ஆணையம் தனது அறிக்கையின் இறுதியில் குறள் ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளது. அதற்கு கலைஞரின் உரை என்றொரு விளக்கத்தை அளித்து, மண்டை மேல் உள்ள கொண்டையை மறைக்க தவறியிருக்கிறது.
ஆறுமுகசாமி ஆணையத்தின் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்தான அறிக்கையில், ’’மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பின், சசிகலா உறவினர்கள் 10 அறைகளை ஆக்கிரமித்துள்ளனர். நோய்களை பற்றி மருத்துவர்கள் சசிகலாவுக்கு தகவல் தெரிவித்தனர். சசிகலா ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளார்’
ஜெயலலிதாவுக்கு சசிகலா &அவரது உறவினர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களை போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றினார். 2012 ஜனவரியில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதை பற்றி ஜெயலலிதா பேசியுள்ளார்.
சசிகலா வழங்கிய உறுதிமொழி கடிதத்தின் அடிப்படையில் தான், அவரை போயஸ் கார்டனுக்குள் ஜெயலலிதா அனுமதித்தார். கிருஷ்ணப்ரியாவின் சாட்சியத்தின் படி சசிகலாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் நல்லுறவு இல்லை.
ஜெயலலிதா மறைவில் என்ன நடந்தது என்பதை தெரிந்துக்கொள்ள தான் விசாரணை ஆணையமே அமைக்கப்பட்டது. ஆனால் என்ன நடந்தது என்பதை சாட்சியங்கள் மூலம் உறுதியாக சொல்ல முடியாமல், குறிப்பிட்ட 5 பேர் மீது மீண்டும் விசாரணை நடத்த ஆணையம் கோரியுள்ளது.
ஜெயலலிதாவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு சசிகலா செயல்பட்டதால், அவரை போயஸ் கார்டனுக்குள் ஜெயலலிதா அனுமதித்தார் என கிருஷ்ண பிரியா சாட்சியம் மூலம் தெரிகிறது. ஜெயலலிதா மறைவில் சசிகலாவை குற்றம்சாட்டுவதை தவிர வேறு முடிவுக்கு வர இயலாது. (கடந்த ஜனவரி 17, 2018ம் ஆண்டு சசிகலாவின் சகோதரர் திவாரகன் அவர்கள், டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15க்கு ஜெயலலிதாவின் உயிர் பிரிந்துவிட்டதாகவும், தன் பிறகு இயந்திரத்தால் தான் இருதயம் இயங்கியது என்றும் மன்னார்குடியில் பேசியிருந்தார்.)
ஜெயலலிதாவை ஆஞ்சியோக்கு சம்மதிக்க வைத்த அமெரிக்காவில் இருந்து வரவைக்கப்பட்ட மருத்துவர் ஷமீன் ஷர்மா, சசிகலா உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவர். ஆனால் ஏற்பாடு செய்தது யார் என்று கடைசி வரை விசாரணையில் கூறப்படவில்லை. போயஸ் கார்டனில் மயங்கிய ஜெயலலிதாவை தாமதமின்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கார்டன் ஊழியர்களிடம் அசாதாரன செயல்பாடு எதுவும் கண்டறியப்படவில்லை. 04.12.2016 மதியம் 3 - 3.50க்குள் ஜெயலலிதா இறந்திருக்க வேண்டும். நடைமுறை வசதிக்காக பல்வேறு தேதிகளில் 21 படிவங்களில் தான் கையெழுத்திடுவது குறித்து அரசுக்கு ராமமோகன ராவ் தெரிவிக்கவில்லை.அவருக்கு எதிரான குற்றத்தை ஆணையம் கண்டறிந்துள்ளதால், அவர் மீது நடவடிக்கை வேண்டும்.
ஆஞ்சியோக்கிராம் அறுவை சிகிச்சை செய்ய சிறப்பு மருத்துவர்களை, மருத்துவர்கள் ஒய்,வி,சி ரெட்டி மற்றும் பாபு ஆப்ரஹாம் அழைத்துள்ளனர். ஆனால் சில அழுத்தத்தின் காரணமாக சிகிச்சை செய்யாமல் காலம் தாழ்த்தியுள்ளனர்.
இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்றெல்லாம் குற்றம்சாட்டியுள்ளது ஆறுமுகசாமி ஆணையத்தில் அறிக்கை. ஆனால், அதே அறிக்கையில் 439ம் பக்கத்தில் ஆணையம் தனது அறிக்கையின் இறுதியில் குறள் ஒன்றை மேற்கோள் காட்டி இருக்கிறது. மருந்து குறள் 948. "நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பெசெயல்’’
கலைஞ்சர் உரை: ந்நோய் என்ன? நோக்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராயிந்து சிகிச்சை செய்யவேண்டும்( உடல் நோய்க்கு மட்டுமின்றி சமுதாய நோய்க்கும் இது பொருந்தும் என்கிற விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மர்ம மரணம் பற்றிய அறிக்கையில் கலைஞ்சரின் திருக்குறள் உரை இடம்பெற வேண்டிய அவசியம் என்ன? யாரை கூல் செய்ய இந்த திருக்குறள் உரையை உட்புகுத்தியுள்ளது ஆறுமுகசாமி ஆணையம்? என பலரும் கேள்வி எழுப்பி வருகிறனர்.