திருவாரூர் மாவட்டம் தெற்கு ரத வீதியின் பெயரை கருணாநிதி சாலை என மாற்றும் முயற்சியை எதிர்த்து பாஜக சார்பில் மிக பெரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யபட்டு இருந்தது, இந்த நிகழ்ச்சியில் பாஜக மற்றும் பொது மக்கள் பல ஆயிரம் பேர் ஒரே வீதியில் குவிந்தது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
இது ஒருபுறம் என்றால் இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை முதல்வர் தொடங்கி திருமாவளவன் வரை அனைவரையும் கடுமையாக விமர்சனம் செய்தார், முதல்வர் புறா கறி என்றதும் ஓடி விடுகிறார், காவல் நிலையம் சென்று கோப்புகளை பார்க்கிறார் அதில் அவருக்கு என்ன தெரியும் என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
இதன் பிறகு பேசிய அண்ணாமலை அறிவாலய ஊதுகுழல் திருமா ஒரு கருத்தை சொன்னார் இந்தியாவும் இலங்கை போன்று மாறிவிடும் என திருமா சொல்கிறார் அண்ணே இலங்கையில் நடந்தது குடும்ப ஆட்சி என ராஜபக்சே குடும்பம் குறித்து பட்டியல் போட்டார் அதன் பிறகு அப்படியே தமிழகத்தில் அதனை பொருத்தி பாருங்கள் என குறிப்பிட்டார்.
திருமாவளவன் அண்ணே புத்தகம் படிப்பாரா என தெரியவில்லை ஏன் என்றால் விவாதத்திற்கு கூப்பிட்டால் ஓடி போயிடுறாரு? பாஜக சார்பில் திருமாவளவன் அவர்களுக்கு இலவச கண் சிகிச்சை செய்து தர தயார் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டு பேசினார் இதுதான் சிறுத்தைகளை வேதனை பட வைத்துள்ளது, எங்க அண்ணன் என்ன பயப்படுகிற நபரா? அவருக்கு இலவச கண் சிகிச்சை செய்ய இவர் யார்? என சமூக வலைத்தளங்களில் சிறுத்தைகள் தங்கள் வேதனையை பகிர்ந்து வருகின்றனர்.
அண்ணாமலை குறிப்பிட்டு பேசிய சம்பவம் கடும் அதிர்வலைகளை உண்டாகியுள்ளது, டெல்டா மாவட்டம் திமுகவின் கோட்டை என்று கூறிய நிலையில் திருவாரூரில் அண்ணாமலை கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கூடிய கூட்டத்தை பார்த்து வாயடைத்து போயிருக்கின்றனர் எதிர்க்கட்சிகள்.