புதுதில்லி : "இன்று நீங்கள் எங்களை பார்த்து சிரிக்கலாம். இரண்டே பேர் மட்டும் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள் என்று. ஒரு காலம் வரும். அப்போது காங்கிரஸ் என்ற கட்சியே இருக்காது. உலகம் உங்களை பார்த்து சிரிக்கும்" என நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமரும் பொக்ரான் நாயகனுமான பிதாமகன் வாஜ்பாய் கூறியது தற்போதும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பிதாமகரின் கூற்றைப்போலவே பிஜேபி என்னும் அரசியல் கட்சி ஆலமரமாய் தனது விழுதுகளை அனைத்து மாநிலங்களிலும் பரப்பி நிலைத்து நிற்கிறது. ஆனாலும் தென்னிந்தியாவை பொறுத்தமட்டில் பிராந்திய கட்சிகளே தங்களது ஆளுமையை நிரூபித்து வருகின்றன. கேரளாவை பொறுத்தமட்டில் மத அரசியல் பிரதானமாக பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால் தமிழ்நாடு ஆந்திரா ஆற்றும் தெலுங்கானாவில் சாதிரீதியாக ஓட்டுக்களே ஆட்சியை தீர்மானிக்கும் என உறுதியாக நம்பப்படுகிறது. பிஜேபிக்கு பெரும் சிம்மசொப்பனமாக விளங்கிவருவது இந்த நான்கு மாநிலங்கள் மட்டுமே. தெலுங்கானாவில் வியாபித்து வந்தாலும் மற்ற மூன்று மாநிலங்களில் பிஜேபியின் செல்வாக்கு கேள்விக்குரியதாகவே உள்ளது.
இதனால் மிஷன் சவுத் இந்தியா என்ற திட்டத்தை பிஜேபி தொடங்கியுள்ளது. நரேந்திர மோடி, அமித்ஷா,ஜேபி நட்டா என்ற மூன்று திருமூர்த்திகளும் இந்த மிஷனை கையிலெடுத்துள்ளனர். இந்த மிஷனை மூன்று பெரும் வழிநடத்தி செல்வார்கள் என கட்சியின் உயர்மட்டத்தலைமை அறிவித்துள்ளது. இதன் ஒருபகுதியாகவே கடந்த மாதம் அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோர் தெலுங்கானாவில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டனர்.
அதேபோல் கடந்தவாரம் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மக்களிடையே உரையாற்றினார். குடும்ப அரசியலை தாக்கி பேசியதோடு வம்ச அரசியலை அடியோடு அழிக்க வேண்டும் கூறினார். கேரளா மற்றும் தமிழகத்தில் 2026ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன் முன்னோட்டமாகவே பிரதமர் மோடி தமிழகம் வந்து பல நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல அமித் ஷாவும் தமிழகம் வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவிலுள்ள ஐந்து மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு போன்றவை மக்களவைக்கு 129 எம்பிக்களை தேர்ந்தெடுத்து அனுப்புகின்றன. அடுத்து வரும் 2024 மக்களவை தேர்தலில் இந்த மாநிலங்களும் ஆட்சியமைப்பதில் பெரும் பங்காற்றும் என்பதால் அதை குறிவைத்தே மும்மூர்த்திகளின் விஜயம் இருக்கும் என கருதப்படுகிறது.
மேலும் எட்டாண்டு சாதனைகளை இந்த ஐந்து மாநிலங்களிலும் மக்களிடம் எடுத்து செல்ல ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் நாடு முழுவதுமுள்ள பலவீனமான 72000 பூத்துகளில் கட்சியை வலுப்படுத்தவும் கூட்டணிகள் ஆதரவை பெறுவதிலும் இந்த மிசன் சவுத் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் என தெரிகிறது. இதனால் உயர்மட்ட தலைமை இந்த ஐந்து மாநிலங்களிலும் தனிகவனத்தை செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது.