24 special

தீவிரமாகும் ஆம்ஸ்ட்ராங் கொலை விசாரணை.. அடுத்தடுத்து முக்கிய தலைகள்...

Armstrong
Armstrong

கடந்த ஐந்தாம் தேதி சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர் வீட்டிற்கு அருகிலேயே மர்ம கும்பலால் தாறுமாறாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஏற்கனவே தமிழகத்தில் கள்ளச்சாராய பலிகள், காங்கிரஸ் அதிமுக என அரசியல் பிரமுகர்களின் திடீர் மரணங்களால் பெரும் பதட்டமான நிலையில் இருந்து வர பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையானது தமிழகத்தின் சட்ட ஒழுங்கையே கேள்விக்குறியாக்கியது. மேலும் இந்த விவகாரத்தில் தடாலென குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதும்,  இந்த கொலைக்கு பின்னால் 2023 இல் நடந்த கொலை சம்பவமும் இருப்பதாகவும், 2015இல் நடைபெற்ற கொலைக்கு பழிவாங்கும் படலம் 2023 இல் இருந்து தொடங்கியுள்ளது. அந்த பழிவாங்கல் கொலையில் தான் ஆம்ஸ்ட்ராங்கின் கொலையும் நடந்துள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


ஆனால் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் வெறும் கூலிக்கு கொலை செய்பவர்கள் மட்டுமே இந்த கொலைக்கு பின்னால் இருக்கும் முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவே இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமென திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனே பத்திரிகையாளர்கள் தரப்பில் வலியுறுத்தினார். அவரைத் தொடர்ந்து பாஜக, அதிமுக போன்ற மற்ற கட்சிகளும் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சிபிஐ விசாரணை வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்தனர். இருப்பினும் இந்த விவகாரத்தில் இதுவரை சிபிஐ விசாரணைக்காக தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மற்றும் வழக்கறிஞர் அருள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எவ்வளவு பணம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, இதில் யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர் என இந்த பதினோரு பேரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக பத்து நாட்களாக இந்த பதினோரு பேரும் ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டதாகவும், கொலைகான திட்டத்தை பெரம்பூரில் உள்ள மதுபான கடை ஒன்றில் மது அறிந்து கொண்டு தான் திட்டமிட்டு உள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இவர்களின் திட்டத்தில் ரத்தம் அதிக அளவில் வெளியேறும் நரம்பு பகுதிகளை குறி வைத்து வெட்ட வேண்டும் என்பது முக்கிய திட்டமாக இருந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அருள் தனது உறவினர் வீட்டில் தான் கொலைக்கான ஆயுதங்களை வாங்கி கொடுத்துள்ளார், மேலும் கொலை செய்த பிறகு ஆயுதங்கள் அனைத்தையும் மர்ம நபர்கள் அருளிடம்தான் ஒப்படைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து, அருளிடம் போலீசார் நடத்திய கிடக்கு பிடி விசாரணையில், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ், நரேஷ் மற்றும் சீனிவாசன் ஆகியோர் வீட்டில் தான் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பதிக்க வைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இந்த மூன்று பேரிடமும் போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அருள் திமுக நிர்வாகி மற்றும் முன்னாள் அமைச்சர் நாசரின் நெருங்கிய ஆதரவாளர் என்று கூறப்படுகிறது நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் மேலும் இரு திமுக நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை வருகிறதாக கூறப்படுகிறது. இதனால் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை சம்பவம் நிச்சயமாக திமுக ஆட்சிக்கு விழுந்த ஒரு கரும்புள்ளி, இதனால் திமுக 2026 இல் சரிவை காணும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும் அறிவாலயம் இந்த விவகாரத்தை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிகிறது...