புதுதில்லி : சீன இந்திய வர்த்தகத்தில் சீனாவின் கையே ஓங்கியிருந்தது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களால் மேலை நாடுகள் தங்கள் வர்த்தக உறவை இந்தியாவுடன் அதிகரித்து வருவது பொருளாதார முன்னேற்றத்தின் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான இந்தியாவில் அமெரிக்கா இதுவரை பெரிய அளவில் கால்பதிக்க தயங்கி வந்தது.
சீனாவுடனான இந்திய வர்த்தகத்தின் மதிப்பை கணக்கிட்ட ஜோ பிடென் பாரத பிரதமருடன் நட்புறவை வளர்த்துக்கொண்டார். அதன்பலனாக அமெரிக்க இந்திய வர்த்தகம் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்துள்ளது. 2021-22 சீனாவுடனான இந்தியாவின் இருவழி வைக்கம் 115.42 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த 2020-21ல் 86.4 பில்லியன் டாலராக இருந்தது.
வர்த்தக அமைச்சகத்தின் கூற்றுப்படி 2020-21 ஆம் ஆண்டின் இருதரப்பு வர்த்தகம் 80.51பில்லியன் டாலராகும். 2021-22ல் அது 119.42 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது இந்திய சீன வர்த்தகத்தின் மதிப்பை விட அதிகமாகும். இதனால் சீனாவை புறம்தள்ளி இந்தியாவின் மிகப்பெரிய பங்காளியாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.
2021-22 நிதியாண்டில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 76.11 பில்லியன் டாலராக அதிகரித்துள்ள நிலையில் இறக்குமதி 43.31 பில்லியன் டாலரளவில் உயர்ந்துள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் இருதரப்பு வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு துணைத்தலைவர் காலித் கான் " சர்வதேச நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த சீனாவை மட்டுமே அதிகம் நம்பியிருந்தன. ஆனால் இந்தியா நமபகத்தன்மையான வர்த்தகபங்காளியாக உருவெடுத்து வருவதால் இந்தியாவில் பிறநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் சந்தைப்படுத்துவதை அதிகரித்து வருகின்றன.
இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பை ஏற்படுத்த (IBEF) அமெரிக்கா தலைமையில் இந்தியா இணைந்துள்ளது. இது பொருளாதார கட்டமைப்பையும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தவும் உதவும்" என தெரிவித்துள்ளார். மேலும் IBM இயக்குனர் ராகேஷ் மோகன் கூறுகையில் "இந்தியா 1.39 பில்லியன் மக்களுடன் உலகின் மூன்றாவது பெரிய நுகர்வோர் சந்தையை கொண்டுள்ளது" என குறிப்பிட்டார். சீனாவின் வர்த்தகம் இந்தியாவில் குறைந்துவருவது சீனப்பொருளாதாரத்தில் பெரும் தேக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.