24 special

சத்தம் இல்லாமல் இரு பக்கமும் பேரத்தை தொடங்கிய திருமாவளவன்...! கசிந்த நிறைய விஷயங்கள்...!

mk stalin, thirumavalavan
mk stalin, thirumavalavan

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேலும் அடுத்து ஒரு மாத காலத்திற்கு கட்சிப் பணிகளை ஒதுக்கிவிட்டு தனது உடல் நலத்தின் மீது கவனம் செலுத்த திருமாவளவன் உள்ளதாகவும் அவரது கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது இருப்பினும் திருமாவளவன் ஓய்வெடுக்க போவதாக கூறி ஒரு மாத காலம் இடைவெளியில் லோக்சபா தேர்தலை குறிவைத்து அரசியல் காய்களை மிகவும் கவனமாக நகர்த்தி வருகிறார். அதாவது கடந்த தேர்தலை போன்று இந்த முறையும் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிற்கக்கூடாது குறைந்தபட்ச 3 தொகுதிகளிலாவது விடுதலை சிறுத்தைகள் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என திருமாவளவன் குறிக்கோளாக இருப்பதாகவும் அதற்காக மறைமுகமாக அதிமுகவுடன் தொகுதி பங்கீடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது. 


இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அடுத்த தேர்தலில் யார் மூன்று தொகுதிகளை கொடுக்கிறார்களோ அவர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கூட்டணி அமைக்கும் எனவும் வேறு சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் காவிரி நீர் பிரச்சினை, ஆசிரியர்களின் போராட்டம் என பல அரசியல் பிரச்சனைகள் தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பொது வெளியில், மக்கள்  மத்தியில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி வலம்வருகிறது, ஆனால் மறைமுகமாக தனது கட்சி நிர்வாகிகளுக்கு ரகசிய அசைன்மென்ட் களை கொடுத்து வருகிறாராம். மேலும் அனைத்து தொகுதியிலும் ஆட்கள் தயாராக இருக்க வேண்டும் என தனது எக்ஸ் வலையதள பக்கத்தில் கட்சி தொண்டர்களுக்கு தேர்தல் சார்ந்த அறிவுரைகளை தெரிவித்துள்ளார் திருமாவளவன்,  

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, '2024-நாடாளுமன்ற பொதுத் தேர்தலையொட்டி அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்து தேர்தல் பணிகளுக்கான பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தை நான்கு மண்டலங்களாக பிரித்து முகவர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக வட மாவட்டங்களில் உள்ள 13 நாடாளுமன்றத் தொகுதிகளை வடக்கு மண்டலமாக பிரித்து நாடாளுமன்றத் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கும் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பின்வரும் பட்டியலில் கண்டவாறு மேலிடப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் கட்சியின் மூத்த பொறுப்பாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து இப்பணியை வெற்றிகரமாக முடித்திட ஒத்துழைப்பு நல்க வேண்டும். 

வாக்குச் சாவடிக்கு ஒருவர் என்னும் அடிப்படையில் மேற்கண்ட 13 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இருந்து அனைத்து வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கின்ற பயிற்சி முகாம் அக்டோபர் 21ஆம் தேதி சனிக்கிழமையன்று நடைபெற உள்ளது.இப்பயிற்சி முகாமில் வடக்கு மண்டலத்தை சார்ந்த மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் ஆகியோர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இதன் பின்னணியை விசாரிக்கும் பொழுது அதிமுக, திமுக என இரண்டு பக்கங்களிலும் திருமாவளவன் 3 தொகுதிகளுக்கான பேரத்தை ஆரம்பித்து விட்டார் எனவும் தெரிகிறது. மேலும் மூன்று தொகுதிகளை யார் தர தயாராக இருக்கிறார்களோ உடனே அடுத்த மாதத்திற்குள் குறிப்பாக வருகின்ற அக்டோபர் 30ம் தேதிக்குள் கூட்டணி முடிவுகளை அறிவிக்க போவதாக இரு கட்சியினரிடமும் மறைமுகமாக திருமாவளவன் சொல்லிவிட்டாராம். இது மட்டுமல்லாமல் தேர்தல் செலவுக்காக பணம் என இவ்வனைத்தையும் கொடுத்தால் கூட்டணி நிச்சயம் என விடுதலை சிறுத்தைகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் மற்றொரு நிபந்தனையை திருமாவளவன் இரண்டு கட்சிகளிடமும் கூறியுள்ளாராம், எந்த கட்சி கூட்டணி முடிவானாலும் தனி சின்னத்தில் நிற்கப்போவதாகவும் அதற்க்கு சின்னம் மாற்றி நிற்க வற்புறுத்தக்கூடாது எனவும் வெறும் நிபந்தனை போடப்பட்டுள்ளதாக வேறு தகவல்கள் கசிகின்றன.