24 special

நீங்க ஆரியரா..திராவிடரா..? பங்கமாய் கலாய்த்த முதல்வர்..!


கர்நாடகா : கர்நாடகாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகள் தேர்தல்பணியை முன்னெடுத்து வருகின்றன. அதேபோல கர்நாடக கடலோர மாவட்டங்களில் வசிக்கும் இஸ்லாமிய தலைவர்களை கம்யூனிஸ்ட் ரகசியமாக சந்திக்க இருக்கிறது. இதுபோல சில லெட்டர்பேட் கட்சிகளும் தங்கள் பங்குக்கு தயாராகி வருகின்றன.


இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவரான சித்தராமையா கூறுகையில் "ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை உருவாக்கிய ஆரியர்கள் இந்திய குடிமக்கள் அல்ல. இந்த நாட்டின் பூர்வீக குடிகளும் அல்ல.திராவிடர்களே பூர்வகுடிமக்கள்" என கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சித்தராமைய்யாவை பங்கமாக கலாய்த்துள்ளார்.

முதல்வர் கூறுகையில் " ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்திய வம்சாவளியா என்பது இருக்கட்டும். இதற்க்கு நாங்கள் பதிலளிக்குமுன் அவர் திராவிடரா அல்லது ஆரியரா என முதலில் கூறட்டும்" என செய்தியாளர்களிடம் கூறினார். முதல்வரின் இந்த கேள்வியை சீண்டும் விதமாக நேற்று சித்தராமைய்யாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்க்கு "ஆர்.எஸ்.எஸ் பற்றி பேசினால் இவருக்கு ஏன் கோபம் வருகிறது. எனது கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ்ஸை பற்றியது." என செய்தியாளர்களிடம் கூறினார். அதேபோல AIMIM தலைவரான அசாதுதீன் ஒவைசி நாங்கள் திராவிடர்கள். மற்றவர்கள் எல்லாம் வந்தேறிகள் என கூறியிருந்தார். இந்நிலையில் வரலாற்று ஆசிரியர்கள் கூறிய விஷயம் தற்போது இணையத்தில் வளம் வருகிறது.

லெமூரியா கண்டத்தில் இருந்து பிரிந்து வந்ததே குமரிக்கண்டம். அதில்தான் தமிழர்கள் வாழ்ந்துவந்தனர். ஆகவே தமிழர்களே வந்தேறிகள் தான் என ஒரு கூற்று தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.