கடந்த வாரம் சென்னையை கடந்து சென்ற மிக்ஜம் புயலால் சென்னைக்கு ஏற்பட்ட பாதிப்பு என்பது குறைவானது அல்ல! மழை நின்று கிட்டத்தட்ட ஏழு நாட்களுக்கு மேலாகியும் மழை நீர் இன்னும் பெரும்பாலான பகுதிகளில் வடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது கடந்த வாரத்தில் மழை பெய்த காரணத்தினால் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது இவை அனைத்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, இருப்பினும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் சில பகுதிகளில் படகுகள் மூலம் சென்று கொண்டிருக்கின்றனர் ஏனென்றால் அந்த அளவிற்கு சென்னையில் கடந்த வாரத்தில் பெய்து தேங்கிய மழையின் வெள்ளப்பெருக்கு வடியாமல் உள்ளது. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் பொருத்து பொருத்து பார்த்து இனி அரசு செய்யாது என போராட்டங்களில் குதித்து விட்டனர் அரசியல் பிரமுகர்கள். அதாவது மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் இருந்து சென்னை மக்கள் தங்களது பொருட்களை இழந்து பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர் ஆதலால் மக்கள் இழந்த உடமைகளை அரசு ஆய்வு செய்து அரசின் சொந்த செலவில் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வருகின்ற 17ஆம் தேதி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்து மக்கள் கட்சி-தமிழகம் சார்பில் வருகிற 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் சென்னை மக்கள் தங்களது உடமைகளை இழந்தும் வீட்டில் தினசரி உபயோகிக்கபடும் பொருட்களை இழந்து பெரும் நஷ்டம் ஏற்ப்பட்டு மிகவும் துயரத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.
ஆதலால் சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுவர் மாவட்ட மக்களுக்கு அரசு கொடுக்க இருக்கும் ரூபாய் ஆறு ஆயிரம் போதவே போதாது எனவே மக்கள் இழந்த உடமைகளை பொருட்களை அரசு ஆய்வு செய்து அரசு சொந்த செலவில் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வருகிற 17ஆம் தேதி சென்னையில் இந்து மக்கள் கட்சி- தமிழகம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒரு புறம் ஏற்கனவே சென்னை மக்கள் கோபமாக இருக்கும் நிலையில் மறுபுறம் நிவாரணத் தொகை எல்லாருக்கும் கிடைக்காது குறிப்பிட்ட சிலருக்கு தான் கிடைக்கும் என அறிவித்த நிலையில் இப்படி அரசியல் தலைவர்கள் போராட்டத்தை அறிவித்திருப்பது குறிப்பாக இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டத்தை தெரிவித்து இருப்பது திமுகவிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
ஏற்கனவே சென்னை பகுதிக்குள் அமைச்சர்கள் சென்றால் மக்களால் விரட்டியடிக்கப்படுகிறார்கள், இந்த நிலையில் வேறு அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் இறங்கினால் என்ன செய்வதென்று தெரியவில்லை என திமுக அரசு விழித்து வருகிறது. அது மட்டுமில்லாமல் தேர்தல் வெறும் நேரத்தில் இப்படி அனைத்து விவகாரமும் நமக்கு எதிராகவே திரும்புதே நாம் என்ன செய்வது என அவசர சந்திப்பு ஒன்றை முதல்வர் தரப்பில் ஏற்பாடு செய்திருப்பதாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.ரெய்டு ஒருபுறம், வெள்ளநீர் பாதிப்பு ஒருபுறம், எதிர்க்கட்சிகள் அரசியல் களத்தில் வேகமெடுத்து இறங்கியது ஒருபுறம் என அனைத்து பக்கமும் அணை கட்டியது போல் ஆகிவிட்டது திமுக நிலை, இனி சிரமம் தான் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.