Cinema

இதோ வந்துட்டாங்கள தலைவர் படத்திலும் நடிக்க... தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

rajini
rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் தமன்னா, கேரளா சூப்பர் ஸ்டார் மோகன்லால், யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 240 கோடி தயாரிப்பில் உருவான இப்படம் மொத்தமாக 650 கோடி வரை வசூல் செய்தது. இந்த வசூல் சாதனையின் மூலம் ரஜினிகாந்த கரியரில் இந்திரனே வசூலில் முதல் இடத்தை பிடித்திருந்தது. அதனை பின்னுக்கு தள்ளியது ஜெயிலர் படம். தற்போது ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினியின் 170வது படத்தில் (பெயரிடப்படாத படம் ) நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல்  இயக்க உள்ளார். தலைவர் 170 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. படத்திற்கான பூஜை சென்னையில் அடுத்த வாரம்  நடைபெறவுள்ளது.  சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் இப்படத்துக்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.


மேலும் இந்த படத்தில் நடிக்க நடிகர்கள் மற்றும் நடிகைகளை தேர்வு செய்யும்பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனமான லைக்கா எக்ஸ் தளத்தில் துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழில் சார்பட்டா பரம்பரை, நட்சத்திரங்கள் நகர்கிறது, அநீதி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சார்பட்டா பரம்பரையில் "இதோ வந்துட்டான் இல்ல என் ஹார்ட் ஆஹ கொத்தா புடுங்க " என்ற இவரின் வசனம் இன்னும் சமூக தளத்தில் பரவி வருகிறது. இவரை தொடர்ந்து பிரபல நடிகை ரித்திகா சிங்கும் இப்படத்தில் இணைந்துள்ளார். இவர் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. நேற்று தலைவர் 170 படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியாகின.

ஜெயிலர் படத்திலும் இவர் தான் இசையமைத்தார் அணைத்து பாடல்களும் படத்தில் வெற்றி பெற்றிந்தது. ஜெயிலர்  படத்தில் அனிருத் இல்லையென்றால் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றிருக்கும் என சமூகத்தளத்தில் நெட்டிசன்கள் கருத்தை பதிவிட்டு வந்தனர். தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் அனிருத் கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் நாளில் படத்தின் அப்டேட்டுகள் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தலைவர் 170தை தொடர்ந்து அடைத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உளது குறிப்பிடத்தக்கது. தலைவரின் இந்த படமும் மிகப்பெரிய வசூல் சாதனையை படைக்கும் என்று தற்போதே அதற்கான வேலைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. 2024ம் ஆண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.