24 special

உதயநிதியை மேடையில் வைத்து திட்டியதற்கு வேலையை பார்த்துவிட்ட அறிவாலயம்! டி ஆர் பாலு இனி அவ்வளவு தான்....

udhayanithi, tr balu
udhayanithi, tr balu

ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியின் மக்களவை எம்பி யாக உள்ள டி ஆர் பாலு 1957ஆம் ஆண்டிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வருபவர் தற்பொழுது இவர் திமுகவின் பொருளாளராக உள்ளார் கடந்த 2020 செப்டம்பரில் போட்டியின்றி பொருளாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்பாக திமுக கட்சியின் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றினார். இதனை அடுத்து தனது ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து மூன்று முறை தனது அமைச்சரவையை மாற்றிய திமுக, இரண்டாவது முறை மேற்கொண்ட அமைச்சரவை மாற்றத்தில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக நியமித்தது மேலும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும் டி ஆர் பாலுவின் மகனுமான டிஆர்பி ராஜாவை அமைச்சராக திமுக நியமித்தது. திமுகவின் பொருளாளரான டி ஆர் பாலுவின் மகன் 2011, 2016 மற்றும் 2021 என்ன மூன்று முறை மன்னார்குடி சட்டமன்றத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.


ஆக, திமுகவின் கழகப் பொருளாளராகவும் நாடாளுமன்ற நிலை குழுவின் முக்கிய எம்பி ஆகவும் டி ஆர் பாலு உள்ளார் இவரது மகன் டி ஆர் பி ராஜாவும் தமிழக அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக இருந்து வருகிறார். இப்படி கட்சியின் மிக உயர்ந்த பொறுப்புகளிலும் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக திராவிட கட்சியில் இருந்து வரும் டி ஆர் பாலு ஒருமுறை மேடையில் தமிழக முதல்வரை வைத்துக்கொண்டே உதயநிதி ஸ்டாலினை குறித்து ஒரு கருத்தை தெரிவித்தார். அதாவது உதயநிதி  ஸ்டாலின் சனாதனத்தை எதிர்ப்பதாக தெரிவித்து சனாதனத்திற்கு எதிரான கருத்துக்களையும் கூறி பெரும் சர்ச்சையில் மாட்டிக் கொண்டிருந்த சமயத்தில் வேலூரில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இருக்க டி ஆர் பாலு நமது தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் யார் சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாரு நான் சொல்றது தான் அப்படிங்கிற வகையில் இருக்காரு என்பது போன்ற கருத்துக்களை முன்வைத்தார். 

உதயநிதியை பற்றி முதல்வரை மேடையில் வைத்துக் கொண்டே டி ஆர் பாலு பேசியது உதயநிதி தரப்பிற்கும் முதல்வர் தரப்பிற்கும் பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் 5 மாநிலங்களின் தேர்தல் வெற்றியும் பாஜகவிற்கு சாதகமாக மாற காங்கிரசின் தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் சனாதன பேச்சு தான் முக்கிய காரணம் என்று ஒரு சர்ச்சையும் உள்ள நிலையில்,  இவற்றை குறித்து டி ஆர் பாலு ஏற்கனவே கூறியபடியே தற்பொழுது நடந்துள்ளது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் டி ஆர் பாலுவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனால் டி ஆர் பாலுவின் ஆதரவாளர்கள் இதர எம்பிகள் என அனைவரும் டி ஆர் பாலுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

ஆனால் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினோ  அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினோ டி ஆர் பாலுவிற்கு எந்த  வாழ்த்தும் கூறவில்லை அது குறித்த பதிவும் அவர்கள் சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. ஏற்கனவே உதயநிதியை டி ஆர் பாலு விமர்சனம் செய்வது போல் பேசிய காரணமாகத்தான் டி ஆர் பாலுவிற்கு திமுக தலைமையும் தலைமையின் மகனும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை என அறிவாலய வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இப்படி ஒட்டுமொத்தமாக ஒதுக்கி விட்டார்களே என டி ஆர் பாலு புலம்பி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.