இன்றைய இளைஞர்கள் மத்தியில் சம்பாதித்து ஒரு வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என் ஆசை பலரிடம் உள்ளது. இதற்காக கடினமாகவும் உழைக்கிறார்கள் தங்களது இலக்கையும் மிகவும் உயர்த்தி வைக்கிறார்கள். இருப்பினும் சில சமயங்களில் அவர்கள் ஈட்டுகின்ற வருமானம் இலக்கை அடைய முடியாத வகையிலும் சில நேரங்களில் தனது கனவிற்காக பல புதிய முயற்சிகளையும் புதியவற்றை தேடி கற்றுக் கொள்கிறார்கள். மேலும் பல இளைஞர்கள் தற்போது வெளிநாட்டு பணிகளின் மீது அதிக ஆர்வம் கொள்கின்றனர். துபாய், சவுதி, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, லண்டன் போன்ற பல நாடுகளில் இந்திய இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இன்னும் பல நாடுகளுக்கு வேலைக்காக சிறகடிக்க ஆசைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அங்கு சென்று ஆரம்பத்தில் அந்த நாட்டின் மொழியை சரியாக புரிந்து கொள்ள முடியாமலும், உணவு பழக்க வழக்கத்திலிருந்து அனைத்து பழக்க வழக்கத்திற்கும் தங்களை உடன்படுத்திக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி எந்த ஒரு நாட்டிற்கு சென்றாலும் அந்த நாட்டின் மொழியை கற்றுக் கொண்டாலே நாம் அந்த நாட்டில் வாழும் தன்மைக்கு ஒத்துப் போகிறோம். ஆனால் தமிழகத்தில் ஒரு மொழியை தாண்டி மற்றும் மொழிகள் கற்க விருப்பம் இருந்தாலும் கூட அதனை திணிப்பு என்ற பெயரில் அரசியல் செய்து வருகின்றனர். அதாவது இன்றைய இளைஞர்கள் தங்களது கனவையும் தங்களது பயணத்தையும் உலக அளவில் பறந்து வைத்திருக்கிறார்கள் ஆனால் அவர்கள் பிற மொழியை கற்றுக் கொள்வதை மத்திய அரசின் திணிப்பு என குற்றச்சாட்டை முன்வைக்க அவர்களின் குற்றச்சாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலே தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் திமுகவிற்கு கொடி பிடித்தனர்.
இவர்களின் இந்த எதிர்ப்பு மாணவர்கள் மத்தியில் அதிகமாக காணப்படவில்லை, அவர்கள் எங்களுக்கு விருப்பம் இருந்தால் நாங்கள் படிக்கிறோம் இல்லை என்றால் நாங்கள் படிக்கவில்லை என்று ஒரே வரியில் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மனப்பான்மை கொண்டுள்ளனர். இந்த நிலையில் பல இளைஞர்கள் வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்லும் பொழுது மொழியில் எந்த வித பிரச்சினையையும் சந்திக்கக் கூடாது என்பதற்காக உத்தர பிரதேச மாநில அரசு இலவசமாக இளைஞர்களுக்கு வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க வழிவகை செய்துள்ளது. அதாவது பாஜக ஆளும் உத்திரபிரதேசத்தில் இளைஞர்களின் திறமைகளை வளர்த்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு உத்தரபிரதேச திறன் வளர்ச்சி மிசின் என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த திட்டத்தின் கீழ் பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உத்திரபிரதேச இளைஞர்களுக்கு இலவசமாக கற்றுத்தரப்பட உள்ளது.
அதுமட்டுமின்றி முதல் கட்டமாக இந்த திட்டமானது லக்னோ, கான்பூர், கோரக்பூர், வாரணாசி, ஆசம்கர், அயோத்யா, பிரயாக்ராஜ், ஜான்சி மற்றும் பாண்டா ஆகிய 9 மாவட்டங்களில் அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயிற்சியை லக்னோவில் உள்ள ஆங்கில மற்றும் வெளிநாட்டு மொழிகளின் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அளிக்க உள்ளதாகவும் பயிற்சிக்கான மொத்த கட்டணம் மற்றும் செலவினை உத்திரபிரதேச அரசின் திறன் வளர்ச்சி மிஷன் நிறுவனம் ஏற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் தங்களது திறனை மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். ஆனால் தமிழகத்தில் அனைத்தையும் அரசியலாகி தமிழக இளைஞர்களுக்கு எந்த ஒரு புதிய திறனையும் அளிக்க முடியாத வகையில் திமுக அரசு தன் குடும்பத்தை மட்டுமே வளர்த்து வருகிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.