உத்திர பிரதேசம் : சமூகம் சமூகமாக வாழ்ந்துவந்த பாரத தேசத்து மக்களை சாதிரீதியாக பிளவுபடுத்தி தேசத்தை தனது முழுக்காட்டுப்பாட்டில் வைத்திருந்தவன் பரங்கித்தலையன். அவனின் அதே குள்ளநரி தந்திரத்தை காங்கிரஸ் பயன்படுத்தியே அறுபது ஆண்டுகாலமாக மக்களை ஏமாற்றி வந்துள்ளது காங்கிரஸ் என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் இப்போதுள்ள எதிர்க்கட்சிகள் சிறுபான்மையின மக்களை வாக்குவங்கியாக மட்டுமே பார்ப்பதாகவும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கோ அவர்களின் முன்னேற்றத்திற்கோ ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை என பிஜேபியினர் மேலும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுசிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது என காங்கிரஸ் கூறிவருகிறது.
உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நீதிபதிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல உத்திரப்பிரதேசத்திலும் கொண்டுவரப்படலாம் என தெரிகிறது. இதையறிந்த ஜமியத் உலமா இ ஹிந்த் எனும் அமைப்பு பொதுசிவில் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை நேற்று நிறைவேற்றியுள்ளது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சிலமணிநேரங்களிலேயே உத்திரபிரதேச சிறுபான்மை நலத்துறை அமைச்சரான டேனிஷ் ஆசாத் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது " இந்த சட்டத்தின் மூலம் யாருடைய அரசியலமைப்பு உரிமைகளும் மீறப்படவில்லை. இந்த சட்டம் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல.
நாம் சாமானிய இஸ்லாமிய மக்களின் குரலுக்கு செவிசாய்க்கவேண்டும். சமாஜ்வாடி போன்ற முந்தைய அரசாங்கங்கள் செய்யதவறிய முன்னேற்றங்களை சாமானிய இஸ்லாமியர்கள் விரும்புகின்றனர். காங்கிரசும் சரி சமாஜ்வாடியும் சரி இஸ்லாமிய மக்களை வாக்குவங்கியாகவே பயன்படுத்தினர். நமது அரசின் கீழ் இஸ்லாமிய மக்கள் அனைத்து உரிமையையும் பெறுகிறார்கள். இஸ்லாமிய பெண்களுக்கு அவர்கள் கோரிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.
பிஜேபி அரசு எல்லாவகைகளிலும் இஸ்லாமிய மக்களின் முன்னேற்றத்திற்காக கடுமையாக பாடுபட்டு வருகிறது. பொதுசிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை நிச்சயமாக கொண்டுவருவோம். சிறுபான்மையினருக்கு அனைத்து நேரடி பலன்களும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அரசாங்கம் மட்டுமே இன்று அவர்களின் முன்னேற்றம் பற்றி சிந்திக்கிறது" என அமைச்சர் அசாத் அன்சாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.