அம்பேத்கர் பிறந்தநாள் அன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது குறித்து விவகாரத்தில் பாஜக மற்றும் விசிக தொண்டர்கள் இடையே கைகலப்பு உண்டானது, இதில் விடுதலை சிறுத்தை கட்சியினர் அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டதாக பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த சூழலில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அனுவிக்க பாஜகவினருக்கு எந்த தகுதியும் இல்லை என திருமாவளவன் விமர்சனம் செய்தார் அதற்கு பதில் கொடுக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அம்பேத்கர் குறித்து முழுமையாக பேச பாஜகவிற்கு என்ன தகுதி இருக்கிறது என விளக்க தயாராக இருக்கிறேன், இடம் நேரத்தை நீங்களே கூறுங்கள் என அண்ணாமலை திருமாவளவனுக்கு சவால் விடுத்து இருந்தார்.
இந்த சூழலில் அண்ணாமலை சவாலை ஏற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்பார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீர் பல்டி அடித்துள்ளார். அதாவது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமிட்ஷா ஆகியோர் வந்தால் நான் விவாதம் செய்ய தயார் என தெரிவித்தார் அதாவது அண்ணாமலை அழைப்பு விடுத்தால் பிரதமர் மோடியுடன் விவாதம் செய்ய தயார் என தெரிவித்து இருக்கிறார் திருமாவளவன்.
இந்த சூழலில் திருமாவளவன் கருத்திற்கு பதில் கொடுத்த பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அம்பேத்கர் குறித்து பேசுவதற்கு மோடிக்கு தகுதியில்லை. நேருக்குநேர் விவாதிக்கலாம் மோடி, அமித்ஷாவை வரச் சொல்லுங்கள்" என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
மோடியுடன் விவாதிக்க திருமாவளவனுக்கு தகுதியும் இல்லை, அருகதையும் இல்லை என ஒற்றை வரியில் பதிலடி கொடுத்துள்ளார் நாராயணன் திருப்பதி.