24 special

அட்ராசக்க... துபாயில் 1 வாரம் மட்டும் தமிழக அரங்கை திறந்து வைக்க இதுதான் காரணம்! முதல்வர் ஸ்டாலின் தாறுமாறு பதில்!!

Stallin
Stallin

சட்டப்பேரவை மானியக் கோரிக்கை மீதான விவாதம் 7 ஆம் தேதியான நேற்று தொடங்கி மே மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. விதி எண் 110ன் கீழ் உரை நிகழ்த்திய முதல்வர் ஸ்டாலின் துபாயில் கண் காட்சி முடியும்போது இறுதி கட்டத்தில் ஏன் அங்கு சென்று தமிழக அரங்கை திறந்து வைத்தார் என்பது குறித்து விளக்கமளித்து இருக்கின்றார்.


துபாயில் நடைப்பெற்ற கண்காட்சி கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவு பெற்றது. கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கிய துபாய் எக்ஸ்போ 2020 ஆறு மாத காலமாக வெகுவிமரிசையாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் சமீபத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துபாய் சென்று அங்கு தமிழக அரங்கம் திறந்து வைத்தது மிகப்பெரிய பேசும் பொருளாக மாறியது. சர்ச்சையும் கிளம்பியது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.


குறிப்பாக பாஜக தரப்பில் இருந்து தலைவர் அண்ணாமலை தெரிவிக்கும்போது, ஐந்தாயிரம் கோடி ரூபாய் இங்கிருந்து துபாய்க்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அதன் காரணமாகத்தான் முதல்வர் தன் குடும்பத்தோடு அங்கு சென்று இருந்தார். அதற்கு முன்னதாக தங்களுடைய குடும்ப ஆடிட்டர் ஒருவரையும் அழைத்து சென்று தங்களது குடும்ப வியாபார நோக்கத்திற்காக சென்று இருந்தனர் என தெரிவித்திருந்தார்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடிபழனிசாமி குறிப்பிடும்போது, துபாய் எக்ஸ்போ முடியும் தருவாயில் தமிழக அரங்கம் திறக்கப்படுவதற்காக காரணம் என்ன என்று கேள்வியும் எழுப்பியிருந்தார்.

இதுகுறித்து நேற்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் அதற்கு விளக்கம் அளித்தார். அதில், கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, திமுக 68 ஆயிரத்து 375 கோடி முதலீட்டையும் 2,05,802 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதத்திலும்130 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு உள்ளது என குறிப்பிட்டு, அதனை பட்டியலிட்டு பேசினார்.

மேலும் செங்கல்பட்டு சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் புதிய தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், 192 நாடுகள் பங்குப்பெற்ற துபாய் எக்ஸ்போவில், கடந்த மார்ச் 25ஆம் தேதி தமிழக அரங்கத்தை தொடங்கி வைத்திருக்கிறேன்.

குறிப்பாக மார்ச் 20ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக கடைபிடிக்கப்பட்டது. இந்த கண்காட்சியை பொருத்தவரையில் வார இறுதி நாட்களில் தான் மிகப் பெரிய முதலீட்டாளர்கள் கலந்துகொள்வார்கள்.

அதன் காரணமாகவே தான் கடைசி ஒரு வாரம் மட்டும் தமிழக அரங்கம் திறந்து வைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல அங்கு இருக்கக்கூடிய தமிழ் சொந்தங்களையும் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.

பல முதலீடுகளை ஈர்ப்பதற்காக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காகவும் தான் நான் துபாயில் தமிழக அரங்கத்தை தொடங்கி வைத்தேன். அதன் காரணமாகத்தான் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் இந்த பதிலுக்கு தற்போது பல்வேறு விமர்சனங்கள் எதிர்தரப்பில் இருந்து சமூக வலைத்தளங்களில் கிளம்பி இருக்கின்றது. அதில் குறிப்பாக கடைசி ஒரு வாரத்தில் மட்டும் முதலீட்டாளர்கள் வருவார்கள் என்றால் துபாய் எக்ஸ்போவில் தமிழ்நாடு அரங்கத்தை திறக்க வேண்டும் என்ற அவசியம் ஏன் தேவைப்படுகிறது.

காரணம் அதற்கு முன்னதாக நிறுவனர் யூசுப் அலியே ஏற்கனவே சந்தித்து பேசி இருக்கும் போது, இதற்கான முதலீட்டையும் நேரடியாக சென்று பெற்று இருக்கலாமே என்ற ஒரு விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் ஒரு வாரம் காலத்திற்கு மட்டும் தமிழ்நாடு அரங்கம் வைத்து இவ்வளவு பெரிய பிரம்மாண்டத்தை அரசு செலவில் நடத்த வேண்டுமா எனவும் கேள்வி எழுந்திருக்கின்றது.