24 special

தனுஷை ஒத்திகை பார்த்த இராணுவம்..! மற்றுமொரு மைல்கல் !

army
army

இந்தியா : 2014களுக்கு பிறகு இந்திய ராணுவத்திற்கான ஆயுதங்கள் தளவாடங்கள் மற்றும் விமானப்படைக்கான உதிரிபாகங்கள் மற்றும் மிசைல்கள் பெரும்பாலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதிலும் கடந்த மாதம் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன. இது இந்தியாவின் அடுத்த கட்ட முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.


மத்திய அரசால் உருவாக்கப்பட்ட புதிய பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனமான அட்வான்ஸ் வெப்பன்ஸ் அண்ட் எக்யூப்மென்ட் இந்தியா லிமிடெட் (AWEIL) தயாரிப்பில் உருவான தனுஷ் 155*52 மில்லிமீட்டர் காலிபர் ரக பீரங்கியை நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. இதில் சோதனை வெற்றியடைந்ததாக அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


மத்தியபிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டம் இடார்சியில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த தனுஷ் 155*22 மீ.மீ ரக பீரங்கி துப்பாக்கி ஏ.டி.ஏ.ஜி.எஸ் திட்டத்தில் இருந்து பெறப்பட்டு ஹோவிட்ஸர் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்தது. ஜெபர்பூரில் உள்ள பழைய ஆர்டினன்ஸ் போர்டுக்கு சொந்தமான (GCF)கன் கேரேஜ் பேக்டரியில் இந்த தனுஷ் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.    

அட்வான்ஸ் வெப்பன்ஸ் அண்ட் எக்யூப்மென்ட் இந்தியா லிமிடெட்சமீபத்தில்  ஐரோப்பாவை சேர்ந்த ஒரு பிரபல நிறுவனத்திடமிருந்து பீரங்கி துப்பாக்கிகளின் முக்கிய துணை உதிரிபாகங்களுக்கான ஆர்டரை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தனுஷ் 155*45 மீ.மீ ரக பீரங்கி துப்பாக்கியின் முதல் தொகுப்பில் 18 பீரங்கிகள் இந்திய ராணுவத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

அதில் சில தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. பின்னர் மீண்டும் மேம்படுத்தி தற்போது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த தனுஷ் ரக துப்பாக்கி உற்பத்திகளை  மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது மேக் இன் இந்தியா திட்டத்தின் மற்றுமொரு மைல்கல் என கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் ஆவடி பகுதியில் குண்டு துளைக்காத ஹெல்மெட் தயாரிக்கப்பட்டு விநியோகிக்க ஆரம்பிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.