24 special

வாழைப்பழத்தில் இப்படி ஒரு அசைவமா!

banana
banana

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவருமே இயங்கிக் கொண்டிருப்பது பசிக்காக மட்டுமே. பசிக்கவே இல்லை என்றால் ஒருவர் வேலைக்கு சென்று சம்பாதிக்கவே தேவையில்லாமல் போயிருக்கும். இதில் வீடு வசதி மற்றும் சொத்துக்களுடன் வாழ நினைப்பவர்கள் வேலைக்கு சென்று அதனை வாங்கிக் குவிப்பார்கள். எல்லாம் இந்த அரை ஜான் வயித்துக்கு தானே என்று கிராமப்புறங்களில் மிகவும் எளிமையாக பணத்தின் தேவையை கூறுவார்கள். இதன்படி உணவு என்பது இரண்டு வகைகளாக மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளது அசைவம் மற்றும் சைவம் இந்த இரண்டையும் உண்ணும் பிரியர்களும் இருக்கிறார்கள் சிலர் அசைவம் மட்டும் உண்பவர்கள் சிலர் சைவம் மட்டும் உண்பவர்களும் இருக்கிறார்கள். இந்த இரண்டு தரப்பினருக்கிடையே மாறி மாறி சில நேரங்களில் வாக்குவாதங்கள் எழுவதும் உண்டு.


ஏனென்றால் இறைச்சி உண்ணும் அசைவ பிரியர்கள் இறைச்சியால் கிடைக்கும் சத்துக்கள் மற்றும் வழு அனைத்தும் சைவத்தில் கிடைத்து விடுமா என்னதான் சைவம் எடுத்துக் கொண்டாலும் அசைவம் தான் நமக்கு மிகப்பெரிய சத்தையும் வலுவையும் பெற்று தரும் என்று கூறுவார்கள் அதே சமயத்தில் சைவ பிரியர்கள் எப்படி ஒரு உயிரைக் கொன்று அவர்களால் சாப்பிட தோன்றுகிறதோ தெரியவில்லை சைவத்தில் இல்லாத சத்து வேறு எங்கு இருக்கிறது கீரை பால் தயிர் பருப்பு வகைகள் எனும் இவற்றில் இல்லாத சத்தா அசைவத்தில் கிடைத்துவிடப் போகிறது என்று மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவர். இந்த வாக்குவாதத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டவராக இருப்பவர்கள் சைவம் மற்றும் அசைவம் என இரண்டையும் வெளுத்துக்கட்டும் பிரியர்கள் மட்டுமே! நண்பர்கள் கூட்டத்தில் கூட அசைவம் மற்றும் சைவ பிரியர்கள் என தனித்தனியாக இருந்தால் அவர்களுக்குள்ளேயும் நிச்சயம் இது குறித்த வாக்குவாதங்கள் அவ்வப்போது எழுந்து கொண்டே இருக்கும் ஏனென்றால் அசைவ பிரியர் ஒருவர் அசைவு உணவைக் கொண்டு வர அதற்கு சைவப் பிரியர் தன் முகத்தை சுளிக்க சண்டைகள் ஏற்படுவதும் வழக்கமாகியுள்ளது. 

அதே நேரத்தில் ஒருவருக்கு என்ன பிடிக்கிறதோ அதை உண்ணலாம் அதற்காக மற்றவர்கள் உண்பதை குறித்து விமர்சிக்க கூடாது என்பதும் பொதுவான கருத்தாக உள்ளது இதனால் சைவம் மற்றும் அசைவம் குறித்த பிரியர்கள் மத்தியில் இது சற்று விவாத பொருளாக மட்டுமே இருப்பதை தவிர மிகப் பெரிய அளவிலான சண்டையில் செல்லாது. மேலும் சைவம் மற்றும் அசைவம் என இரண்டு தலைப்புகளின் கீழ் பட்டிமன்றம் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றாலும் இரண்டில் எது உயர்ந்தது மற்றும் உடல் நிலத்திற்கு நல்லது என்பதை நடுவராலும் கூற முடியாத அளவிற்கு குழப்பம் ஏற்பட்டு இருக்கும். இறுதியில் அந்த நடுவரும் இரண்டு உணவுகளுமே முக்கியம் இரண்டு உணவுகளையும் சரிசமமாக எடுத்துக் கொண்டு தங்கள் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும் என்று தான் அவரால் கூற முடியும். இந்த நிலையில் சைவ பிரியர்கள் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

அதாவது  பழங்கள் சைவம் மற்றும் அசைவம் என இரு பிரிவினர்களாலும் சாப்பிடக் கூடியது தான் ஆனால் பெரும்பாலும் பழங்கள் சைவத்தின் கீழ் வருவதால் பழத்தை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்த முடிவு சைவ பிரியர்களை ஆச்சரியமடை வைத்துள்ளது. அதாவது வாழைப்பழத்தின் ஒரு துண்டை எடுத்து மைக்ரோஸ்கோப் வழியாக ஆய்வு செய்து பார்த்ததில் அதில் கண்ணுக்குத் தெரியாத புழுக்கள் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இது குறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டதை அடுத்து தயிரை எடுத்து இப்படி மைக்ரோஸ்கோப்பை பார்த்தால் ஆயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் இருப்பதாகவும், இது பரவால்ல காலிபிளவர்ல எல்லாம் கணக்கே இல்லாத புழுக்கள் இருக்கும் இங்க சைவம்னு எந்த உணவும் கிடையாது என்று சிலர் கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர்.