும்பவில்லை. தேர்தலுக்கு இன்னும் 7,8 மாதங்கள் இருக்கிறது. கட்சியைபி பலப்படுத்தும் பணியில் கவனம் செலுத்தி வருகிறேன்" என்று கூறினார். டெல்லி செல்லும் அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்டதற்கான காரணங்கள் குறித்து அண்ணாமலை அறிக்கை அளிக்கலாம் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், அதிமுக இல்லாமல் கூட்டணியை வலுப்படுத்த முடியுமா அல்லது அதிமுகவை சமாதானம் செய்யும் வேலைகளில் ஈடுபட வேண்டுமா என்பது குறித்து அண்ணாமலைக்கு ஆலோசனை தரப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவை விட்டு விலகியதற்கான தண்டனையை இபிஎஸ் அனுபவிப்பார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து பேசிய அவர், பாஜக உதவியால் தான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்தினார். பாஜகவை விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிச்சாமி யாரோடு மெகா கூட்டணி அமைக்க போகிறார்?. மேலும், எடப்பாடி வசமுள்ள அதிமுக, நெல்லிக்காய் மூட்டை போல் நாலாபுறமும் எப்போது வேண்டுமானாலும் சிதறலாம். நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை டிசம்பர் மாதம் அமமுக  முடிவு செய்யும். எங்கள் கூட்டணி தேர்தலில் பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் ஓபிஎஸ், டிடிவி இருவரும் இணைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். இன்னும் பாஜக தலைமையில் இருந்து எந்த சிக்னலும் கொடுக்கப்படவில்லையாம் அதனால தான் இரண்டுபேரும் கூட்டணி குறித்து மௌனம் காத்து வருகின்றனர். மேலும், இதுவரை அமைத்து காத்து வந்த ஓபிஎஸ் முகம் தற்போது அதிமுக பாஜகவில் இருந்து விலகிய செய்தி கேட்டு பிரைட்டாக மாறியதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.