24 special

காங்கிரஸ் எம்.எல்.ஏ புகார்..! எம்பி மீது வழக்கு பதிவு..!

Modi,
Modi,

அஸ்ஸாம் :  அஸ்ஸாம் மாநில மக்களவை எம்பியும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவருமான மவுலானா பதுருதீன் அஜ்மல் மீது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் வகுப்புவாதத்தை தூண்டும் விதமாக பேசுவது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். 


அஸ்ஸாம் குஜராத் மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தில் பசுவதை தடுப்பு சட்டம் அமுலில் உள்ளது. பெரும்பான்மை மக்கள் மற்றும் ஜெயின் இந மக்கள் வழிபடும் ஆலயங்களை சுற்றி ஐந்து கிலோமீட்டர் பரப்பளவிற்கு மாட்டிறைச்சி மற்றும் இதர இறைச்சிக்கடைகள் திறக்கவோ அல்லது விற்பனை செய்யவோ தடை அமலில் உள்ளது. 

இந்நிலையில் சர்ச்சைக்குரிய தியோபந்த் பள்ளியின் இஸ்லாமிய அறிஞர்கள் அமைப்பான ஜமியத் உலமா தலைவரும் எம்பியுமான பத்ருதீன் அஜ்மல் நான் மாட்டிறைச்சியை ரகசியமாக சாப்பிட்டேன் என கூறியிருந்தார். பொதுவெளியில் கூறி இரு பிரிவினருக்கிடையே ஆத்திரமூட்டும் செயலில் பத்ருதீன் ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கமலாஷா புர்காயஸ்தா கவுகாத்தி காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

பத்ருதீன் மீது க்ரீம்கன்ச் சதார் காவல்நிலையத்தியல் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153 பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆத்திரத்தை தூண்டுதல் மற்றும் எந்த ஒரு மதத்தையும் அல்லது வழிபாட்டுத்தலத்தை அவமதித்தல் அல்லது திட்டமிட்டு அவமதித்தல் 295 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. 

"பதுருதீன் அஜ்மல் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி இரு சமூகங்களுக்கு இடையே வகுப்புவாத கலவரத்தை தூண்ட முயற்சித்துள்ளார். ஹிந்து மதத்தில் பசுக்கள் தெய்வமாக வழிபடப்படுகின்றன. அவற்றை உண்பது பாவம் என கருதப்படுகிறது. பதுருதீன் ஒட்டுமொத்த ஹிந்து சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார்" என காங்கிரஸ் எம்.எல்.ஏ தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.