24 special

3 வரியில் அறிக்கை வெளியிட்ட விஜய்.... அரசியலில் எதற்கு தடுமாற்றம்..?

Vijay, Stalin
Vijay, Stalin

நாடு முழுவதும் சி.ஏ.ஏ சட்டம் அமலுக்கு வந்தது தொடர்பான அறிவிப்பாணை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு. 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. 


நேற்று மாலை மத்திய அரசு நாடு முழுவத்தும் குடியுரிமை சட்டம் அமலுக்கு வரவுள்ளது என்று அறிவித்தது. 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தற்போது மக்களவை தேர்தலை முன்னிட்டு அவசர அவசரமாக மத்திய அரசு அமல்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் தொடர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

2014 டிசம்பருக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள்,. சமணர்கள், பொளத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிசெய்கிறது. எனினும், மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இஸ்லாமியர்களுக்கு இத்தகுதி தரப்படவில்லை. குடியுரிமை பெறுவதற்கு மதம் ஒரு காரணியாக முன்வைக்கப்படுவதால் இச்சட்டத்திற்கு எதிர்ப்பும் உள்ளது. இந்தியாவில் அகதிகளாக வசித்துவரும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.

அதேபோல், அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில்  வங்கதேசத்தில் இருந்து குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கவும் எதிர்ப்பு நிலவுகிறது. குடியுரிமை சட்டம் கொடுத்தால் வங்காளிகள் அதிகம் அதிகரிக்கும் என கூறுகின்றனர். இந்த குடியுரிமை சட்டம் நேற்று மத்திய அரசு இரவு முதல் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று அறிவித்ததால் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த மாதம் கட்சியை தொடங்கிய நடிகை விஜய் தனது முதல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும். என்று குறிப்பிட்டிருந்தார். ஒரு கண்டனம் தெரிவிப்பவர் குறைந்தது இரண்டு பக்கமாவது கருத்துக்களை தெரிவிப்பார்கள்.ஆனால், விஜய் என்னவோ மூன்றே வரியில் கண்டனம் தெரிவித்துள்ளார் இது பெரியதாக பேசப்படவில்லை.

ஒரு பக்கம் அறிகையில் கண்டனம் என்ற வார்த்தை  கூட பயன்படுத்தவில்லை. இந்த அறிக்கையில் எந்த அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்தது. யார் கொண்டு வந்தார்கள் என்பது கூட இல்லை எதற்கு இப்படியொரு கண்டன அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இந்த சட்டத்தை கொண்டுவந்தது மத்திய அரசு அந்த அறிக்கையில் மத்திய அரசின் வார்த்தை கூட இல்லை மாறாக இந்த சட்டத்தை நிறைவேற்ற கூடாது என்று மாநில அரசுக்கு விஜய் கோரிக்கை வைத்துள்ளது பேசு பொருளாக உள்ளது. 

ஏற்கனவே இந்த சட்டத்திற்கு எதிராக மாநில அரசு தனி தீர்மானம் கொடுவரப்படுள்ளது. அப்படியிருக்கையில் விஜய் மத்திய அரசை விட்டு விட்டு மாநிலங்கள் அரசை குறிப்பிட்டுள்ளது. விஜய் நடிகரை தாண்டி தற்பொழுது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார் அப்படியான நிலையில் விஜய் நாட்டு நடப்பு இன்னும் முழுமையாக தெரியாமல் அறிக்கை விடுவதை தவிர்த்து விட்டு தீர ஆராய்ந்து செயல்படுவது நன்றாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.