24 special

அயோத்திக்கு பிறகு இந்த கோவில்களா..? யோகி கூறியது என்ன..?

yogi adityanath
yogi adityanath

உத்திரபிரதேசம் : உத்தரகாண்ட் இடைத்தேர்தல் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநில தலைநகரான லக்னோவில் நடைபெற்ற ஒருநாள் மாநில செயற்குழு கூட்டத்தில் நேற்று முன்தினம் கலந்துகொண்டார். அதில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பற்றியும் மாநிலத்தில் நிலவும் அமைதி பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.


அயோத்தியில் ராமர் கோவில் எழுப்பப்பட்டதை தொடர்ந்து காசி விழித்துக்கொண்டுள்ளது என கூறிய முதல்வர் யோகி வ்ரிந்தாவன், நைமிஷ் தம் விந்தியாவசினி தம் மதுராவை பற்றிய குரல்கள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் " காசி விஸ்வநாதர் திருக்கோவில் நடைபாதை திறப்புவிழா நடைபெற்ற பின்னர் தினமும் ஒருலட்சம் பக்தர்கள் காசிக்கு வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப்பார்வைக்கு இணங்க காசியின் பெயருக்கேற்ப அதன் முக்கியதுவத்தை நிரூபித்து வருகிறோம். எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு ராமநவமி ஹனுமான் ஜெயந்தி மிக அமைதியான முறையில் நடைபெற்றது. இஸ்லாமிய பண்டிகையான ஈத்திற்க்கு முதல் கடைசி வெள்ளிக்கிழமை போக்குவரத்தை மறித்து தெருக்களில் நமாஸ் செய்யப்படாதது இதுவே முதல்தடவையாகும்.

அவரவர் மாதவழிபாட்டு தலங்களில் மற்றும் அவரவர் வீடுகளில் பண்டிகை கொண்டாடப்பட்டது. தேவையற்ற சத்தம் எப்படி அகற்றப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அனைவரும் ஒத்துழைக்கிறார்கள். மாநிலம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. மக்களும் அமைதியாக வாழ்கிறார்கள். இங்கு குற்றங்களுக்கும் குற்றவாளிகளுக்கும் இடம் இல்லை.

அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டத்தொடங்கியபின்னர் மதுரா, பிருந்தாவனம், விந்தியாவசினி தம் போன்ற புனித தலங்களும் மீட்டெடுக்கப்பட்டு  அந்த புனிதயாத்திரை தலங்கள் விழித்துக்கொள்ள வேண்டும் என குரல்கள் தற்போது எழத்தொடங்கியுள்ளன. மக்களின் விருப்பம் அதுவேயானால் காசி விஸ்வநாதர் துணைநிற்பார்" என மாநில செயற்குழு கூட்டத்தில் முதல்வர் யோகி உரையாற்றினார்.