சென்னையில் பிறந்து இந்திய அணிக்காக சிறந்த சுழல் பந்து வீச்சாளராக கிரிக்கெட் அணியில் விளையாடியவர் ரவிச்சந்திரன் அஸ்வின். தகவல் தொழில்நுட்ப பட்டத்தை பெற்றவர் தமிழ்நாடு துடுப்பட்டை அணியின் பன்முக ஆட்டக்காரராக முதலில் அறிமுகமானார் இப்படி இவர் முதலில் அறிமுகமான முதல் தர துடுப்பாட்டத்தில் விதர்பா அணிக்கு எதிராக சிறந்த பந்துவீச்சு புள்ளிகளாக 6/64 எடுத்தவர். மேலும் 20 / 20 துடுப்பாட்டத்தில் ஆந்திராவிற்கு எதிராக தனது ஆட்டத்தை துவங்கி 2010ல் இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்சுக்கு ஆடினார். அதோடு கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கும் ஆதரவாக இவராடி இவரின் நான்கு பந்து பரிமாற்றங்களால் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் ஆகவும் அறிவிக்கப்பட்டார். இப்படி அஸ்வின் தமிழ்நாடு துடுப்பாட்ட அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் தமிழ்நாடு அலிக்காகவும் விளையாடியுள்ளார்.
அதோடு இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் பூனே சூப்பர்ஜியான்ட்சு, கிங்ஸூ இலெவன் பஞ்சாபு ஆகிய அணிகளுக்காகவும் விளையாடியவர். அதுமட்டுமின்றி தேர்வு துடுப்பாட்டை போட்டிகளில் அதிவேகமாக 50 - 100 -, 150-, 200-, 250 மற்றும் 300- இலக்குகளை வீழ்த்தி இந்திய பந்துவீச்சாளர் வேண்டும் சாதனையையும் பெற்றவர். மேலும் பன்னாட்டு துடுப்பாட்டை அவையில் 2016 ஆம் ஆண்டின் சிறந்த வீரர் விருதை பெற்று இந்த விருதை பெரும் மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றார். இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஜாக் ராலியன் விக்கெட்டை வீழ்த்தி 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார். இதன் மூலம் குறைந்த டெஸ்ட் போட்டிகள் மற்றும் குறைந்த பந்துகளை வீசி 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் அஸ்வின் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இதற்கு பல தரப்பிடம் இருந்து பாராட்டுகள் அஸ்வினுக்கு குவிந்து கொண்டே வந்தது.
அதோடு இந்த ஆட்டம் முடிந்த பிறகு, 'நீண்டதொரு பயணமாக இது அமைந்துள்ளது நான் இன்று சாதித்ததை என் அப்பாவிற்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் அனைத்து நேரத்திலும் அவர் என்னுடன் இருந்திருக்கிறார் நான் பேட்ஸ்மேனாகவே விரும்பினேன்! ஆனால் எதிர்பாராத விதமாக சுழற் பந்துவீச்சாளர் ஆனேன். டீசன்டான முதல் தர கிரிக்கெட் அனுபவம் நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது எனக்கு கிடைத்தது நான் டெஸ்ட் பவுலரா என்றும் பலர் சந்தேகித்தனர். இப்படி நான் என் பயணத்தை தொடங்கி 13 ஆண்டுகள் ஆகிறது. இது சாதாரணமான மற்றும் மோசமான சாதனை இல்லை நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்' என்று கூறியிருந்தார் அஸ்வின். இந்த செய்தி மற்றும் அஸ்வின் 500 விக்கெட்டுகளை அடைந்த செய்தி அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக்கொண்டு பாராட்டுகளை பெற்று வந்த அதே சமயத்தில் இந்திய சுழற் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது குடும்ப அவசர நிலை காரணமாக இந்திய அணியில் இருந்து விலகி உள்ளார் என செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட் நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் இனி எந்த பங்கையும் வகிக்க மாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாகவும் தெரிவித்துள்ளது. மேலும் குடும்ப நெருக்கடி காரணமாக இந்தியா-இங்கிலாந்து 3வது டெஸ்டில் இருந்து அஸ்வின் விலகினார். இந்த சவாலான காலங்களில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) அணியும் அஷ்வினுக்கு முழு ஆதரவு அளிக்கிறது என பிசிசிஐ தனது சமூக வலைதள பக்கத்திலும் அறிவித்துள்ளது அஸ்வினி ரசிகர்கள் பலரை வருத்தம் அடைய செய்துள்ளது. அஸ்வின் 500 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என ஆடி பின்னர்தான் குடும்பத்தில் ஏற்பட்ட அவசர நிலைக்கு கிளம்பியுள்ளார், 500 விக்கெட்டுகளை இன்னும் இரு தினத்தில் வீழ்த்திவிடுவேன் என அஸ்வின் உறுதியுடன் இருந்து கிளப்பியதாக BCCI ல் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன... ஆனால் அஸ்வின் சாதனைக்கு திமுக தரப்பில் இருந்தும் ஆளும்கட்சி அரசிடம் இருந்தும் முறையான பாராட்டு செய்திகள் வரவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.