பல ஆண்டுகளாக அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடமாக இருந்து வந்த நிலத்தில் . இந்திய தொல்லியல் துறை 1978 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டு இந்து கோவில் மீதுதான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்றும் பாபர் மசூதி அமைக்கப்பட்டிருந்த இடத்தில் இந்து கோவில் அமைந்திருந்ததற்கான அடையாளங்கள் பெருமளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டது. இது குறித்த வீடியோக்கள் மற்றும் தகவல்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் ராமர் கோவிலின் திறப்பு விழாவை முன்னிட்டு வெளியானது. இதனை அடுத்து 2019 அயோத்தி ராமர் கோவிலின் பிரச்சனை முடிவடைந்து உச்ச நீதிமன்றம் இந்த சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்கு கோவில் கட்டலாம் என்று உத்தரவிட்டது. இதனை அடுத்து மத்திய அரசால் நிறுவப்பட்ட ஸ்ரீராமஜன்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையிடம் இந்த கோவில் கட்டும் பணிகளும் ஒப்படைக்கப்பட்டு பிரம்மாண்டமாக ராமர் கோவிலின் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 2.7 ஏக்கர் நிலப்பரப்பில் தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் மேற்கில் 350 அடியிலும் அகலம் 250 அடியிலும் உயரம் 161 அடியிலும் வட இந்திய முறைப்படி பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டிலிருந்து கோவில் அறக்கட்டளை சார்பாக நன்கொடைகள் வசூலிக்க ஆரம்பிக்கப்பட்டது அவ்வாறு வசூலிக்கப்பட்ட நன்கொடை மொத்தமுமே 4000 கோடிக்கு அதிகமாக கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் ஏறத்தாழ முடிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேக நாளும் குறிக்கப்பட்டது. இந்த நாளை ஒட்டுமொத்த ராம பக்தர்களும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தனர் அதனை அடுத்து கும்பாபிஷேக விழாவும் பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் இருக்கும் ராம பக்தர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டு நடந்து முடிந்தது இந்த நிலையில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இந்த தினத்தில் தான் நடைபெறும் என்பதை 700 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புத்தகத்தின் குறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரகுவீர பத்தி என்கின்ற சமஸ்கிருத பாடல் வழியாக தேசிகர் என்பவர் எழுதிய ஒரு நூல் ஒன்று உள்ளது. அந்த நூலில் தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 திறக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பு தேசிகர் தான் எழுதிய நூலில், சோமவாரத்தில் அதாவது திங்கட்கிழமை அன்று மிருகசீரிஷ நட்சத்திரத்தின் அதிபதி தினத்தில் மகர மாதம் விக்கிரம் வருடம் 2080 தை மாதம் 8 கலி வருடம் 5124 சாலி வாகன சக வருடம் 1945, கொல்லம் வருடங்கள் முடிந்து 1198 என பலவகையில் தற்போதைய 2024 ஜனவரி 22 ல் கோவில் கட்டப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.பண்டைக் காலத்தில் கணிதத்தின் வடிவில் குறிப்பிடப்படும் தகவல்களில் இந்த தகவலும் ஒன்றாகவும் இதனை உயர் கணிதத்தில் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது எப்படி கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தி ராமர் கோவில் கட்டு முடிக்கப்படும் என்று பண்டைய எழுத்தாளால் கணிக்கப்பட்டு நூலில் குறிப்பிட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது. மேலும் அன்று 200 ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிடப்பட்ட தேதியில் சரியாக இராமர் கோவில் அயோத்தியில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது என்று இந்த வீடியோவை பலர் பகிர்ந்து வருகின்றனர்.