24 special

வெளியான ஊராட்சி மன்ற தலைவி ஆடியோ...! அடுத்த சிக்கலா....?

mkstalin
mkstalin

லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளதால் தேர்தலை சந்திக்க உள்ள ஒவ்வொரு கட்சியும் தனது கூட்டணி பொருத்தும் தொகுதி பங்கீடு மற்றும் பிரச்சாரம் குறித்த ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. பல கட்சிகள் தங்கள் கூட்டணி குறித்த அறிவிப்பையும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு விட்டது. மேலும் மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள பாஜக மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியை பொறுப்பை ஏற்று பிரதமராக மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியை அமர வைக்க வேண்டும் என்ற நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதேபோன்று தமிழகமும் திமுக தன் தரப்பிலான எம்பிகளை அதிக அளவில் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்ற நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் தற்போது இருக்கும் தேர்தல் களம் திமுகவிற்கு எதிராகவும் மக்களின் அதிருப்திகளை பெற்ற கட்சியாகவும் திமுக விளங்குகிறது.


அதுமட்டுமின்றி தற்போது போதை பொருள் கடத்தல் விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.அதிலும் குறிப்பாக போதை கடத்தல் கும்பலின் தலைவனாக கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் திமுகவின் முன்னாள் நிர்வாகியாக இருந்துள்ளார் என்பதும் அவர் சினிமா திரைப்படங்களுக்கு  தயாரிப்பாளராக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் திமுகவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ரெட் ஜெயன்ட் நிறுவனமும் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் போதை கடத்தல் மூலம் பெறப்பட்ட பணத்தை சினிமாவில் முதலீடு செய்துள்ளதாகவும் இதில் பல அரசியல் தமிழர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களுக்கு தொடர்ந்து இருப்பதாகவும்  ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் அளித்தாக மத்திய போர் தடுப்பு பிரிவு அதிகாரி பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தது திமுக தரப்பை சற்று கலக்கமடைய வைத்துள்ளது.

இந்த விவகாரம் மட்டும் இன்றி இதற்கு முன்பாக பல பிரச்சனைகளை சந்தித்த திமுக தனது வாக்கு வங்கியை சற்று இழந்து வருவதாக பல கருத்துக்கணிப்பின் முடிவுகள் தெரிவித்தது. இப்படி தன்னை சுற்றிலும் பெரும் பிரச்சனைகளை சுமந்து கொண்டிருக்கும் திமுகவிற்கு கட்சியை பார்ப்பதற்கான நேரமே கிடைக்கவில்லை. இதனால் கட்சிக்குள்ளே பல தொண்டர்கள் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர் பல காலமாக உழைத்து வருபவர்களுக்கு இங்கு பலன் கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டையும் திமுகவின் சீனியர் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆதங்கத்தில் தெரிவிக்கும் வீடியோவும் இணையத்தில் வைரல் ஆனது. இப்படி ஆண் தொண்டர்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் மற்றும் அதிருப்திகள் திமுகவில் நிலவி வந்த நிலையில் தற்போது பெண்களுக்கும் மரியாதை வழங்கப்படுவதில்லை எனவும் உரிய பொறுப்பு மற்றும் அங்கீகாரம் கிடைக்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

அதாவது தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவி, ஆட்சியாளரிடம் தன்னை சாதி ரீதியாக அதிகாரிகள் புறக்கணிப்பதாக புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவி திருமலைச்செல்வி ஒப்பந்ததாரர் ஒருவரிடம் பணம் கேட்பது போன்ற ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதனை அடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட இந்த ஆடியோவிற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று திருமலைச்செல்வி கூறியுள்ளார், மேலும் மக்களுக்கு சேவையாற்றவே இங்கு வந்துள்ளேன் ஆனால் இங்கு இருப்பவர்கள் என்னை வேலை பார்க்க விடுவதில்லை நான் அதிக மன உளைச்சலோடு இருக்கிறேன் சாதியை காரணம் காட்டி என்னை தாழ்த்தி நடத்துகிறார்கள்,.

மரியாதையும் கொடுப்பதில்லை! அதனால் இது குறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் புகார் அளித்த காரணத்தினால் தற்போது மாப்பிங்க் செய்து இது போன்ற போலியான ஆடியோவை வெளியிட்டுள்ளனர்! நான் மேலும் அவர்கள் குறித்த எந்த புகாரையும் அளிக்கக்கூடாது என்பதற்காக இதுபோன்று போலியாக சமூக வலைதளத்தில் பரப்புகிறார்கள் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் ஊராட்சி ஒன்றிய தலைவி திருமலை செல்வி! ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் வரட்டும் அப்பொழுது தெரியும் எங்களது முக்கியத்துவம் என்று மக்களும் அரசு வேலை ஊழியர்களும் கொந்தளித்துள்ள நிலையில் தற்போது கட்சிக்குள்ளே மகளிர் ஒருவருக்கு இது போன்ற சம்பவம் நடத்திருப்பது திமுகவின் தோல்வியை குறிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.