24 special

ஜெயலலிதாவுக்கு இட்லி.. சசிகலாவுக்கு கெட்டிச் சட்டினி... அப்பட்டமான ஆறுமுகசாமி ஆணையம்..!

Sasikala,vijayabaskar, jayalalitha
Sasikala,vijayabaskar, jayalalitha

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்மம் மரணம் தொடர்பாக இன்று விசாரணையை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது ஆறுமுகசாமி ஆணை. இதில் சசிகலாவை விசாரிக்க வேண்டி இருக்கிறது. அவர் நினைத்திருந்தால் ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம் என குற்றம்சாட்டியுள்ளது. 2012ம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதா சசிகலாவை அழைத்துக் கொண்டதில் இருந்து இருவருக்குள்ளும் சுமூகமான நட்பு இல்லை என்பதையும் இந்த ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. 


ஆனால் இந்த விசாரணை ஆணைய அறிக்கையில் பல விஷயங்கள் முரணாக உள்ளன என்கிறார் அரசியல் விமர்சகரான ஹாரீஸ். இதுகுறித்து அவர், ‘’சமின் ஷர்மா பரிந்துரைத்த அறுவை சிகிச்சை வேண்டாம் என முடிவெடுத்தது அப்போலோ மருத்துவர்கள்.

மருத்துவர்களின் முடிவை மாற்ற சசிகலாவுக்கு அதிகாரம் இருந்தும், அதை செய்யவில்லை என ஆணையம் கூறுவது சரிதானா ? கருத்துவ ரீதியில் எடுக்கப்படும் முடிவுகளை தீர்மானிக்கவும், முடிவெடுக்கவும், அதை மாற்றவும், மருத்துவ துறைக்கு துளியும் தொடர்பில்லாத சாமானியர் ஒருவருக்கு அதிகாரம் உள்ளதா? முதலில் சசிகலா அம்மையாருக்கு எப்படி அந்த அதிகாரம் இருந்ததாக ஆணையம் பார்க்கிறது ?

சசிகலா அம்மையார் உரிய சிகிச்சை அளிக்கச் சொன்னதாக அறிக்கையில் ஆணையமே கூறுகிறது. அதேநேரம் மருத்துவர்களின் முடிவை மாற்ற தவறிவிட்டார் என்றும் சொல்கிறது. யாரை ஏமாற்ற இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது? காலம் தாழ்த்த தான் இதய அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட்டது என்றும், அதற்கு சசிகலா தான் காரணமாக இருக்க முடியும் என்றும் ஆணையம் கூறுகிறது.

அது என்ன காரணமாக இருக்க முடியும் ? மருத்துவர்களின் முடிவுக்கு எப்படி சசிகலா காரணமாவார்? சசிகலா தான் குற்றம் செய்துள்ளார் என்று கூறும் ஆணையம், சசிகலா குடும்பத்தினர் ஏற்பாடு செய்த மருத்துவர் சமின் ஷர்மாவின் அறுவை சிகிச்சை பரிந்துரையை மட்டும் ஏன் ஏற்கிறது. மற்ற மருத்துவர்கள் அதை நிராகரிக்க முன்வைக்கும் காரணத்தை ஏன் ஏற்கவில்லை ? 

சசிகலா தான் குற்றம் செய்துள்ளார் என்று கூறும் ஆணையம், சசிகலா குடும்பத்தினர் ஏற்பாடு செய்த மருத்துவர் சமின் ஷர்மாவின் அறுவை சிகிச்சை பரிந்துரையை மட்டும் ஏன் ஏற்கிறது. மற்ற மருத்துவர்கள் அதை நிராகரிக்க முன்வைக்கும் காரணத்தை ஏன் ஏற்கவில்லை ?எல்லோருக்குமே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி, சசிகலாவுக்கு எதிராக இருந்தது என்று நன்கு தெரியும். அப்படி இருந்தும், மருத்துவர் குறித்த தகவல்களை அரசுத் துறைகள் தர மறுத்தது என்று சொல்லும்போது, முதல்வருக்கு ஏன் ஆணையர் கோரிக்கை வைக்கவில்லை ? 

2011ல் சசிகலாவை வெளியேற்றிய ஜெயலலிதா, 2012ல் மீண்டும் சேர்த்துக்கொண்டு, அதிமுக செயற்குழு உறுப்பினராக அவரை நியமித்தார். பிறகு எப்படி சுமூகமான உறவு இல்லை என்று ஆணையம் முடிவுக்கு வந்தது ? கடிதம் கொடுத்ததால் சேர்த்தார் என்பதால், சுமூகமில்லை என்று அர்த்தமா ? 2017ம் ஆண்டு வரை அதிமுகவின் செயற்குழு உறுப்பினராக சசிகலா இருந்துள்ளார். தனக்கு சூமூகமாக இல்லாத ஒருவரை, தன் கட்சியில் ஜெயலலிதா பயணிக்க அனுமதிப்பாரா ? அதுவும் முக்கிய பொறுப்பில் ? கிருஷ்ணப்ரியா சொன்னதை ஆணையம் தவறாக புரிந்துக்கொண்டதா ?

இந்த ஆணையமே மரணத்தில் மர்மம் உள்ளதாக சொல்லி தான் விசாரணை செய்ய அமைக்கப்பட்டது. இதில் மீண்டும் ஒரு விசாரணையை ஆணையம் கேட்பது என்பது அப்பட்டமாக இதை மேலும் இழுத்தடித்து, அரசியல் செய்ய சிலர் முயற்சிப்பதை தெளிவாக்குகிறது’’ என்கிறார் அரசியல் விமர்சரான ஹாரீஸ்.