மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற மலை கோயிலான இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவில் மேலும் தேவார நால்வர்களுள் திருஞானசம்பந்தர் அவதார ஸ்தலமான இக்கோயிலில் காசிக்கு இணையான அஷ்ட பைரவர்கள் தனி சந்நிதியும் உள்ளது.இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மகளும், சபரீசன் மனைவியுமான செந்தாமரை வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற செந்தாமரை, சுவாமி அம்பாள் சட்டைநாதர் மற்றும் அஷ்ட பைரவர் சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தார்.
இந்த அஷ்டபைரவர் கோவிலுக்கு சென்று வழிபடுவதற்கு முதல்நாள் முதலமைச்சரின் மகள் திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு சென்று வழிபட்டு பின்னர் வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கும் சென்று சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஒருபுறம் அமலாக்கத்துறை கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி முதல்வர் மருமகன் சபரீசன் ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.கடந்த மாதம் 12ம் தேதி சென்னை, அண்ணா நகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் இறங்கிய அமலாக்கத்துறையினர் காலை முதல் தொடர்ந்து சோதனை நடத்தினார்கள், அதற்க்கு முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. சண்முகராஜ், சபரீசன் சம்பந்தமான கணக்குகளை கவனித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
இந்த ஆடிட்டர் சண்முகராஜ் சோதனை நடைபெறும் அதே நேரத்தில் முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள 'பொதுப்பணி திலகம்' என்ற பொறியாளர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேனாம்பேட்டையில் உள்ள குடியிருப்பிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் என்பதும் இதேபோல கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களிலும் அன்றைய தினமே அமலாக்கத்துறை அதிக சோதனைகள் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.இப்படி தொடர் சோதனைகள் நடைபெற்று அதில் முக்கிய புள்ளியாக குறிப்பாக முதல்வர் மருமகன் சபரீசன் ஆடிட்டர் வீட்டில் சோதனை நடைபெற்று அடுத்து என்ன நடக்குமோ என அரசியல் ரீதியாக எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் சபரீசன் மனைவி செந்தாமரை சனி பகவான், அஷ்ட பைரவரை நேரில் சென்று சிறப்பு வழிபாடு நடத்தி வணங்கியது கவனிக்கப்பட்டுள்ளது..
மேலும் கடந்த மார்ச் மாதம் திருச்செந்தூரில் முதல்வர் மருமகன் சபரீசன் சென்று சிறப்பு யாகம் நடத்தியதும் இப்பொழுது இணையத்தில் பேசி பொருளாகியுள்ளது. மார்ச் மாதத்தில் சபரீசன் திருச்செந்தூரில் சிறப்பு யாகம் நடத்தினார், அதன் பிறகு ரெய்டு போன்ற சில விவகாரங்கள் நடந்தன இந்த நிலையில் அவரது மனைவி செந்தாமரை சக்தி வாய்ந்த கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தி உள்ளார் இது எதற்காக? என்ற கேள்வியையும் இணையதளத்தில் இணையவாசிகள் முன்வைக்கின்றனர்.ஆனால் இதுதொடர்பாக விசாரிக்கும்போது முதல்வர் குடும்பத்தில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அவரது மகள் செந்தாமரை ஆகிய இருவரும் அதீத கடவுள் பக்தி கொண்டவர்கள் அதன் காரணமாகத்தான் இப்படி கோவிலுக்கு செல்கிறார்களே தவிர வேறு ஒன்றும் இல்லை எனவும் கூறப்படுகிறது.. மேலும் இது அடிக்கடி நடக்கும் ஒன்றுதான் எனவும் சிலர் கூறுகின்றனர்.